பாராமதி

ஆள்கூறுகள்: 18°09′N 74°35′E / 18.15°N 74.58°E / 18.15; 74.58
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாராமதி
बारामती
பீம்தாடி
நகரம்
பாராமதி is located in மகாராட்டிரம்
பாராமதி
பாராமதி
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் பாராமதி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°09′N 74°35′E / 18.15°N 74.58°E / 18.15; 74.58
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே
ஏற்றம்538 m (1,765 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்54,415
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்413102
தொலைபேசி குறியீடு02112
வாகனப் பதிவுMH-42
இணையதளம்baramatimunicipalcouncil.in

பாராமதி (Baramati) (மராத்தி:बारामती) ஒலிப்பு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் மகாத்மா காந்தி கொலையில் தொடர்புடைய நாத்தூராம் கோட்சே, கோபால் கோட்சே மற்றும் முன்னாள் மகாராட்டிரா மாநில முதலமைச்சர் சரத் பவாரின் சொந்த ஊர் ஆகும். இந்நகரம் 18°09′N 74°35′E / 18.15°N 74.58°E / 18.15; 74.58 பாகையில்[1], கடல் மட்டத்திலிருந்து 538 மீட்டர் (1765 அடி) உயரத்தில் உள்ளது.[2]

பொருளாதாரம்[தொகு]

பாராமதி நகரத்தில் நெசவுத் தொழிற்சாலைகள், பால்பண்ணைத் தொழில்கள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், இரும்பாலைகள் மற்றும் பன்னாட்டு தொழில் நிறுவ்னங்கள் உள்ளது.[3]

பாராமதி நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு, திராட்சை, சோளம், பருத்தி அதிகம் பயிரிடப்படுகிறது. இங்கு பாயும் நீரா ஆறு மற்றும் கர்கா ஆறுகள் வேளாண்மைக்கு நீர் ஆதாராமாக உள்ளது. இந்நகரத்திற்கு அருகில் சோமேஸ்வர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மாலேகான் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் சத்திரபதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளது. மேலும் இந்நகரத்தில் திராட்ச்சைப் பழங்களிலிருந்து ஒயின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளது. மேலும் பியாஜியோ எனும் இத்தாலி நிறுவனம் இவ்வூரில் வெஸ்பா எனும் இருசக்கர மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது. பாராமதி நகரத்திற்கு வெளிப்புறத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவில் 800 ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்பேட்டை நிறுவியுள்ளது. இகு ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 25 வார்டுகள் கொண்ட பாராமதி நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 54,415 ஆகும். அதில் ஆண்கள் 27,643 மற்றும் 26,772 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆக 5684 (10.45%) உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.32% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 76.88%, இசுலாமியர் 13.26%, பௌத்தர்கள் 3.21%, சமணர்கள் 5.16%, கிறித்தவர்கள் 1.18% மற்றும் பிறர் 0.31% ஆகவுள்ளனர். இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.[4]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், பாராமதி (1981–2010, extremes 1954–1993)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.8
(94.6)
38.4
(101.1)
41.0
(105.8)
43.6
(110.5)
43.8
(110.8)
42.4
(108.3)
36.7
(98.1)
38.6
(101.5)
39.0
(102.2)
39.8
(103.6)
36.8
(98.2)
34.6
(94.3)
43.8
(110.8)
உயர் சராசரி °C (°F) 30.0
(86)
32.6
(90.7)
35.9
(96.6)
38.6
(101.5)
38.8
(101.8)
32.8
(91)
30.0
(86)
29.2
(84.6)
30.7
(87.3)
31.7
(89.1)
30.1
(86.2)
28.6
(83.5)
32.4
(90.3)
தாழ் சராசரி °C (°F) 13.5
(56.3)
14.6
(58.3)
18.5
(65.3)
21.7
(71.1)
23.3
(73.9)
23.0
(73.4)
22.1
(71.8)
21.7
(71.1)
21.2
(70.2)
19.9
(67.8)
16.3
(61.3)
13.0
(55.4)
19.1
(66.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) 5.4
(41.7)
6.3
(43.3)
9.6
(49.3)
13.3
(55.9)
15.8
(60.4)
15.8
(60.4)
14.0
(57.2)
17.7
(63.9)
16.8
(62.2)
12.7
(54.9)
8.8
(47.8)
5.0
(41)
5.0
(41)
மழைப்பொழிவுmm (inches) 0.6
(0.024)
1.2
(0.047)
2.3
(0.091)
3.5
(0.138)
19.5
(0.768)
88.8
(3.496)
69.3
(2.728)
46.2
(1.819)
168.9
(6.65)
103.4
(4.071)
13.8
(0.543)
13.5
(0.531)
531.0
(20.906)
ஈரப்பதம் 31 21 18 17 24 52 62 63 59 44 38 38 39
சராசரி மழை நாட்கள் 0.1 0.2 0.4 0.4 1.9 5.5 5.2 3.7 8.2 4.2 0.9 0.7 31.4
ஆதாரம்: India Meteorological Department[5][6]

போக்குவரத்து[தொகு]

வேளாண்மை அறிவியல் மையம், பாராமதி

பாராமதி நகரம் மாவட்டத் தலைமையிடமான புனே பெருநகரத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பாராமதி தொடருந்து நிலையத்திலிருந்து புனே மற்றும் தௌந்து நகரங்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 பயணியர் வண்டிகள் மட்டும் இயக்கப்படுகிறது.[7]

படக்காட்சிகள்[தொகு]

கல்வி[தொகு]

  • அரசு மருத்துவக் கல்லூரி, பாரமதி

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Baramati
  2. "Archived copy". Archived from the original on 17 August 2018. பார்க்கப்பட்ட நாள் 17 August 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Archived copy". Archived from the original on 17 August 2018. பார்க்கப்பட்ட நாள் 17 August 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. Baramati Population Census 2011
  5. "Station: Baramati Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 97–98. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  6. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M138. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  7. Baramathi Railway Station
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராமதி&oldid=3718367" இலிருந்து மீள்விக்கப்பட்டது