பாயிலின் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெப்பநிலையும் திணிவும் மாறாதிருக்கும் போது அழுத்தத்திற்கும் கனவளவிற்கும் இடையிலான தொடர்பினைக் காட்டும் இயங்குபடம்.

பாயி்லின் விதி (Boyle's law) என்பது கன அளவின் மீதான அழுத்தத்துக்கு உட்படும் போது வாயுக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை விளக்கும் விதி ஆகும். இவ்விதியின்படி மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தமும் அதன் கன அளவும் எதிர் விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. இதனை 1662 ஆம் ஆண்டில் ராபர்ட் பாயில் என்னும் விஞ்ஞானி கண்டுபிடித்தார். இதனைக் கணித முறையில்,

  P  ∞  1/V, ( மாறாத வெப்பநிலையில் ) அல்லது
  PV =  k, (ஓர் மாறிலி)

வெப்பநிலை T ஆகவும், வாயுவின் கன அளவு V1 ஆகவும் உள்ளபோது அழுத்தம் P1 ஆக இருக்கும். அதே வெப்பநிலையில் வாயுவின் கன் அளவு V2 ஆகவும் அதன் அழுத்தம் P2 ஆகவும் இருந்தால் இவ்விதியின்படி

  P1V1 =P2v2 = மாறிலி என்று எழுதலாம்.

ஓர் மூடிய நெகிழ்வான பாத்திரத்தில் வெப்பநிலையை மாற்றாமல் ஒர் குறிப்பிட்ட அளவு ( மாறாத திணிவு) வாயு அடைத்து கனவளவை குறைக்கும் போது குறிப்பிட்ட அளவு வாயு நெருங்கும் இதனால் அமுக்கம் அதிகரிக்கும் அதே போல் கனவளவை அதிகரிக்கும் போது அமுக்கம் குறையும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயிலின்_விதி&oldid=3329853" இலிருந்து மீள்விக்கப்பட்டது