பாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டு
பாண்டு தன் மனைவி குந்தியுடன்
தேவநாகரிपाण्‍डु
சமசுகிருதம்Pāṇḍu
வகைஹஸ்தினாபுர ராஜா
இடம்ஹஸ்தினாபுரம்
துணைகுந்தி, மாதுரி

பாண்டு மகாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களின் தந்தையார் ஆவார். குந்தி இவருடைய முதல் மனைவியாவார். இவர் விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிறந்தவர். வேதவியாசருடன் அம்பாலிகா கூடிய போது முனிவரது தோற்றங்கண்டு வெளிறிப் போனமையால் பாண்டுவும் வெளிறிய தோற்றத்திற் பிறந்தார். பாண்டுவிற்கு இரு மனைவியர். முதல் மனைவி குந்திதேவி. இரண்டாவது மனைவியின் பெயர் மாதுரி.பாண்டு மன்னன் வேட்டையாடுவதில் விருப்பம் உடையவன்.[1] ஒரு முறை வேட்டைக்குச் செல்லும் போது இணை மான்களில் ஒரு மானைக் கொன்று விடுகிறான்.[2]

மானாக மாறிய கின்டனாவின் மீது பாண்டு அம்பு எய்கிறார்.
இளவரசர் பாண்டு, வாயங் உருவத்தில்

பாண்டுவின் வனவாசம்[தொகு]

பாண்டு தன் இரண்டு மனைவியருடனும்,ஐந்து மகன்களுடனும்,ஏராளமான முனிவர்களுடனும் வனத்தில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான்.பாண்டு இளமையானவன்,தனது மனைவியரின் நெருக்கத்தை இழந்தவன்.

தன் மரணம் குறித்து பாண்டு அறிந்ததால் தன் மகன்களிடம் "நான் வனத்தில் பிரம்மசர்யமும்,தியானமும் அனுசரித்து வந்ததில் எனக்கு நிறைய ஞானம் கிடைத்துள்ளது,என் உடலில் சேர்ந்துள்ளது.நான் இறந்ததும் என் சதையை உண்ணுங்கள், உங்களுக்கு அதிக ஞானம் கிடைக்கும்,அதுதான் உங்களுக்குக் கிடைக்கும் உண்மையான சொத்து" என ரகசியத்தை வெளியிட்டான்.[சான்று தேவை]

பாண்டுவின் மரணம்[தொகு]

ஒரு நாள் மாதுரி உடுத்தி இருந்த ஆடை வழியே சூரிய ஒளி வருவதைக் கண்டான் அவளைத் தொடுவதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை, எவ்வளவு அழகானவள் என்று வியந்து அவளைத் தொட்டான்,அவ்வளவுதான் கிண்டமா முனிவரின் சாபப்படி மரணமடைந்தான்.தன் இரு குழந்தைகளையும்,குந்தியிடம் ஒப்படைத்துவிட்டு மாதுரி உடன்கட்டை ஏறினாள்.[3]

சகாதேவனுக்கு கிடைத்த ஞானம்[தொகு]

பாண்டு இறந்ததும் அவனது உடல் எரிக்கப்பட்டது,தந்தை சொன்னதை மகன்கள் செய்ய முடியவில்லை,ஆனால் சகாதேவன் தந்தையின் ஒரு துண்டு சதையை எறும்புகள் இழுத்துக்கொண்டுப் போவதைப் பார்த்தான்,அதை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.உடனே அவனுக்கு உலகின் எல்லா விசயங்களும்,முன்னால் என்ன நடந்தது,பின்னர் என்ன நடக்கப் போகிறது என்பது எல்லாம் தெரிந்தது.இதை குந்தியிடமும்,தனது சகோதரர்களிடமும் சொல்ல ஓடினான்,அப்போது ஒருவன் "உனக்கு கடவுளின் நட்பு வேண்டுமா? உனக்குத் தெரிந்ததை யாரிடமும் சொல்லாதே"என தடுத்து விட்டான்,அவன் கிருட்டிணன்.[3]

சான்றாவணம்[தொகு]

  1. Menon, [translated by] Ramesh (2006). The Mahabharata : a modern rendering. New York: iUniverse, Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780595401871. https://archive.org/details/mahabharatamoder0000unse. 
  2. Ramankutty, P.V. (1999). Curse as a motif in the Mahābhārata (1. ed. ). Delhi: Nag Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170814320. 
  3. 3.0 3.1 Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டு&oldid=3601564" இலிருந்து மீள்விக்கப்பட்டது