பன்னாட்டு ஜூனியர் சேம்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு ஜூனியர் சேம்பர்
உருவாக்கம்திசம்பர் 11, 1944 (1944-12-11)
நிறுவனர்ஹென்றி ஜிசின்பையிர்
வகைஎன்.ஜி.ஓ
நோக்கம்சமூகப் பொறுப்புள்ள இளைஞர்கள்
தலைமையகம்
ஆள்கூறுகள்38°39′48″N 90°34′28″W / 38.663263°N 90.574379°W / 38.663263; -90.574379
மூலம்மெக்சிகோ
சேவைப் பகுதி
உலகம்முழுவதும்
முறைசமூக சேவை
தலைவர்
இஸ்மயில் ஹசன்டர் (2015)
செக்ரட்டரி ஜெனரல்
டென்னிஸ் லகசோன் குன்னன்
முழக்கம்Be Better
வலைத்தளம்www.jci.cc

பன்னாட்டு ஜூனியர் சேம்பர் (Junior Chamber International) சுருக்கமாக ஜே.சி.ஐ. என அழைக்கப்படும் அமைப்பு இலாப நோக்கற்ற பன்னாட்டு தன்னார்வ தொண்டு அமைப்பாகும்.[1] .இதில் 18 வயது முதல் 40 வயதுவரையிலான இளைஞர்கள் மட்டும் உறுப்பனராக இருக்கலாம்..[2]இவவமைப்பில் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதை ஒருங்கிணைக்க பன்னாட்டலவிலும்,தேசிய அளவிலும் அமைப்புகள் உள்ளன. இது 1944இல் மெக்சிகோவில் துவக்கப்பட்டது. இவ்வமைப்பு இளைஞர்களை பொதுச்சேவையில் ஈடுபடுவதையும், அவர்கள் நல்ல குடிமக்களாக இருப்பதையும் ஊக்குவிக்கம்விதமாக செயல்படுகிறது.[1] இது ஜே.சி.ஐ. ஓர்ல்டு என்ற பெயரில் ஆறு மொழிகளில் அரையாண்டு இதழை வெளியிடுகிறது.[1] இவவமைப்பின் பன்னாட்டு ஆண்டுக்கூட்டமும், வட்டார ஆண்டுக்கூட்டமும், ஒவ்வோராண்டும் நவம்பர் மாதத்தில் நடக்கிறது.[3]

இந்தியவில்[தொகு]

இவ்வமைப்பு இந்தியாவில் 1949ஆம் ஆண்டு கல்கத்தாவில் துவக்கப்பட்டது. பின்னர் நாட்டின் பல இடங்களில் துவக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகளுடன் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Jaycees International", in Edward Lawson, Mary Lou Bertucci (1996). Encyclopedia of human rights, second edition. Washington, DC: Taylor & Francis. ISBN 9781560323624. p. 911.
  2. "Welcome to JCI - Young Active Citizens Creating Positive Change". Junior Chamber International. Archived from the original on 2010-08-21. பார்க்கப்பட்ட நாள் 2010-08-15.
  3. John Clark (1995). A Legacy of Leadership: The U.S. Junior Chamber of Commerce. பக். 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0964545608.