பனிப்பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனிப்பூண்டு
Drosera tokaiensis
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Droseraceae
பேரினம்: துரோசீரா
L.
இனங்கள்

See separate list.

பனிப்பூண்டு அல்லது துரோசீரா (Sun dew) எனப்படுவது துரொசீரேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியுண்ணும் தாவரமாகும். துரோசீரா பேரினத்தில் ஏறக்குறைய 194 இனங்கள் காணப்படுகின்றன.[1]

தாவர இலைகளில் இருந்து நார் போன்ற அமைப்புகள் மேல் நோக்கி வளரும். இத்தாவரங்களின் உச்சியிலுள்ள சுரப்பிகளால் சுரக்கப்படும் சுரப்புகள் பனித்துளி போல பிரகாசிக்கும். இச்சுரப்பு மணம்,நிறம் என்பன அற்றதாக பூவின் அமுதம் போல காட்சியளிக்கும்.இதனால் கவரப்படும் பூச்சிகள் இச்சுரப்பில் ஒட்டிக்கொள்ளும். இச்சுரப்பிலுள்ள சமிபாட்டு நொதியங்கள் இறந்த பூச்சியை சமிபாடடையச் செய்யும்.

அந்தாட்டிக்கா தவிர்ந்த எல்லா நாடுகளிலும் அமிலத்தன்மையுள்ள நீர்ப்பாங்கான சூழலில் பனிப்பூண்டுத் தாவரம் காணப்படும்.[2]

இயல்புகள்[தொகு]

Drosera zonaria இன் நிலங்கீழ் கிழங்கு வளர ஆயத்தமாக

பனிப்பூண்டு ஒரு பல்லாண்டுத் தாவரம். மிக அரிதாக ஆண்டுத் தாவரங்களும் காணப்படும். இனங்களுக்கு ஏற்ப அதன் நிலத்திலிருந்தான 1 சதம மீட்டருக்கும் (0.4 அங்குலம்) 1 மீட்டருக்கும் (39 அங்குலம்) இடைப்பட்டதாக இருக்கும். ஏறிகளின் படரும் கொடி 3 மீட்டர் வரை இருக்கும் (10 அடி) எ.கா:Drosera erythrogyne.[3] பனிப்பூண்டுகள் 50 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியது.[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. McPherson, S.R. 2010. Carnivorous Plants and their Habitats. 2 volumes. Redfern Natural History Productions Ltd., Poole.
  2. McPherson, S.R. 2008. Glistening Carnivores. Redfern Natural History Productions Ltd., Poole.
  3. Mann, Phill (2001). The world's largest Drosera பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம்; Carnivorous Plant Newsletter, Vol 30, #3: pg 79.
  4. Barthlott et al., Karnivoren, p. 102
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிப்பூண்டு&oldid=3589476" இலிருந்து மீள்விக்கப்பட்டது