பத்மினி பிரியதர்சினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மினி பிரியதர்சினி சகோதரி படத்தில்

பத்மினி பிரியதர்சினி (Padmini Priyadarshini) என அழைக்கப்பட்ட பத்மினி இராமச்சந்திரன் (Padmmini Ramachandran, செப்டம்பர் 8, 1944 - சனவரி 17, 2016) ஒரு தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞரும், திரைப்படத் துணை நடிகையும் ஆவார்.[1] 1950களின் பிற்பகுதியில் சில தமிழ், கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பத்மினி பிரியதர்சினி கேரள மாநிலத்தில் மாவேலிக்கரா என்ற ஊரில் பிறந்தவர். சென்னையில் வளர்ந்தவர். பின்னர் பெங்களூரில் நடனப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து, சிறந்த பல நடனக் கலைஞர்களை உருவாக்கினார். தனது நடனப் பள்ளி மாணவரக்ளுடன் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அகாதமி விருது பெற்ற லைஃப் ஒஃப் பை (2012) திரைப்படத்தில் நட்டுவனாராக நடித்தார்.[2][3]

குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்கள்[தொகு]

நடனக் கலைஞராகத் தனது பணியை ஆரம்பித்த பத்மினி, பல தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். சகோதரி படத்தில் ஆனந்தக்கோனாரின் (ஜே. பி. சந்திரபாபு) முறைப்பெண்ணாகவும், பாலாஜியை மயக்குபவராகவும் பால்காரி வேடத்தில் நடித்தார்.[4]

பாத காணிக்கை படத்தில் சந்திரபாபுவின் ஜோடியாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.[5]

நடித்த (சில) திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

  1. நெஞ்சம் மறப்பதில்லை [6]
  2. பாத காணிக்கை
  3. சகோதரி
  4. தேனிலவு
  5. பாக்தாத் திருடன்
  6. பெற்ற மனம்
  7. தெய்வபலம்
  8. இரத்தினபுரி இளவரசி
  9. இருவர் உள்ளம்
  10. மகாலட்சுமி
  11. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
  12. விடிவெள்ளி[7]
  13. அன்னையின் ஆணை (நடனம்)
  14. இரு சகோதரிகள் (நடனம்)
  15. பக்த மார்க்கண்டேயா (நடனம்)

கன்னடம்[தொகு]

  1. பெத்தட கல்லா[8]
  2. பக்த மார்க்கண்டேய[8]
  3. ராயர சோஸ்[8]
  4. ஜெகஜோதி பஸ்வேஸ்வரா[8]

இந்தி[தொகு]

  1. தில் ஹி தோ ஹை[9]
  2. தோ பெஹெனென் (1959)[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Padmini Ramachandran - Profile, அணுக்கம்: 04-04-2017
  2. Life of Pi dance teacher Padmini passes away, Bangalore Mirror, 17-01-1976, அணுக்கம்: 04-04-2017
  3. From 'Ratnapuri Ilavarasi' to 'Life of Pi': The Last Of the Classical Padminis, The News Minute, அணுக்கம்: 4-04-2017
  4. "Blast from the past - Sahodari (1959) - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-06. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  5. "Paatha Kaanikkai 1962 - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-06.
  6. "Nenjam Marapathillai 1963 - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-06.
  7. ராண்டார் கை (24-08-2013). "Blast from the Past  - Vidivelli (1960)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2013-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130910173833/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/vidivelli-1960/article5055579.ece. 
  8. 8.0 8.1 8.2 8.3 Padmini Priyadarshini: Filmography
  9. Dil Hi To Hai (1963) Full Cast & Crew
  10. Do Behnen (1959) Full Cast & Crew
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மினி_பிரியதர்சினி&oldid=3412470" இலிருந்து மீள்விக்கப்பட்டது