பண்டைய அண்மை கிழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைய அண்மை கிழக்கு (ancient Near East), பண்டைய நாகரீகங்களின் தாய் வீடுகளில் ஒன்றாகும். பண்டைய அன்மைக் கிழக்குப் பகுதி, பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஈராக், தென்கிழக்கு துருக்கி, தென்மேற்கு ஈரான் மற்றும் வடகிழக்கு சிரியா பகுதிகளைக் கொண்டது.[1] அனதோலியா, பண்டைய எகிப்திய நாகரீகம், பண்டைய ஈரானிய, ஈலாம், மீடியா,[2] மற்றும் லெவண்ட் (தற்கால சிரியா), லெபனான், பாலஸ்தீனம், இசுரேல், ஜோர்டான் மற்றும் சைப்பிரசு நாகரீகங்கள், பண்டைய அன்மைக் கிழக்கில் கிமு 2600 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நாகரீகங்கள் ஆகும்.

வெண்கலக் காலத்தில் கிமு 4,000ம் ஆண்டில் சுமேரியா நாகரீகத்தின் தோற்றத்திற்குப் பின் பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதிகளில் நாகரீகங்கள் பரவத் துவங்கியது.

அண்மைக் கிழக்குப் பகுதி உலக நாகரீகங்களின் தொட்டில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[3] இப்பகுதிகளில் முதன்முதலாக வேளாண்மை செய்யப்பட்டது. புதிதாக நகரங்கள் நிறுவப்பட்டது. மேலும் நிறுவனப்படுத்தப்பட்ட நகர இராச்சியங்கள், பேரரசுகள், சமயங்கள், எழுத்து முறைகள், போர் ஆயுதங்கள், போர் முறைகள், சமூக நீதிச் சட்டங்கள், அறிவியல், வானவியல், சோதிடம், கணக்கு, வண்டிச் சக்கரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாகரீக காலத்தில் அண்மைக் கிழக்கில் பெரிய அளவில் பேரரசுகள் தோன்றியது.

பண்டைய அண்மைக் கிழக்கின் வரைபடம்

அண்மைக் கிழக்கின் காலக்கணிப்புகள்[தொகு]

செப்புக் காலம் செப்புக் காலம்
(கிமு 4500 - 3300)
முந்தைய செப்புக் காலம் கிமு 4500 - 4000 உபைதுகள் காலம், மெசொப்பொத்தேமியா
பிந்தை செப்புக் காலம் கிமு 4000 - 3300 மெசொப்பொத்தேமியா உரூக் காலம், மெசொப்பொத்தேமியா: ஜெர்செக், பண்டைய எகிப்து, ஆதி எலாமைட்டு
வெண்கலக் காலம்
(கிமு 3300 - 1200)
ஆரம்ப வெண்கலக் காலம்
(கிமு 3300 - 2000)
முதலாம் வெண்கலக் காலம் கிமு 3300 - 3000 பண்டைய எகிப்தின் துவக்க வம்ச காலம் மற்றும் பீனிசியர்கள் குடியிருப்புகள் வரை
இரண்டாம் ஆரம்ப வெண்கலக் காலம் கிமு 3000 - 2700 மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம்
மூன்றாம் ஆரம்ப வெண்கலக் காலம் கிமு 2700 - 2200 பழைய எகிப்து இராச்சியம், அக்காடியப் பேரரசு, பண்டைய அசிரியா, ஈலாம்#பழைய எலாமைட்டு காலம், அக்காடிய அரசுகள்
நான்காம் வெண்கலக் காலம் கிமு 2200 - 2100 எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்
மத்திய வெண்கலக் காலம்
(கிமு 2000 - 1550)
முதலாம் மத்திய வெண்கலக் காலம் கிமு 2100 - 2000 மூன்றாவது ஊர் வம்சம், மெசொப்பொத்தேமியா
இரண்டாம் (`ஏ`) மத்திய வெண்கலக் காலம் கிமு 2000 - 1750 மினோவான் நாகரீகம், துவக்க கால பாபிலோனிய, எகிப்தின் மத்தியகால இராச்சியம்
இரண்டாம் (`பி`) மத்திய வெண்கலக் காலம் கிமு 1750 - 1650 எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்
இரண்டாம் (`சி`) மத்திய வெண்கலக் காலம் கிமு 1650 - 1550 இட்டைட்டுகளின் பழைய இராச்சியம்
பிந்தைய வெண்கலக் காலம்
(கிமு 1550 - 1200 )
முதலாம் பிந்தைய வெண்கலக் காலம் கிமு 1550 - 1400 இட்டைட்டுகளின் மத்திய கால இராச்சியம், ஹையசா-அஸ்ஸி, ஈலாம், மத்தியகால ஈலமைட்டுகள் காலம், புது எகிப்து இராச்சியம்
பிந்தைய வெண்கலக் காலம் II A கிமு 1400 - 1300 இட்டைட்டுகளின் புதிய இராச்சியம், மித்தானி இராச்சியம், அயசா-அஸ்ஸி, உகரித்து, மைசினீயன் கிரேக்கம்
பிந்தைய வெண்கலக் காலம் II B கிமு 1300 - 1200 மத்திய அசிரியப் பேரரசு, பீனிசியர்களின் நாகரீகத்தின் உச்ச நிலை துவக்கம்
இரும்புக் காலம்
(கிமு 1200 - 539)
முதலாம் இரும்புக் காலம்
(கிமு 1200 - 1000)
முதலாம் இரும்புக் காலம் I A கிமு 1200 - 1150 எழாம் டிராய், வெண்கலக் காலம் உருக்குலைதல், கடலோடிகள்
இரும்புக் காலம் I B கிமு 1150 - 1000 புது இட்டைட்டு அரசுகள், எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம், ஈலாம்#புது ஈலாமைட்டுக் காலம்#அரமேனிய அரசுகள்
இரும்புக் காலம் II
(கிமு 1000 - 539)
இரும்புக் காலம் II A கிமு 1000 - 900 இருண்ட கிரேக்க காலங்கள், ஐக்கிய இசுரேல் இராச்சியம்
இரும்புக் காலம் II B கிமு 900 - 700 சமேரியாவின் இஸ்ரேல் இராச்சியம், அரராத்து இராச்சியம், புது அசிரியப் பேரரசு, யூத அரசு, கிரேக்க

கார்தேஜ்ஜியர்களின் முதல் குடியிருப்புகள

இரும்புக் காலம் II கிமு 700 - 539 பிந்தைய கால எகிப்திய இராச்சியம், புது பாபிலோனியப் பேரரசு, மீடியாப் பேரரசு, புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சி, பிலிஸ்தியர்கள் எழுச்சி, அகாமனிசியப் பேரரசின் எழுச்சி,
பாரம்பரியக் காலம்
(கிமு 539 - கிபி 634 )
அகாமனிசியப் பேரரசு கிமு 539 – கிமு 330 பாரசீக அகாமனிசியப் பேரரசு
கிமு 330 - கிமு 31 மாசிடோனியப பேரரசு, ஹெலனிய காலம், தாலமி பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, பெர்காமோன் இராச்சியம்
ரோம-பாரசீகப் போர்கள் கிமு 92 – கிபி 629 கிபி உரோமைப் பேரரசு, சசானியப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு

வரலாறு[தொகு]

செப்புக் காலம்[தொகு]

துவக்க கால மெசபடோமியா[தொகு]

பண்டைய அன்மைக் கிழக்கில், வரலாற்றிற்கு முந்திய செப்புக் காலத்தின் சுமேரியர்களின் மெசொப்பொத்தேமியா, துவக்க கால வெண்கலக் காலம் (c. கிமு 4000 - கிமு 3100) வரை நீடித்தது. பின்னர் உபைத்துகளின் காலம் துவங்கியது.[4][5] சுமேரியர்களின் பிற்காலத்தில், கிமு 34 - 32 நூற்றாண்டுகளில், துவக்க கால வெண்கலக் காலத்தில், ஆப்பெழுத்துகளில் எழுதத் துவங்கினர.

வெண்கலக் காலம்[தொகு]

துவக்க கால வெண்கலக் காலம்[தொகு]

சுமேரியா மற்றும் அக்காடியப் பேரரசு[தொகு]

உலகின் முதல் நாகரீகங்களில் ஒன்றான சுமேரியர்களின் நாகரீகம், கீழ் மெசொப்பொத்தேமியாவில் தோன் றியது. கிமு 6-வது ஆயிரமாண்டில் பிற்பகுதியில், எரிது பகுதியில் தோன்றிய உபைத்துகளின் காலத்தில், சுமேரியர்களின் அரசு வீழ்ச்சியுற்றது. கிமு மூவாரயிரம் ஆண்டு வரை இருந்த உபைதுகள் காலம், கிமு மூவாயிரத்தின் பிற்பகுதியில் எழுச்சி கொண்ட அசிரியர்களாலும் மற்றும் கிமு இரண்டாயிரத்தின் முற்பகுதியில் எழுச்சி கொண்ட பாபிலோனியர்களாலும் வீழ்ச்சியடைந்தது.

உலகின் முதல் பேரரசாக அக்காடியப் பேரரசு, கிமு 24 முதல் கிமு 21 வரை செழித்தோங்கியது. இதன் முக்கிய நகரங்கள் பாபிலோன், லார்சா, எப்லா, டமாஸ்கஸ், அசூர் மற்றும் ஈலாம் முக்கிய நகரஙகள் ஆகும்.

அமோரிட்டுகள்[தொகு]

கிமு 3000 ஆயிரத்தின் நடுவில், செமிடிக் மொழி பேசும் நாடோடி அமோரிட்டு மக்கள், அரேபிய தீபகற்பத்திலிருந்து, யூப்பிரடீஸ் ஆற்றின் மேற்கு கரையில் குடியேறத் துவங்கினர்.[6] பின்னர் மெசபதோமியாவின் பாபிலோனில் குடியேறினர்.

நடு வெண்கலக் காலம்[தொகு]

பிந்தைய வெண்கலக் காலம்[தொகு]

வெண்கல காலத்தின் வீழ்ச்சி[தொகு]

இரும்புக் காலம்[தொகு]

சமயங்கள்[தொகு]

பண்டைய அன்மைக் கிழக்கில் ஓரிறைக் கோட்பாடு கொண்ட யூத சமயமும், காளை மாடு போன்ற பல தெய்வ உருவ வழிபாடுகளும் இருந்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Daily Life In Ancient Mesopotamia". பார்க்கப்பட்ட நாள் 28 February 2015.
  2. "Armenian Highland". பார்க்கப்பட்ட நாள் 28 February 2015.
  3. Samuel Noah Kramer, History Begins at Sumer, (tr. Mendelson, F. A., Moscow, 1963).
  4. Sumer and the Sumerians, by Harriet E. W. Crawford, p 69
  5. Sumer and the Sumerians, by Harriet E. W. Crawford, p 75
  6. Amorite[தொடர்பிழந்த இணைப்பு] Encyclopædia Britannica

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_அண்மை_கிழக்கு&oldid=3905120" இலிருந்து மீள்விக்கப்பட்டது