பங்கஜவல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கஜவல்லி
இயக்கம்எஸ். சௌந்தரராஜன், ஜித்தன் பானர்ஜி
தயாரிப்புஎஸ். சௌந்தரராஜன்
கதைஎஸ். சௌந்தரராஜன்
மூலக்கதைகேரள நாட்டுக்கதை மலையாள பங்கஜவல்லி
திரைக்கதைஎஸ். சௌந்தரராஜன்
இசைபாபநாசம் சிவன்
நடிப்புபு. உ. சின்னப்பா
டி. ஆர். ராஜகுமாரி
குமாரி ருக்மணி
கலையகம்தமிழ்நாடு டாக்கீசு
விநியோகம்தமிழ்நாடு டாக்கீசு
வெளியீடு1947
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பங்கஜவல்லி 1947 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். சௌந்தரராஜன் ஐயங்கார், ஜித்தன் பானர்ஜி ஆகியோரின் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில்[2] பாபநாசம் சிவன் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். பு. உ. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி, குமாரி ருக்மணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதன் திரைக்கதை ஆண்களை அடிமைகளாகத் தனது நாட்டில் வைத்திருந்த அல்லி இராணியின் கதையைக் கருவாகக் கொண்டது.[3] இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.[4][5]

திரைக்கதை[தொகு]

பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனன் (பி. யு. சின்னப்பா) அழகி பங்கஜவல்லியை (டி. ஆர். ராஜகுமாரி) அடைய நினைக்கிறான். ஆனாலும், பங்கஜவல்லி அர்ச்சுனனை சிறைப் பிடிக்கிறாள். அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் (குமாரி ருக்மணி) முறையிடுகிறான். அர்ச்சுனனை கிருஷ்ணன் பெண்ணாக மாற்றுகிறான். திரைக்கதையின் இறுதியில் உண்மைகள் வெளிவர, கதையும் மகிழ்ச்சியுடன் முடிவடைகிறது.[3]

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர் எழுதியவர்
நீ இல்லாமல் அணுவும் அசையுமோ பு. உ. சின்னப்பா பாபநாசம் சிவன்
ஆருயிர்க்கெல்லாம் அமுதம் பொழிந்திடும் வெண்ணிலாவே[6] பு. உ. சின்னப்பா

மேற்கோள்கள்[தொகு]

  1. "1947 வருசத்திய வெளியீடுகள்". பேசும் படம்: பக்: 118. சனவரி 1948. 
  2. Dhananjayan 2016, ப. 99.
  3. 3.0 3.1 ராண்டார் கை (2013-07-27). "Blast from the Past - Pankajavalli 1947". "தி இந்து". பார்க்கப்பட்ட நாள் 2016-01-24.
  4. "pankajavalli". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2016-01-24.
  5. "pankajavalli movie". gomolo. Archived from the original on 2016-02-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-25.
  6. TAMIL (G)OLD--Aaruyirkellaam amutham polinthidum(vMv)--PANKAJAVALLI-1947, 18 December 2015, பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2016 – via YouTube
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கஜவல்லி&oldid=3723772" இலிருந்து மீள்விக்கப்பட்டது