நான் ஏன் நாத்திகன் ஆனேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான் ஏன் நாத்திகன் ஆனேன் 2007 நூல் முகப்பு
நூல் பெயர்:நான் ஏன் நாத்திகன் ஆனேன் 2007 நூல் முகப்பு
ஆசிரியர்(கள்):பகத் சிங்
தமிழ்: ப. ஜீவானந்தம்
வகை:கட்டுரை
துறை:மெய்யியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:28
பதிப்பகர்:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிமிடெட்
பதிப்பு:முதல் பதிப்பு : பெப்ரவரி 2005, திசம்பர் 2007

நான் ஏன் நாத்திகன் ஆனேன்? (Why i am an atheist) என்பது இந்திய புரட்சியாளர் பகத் சிங்கினால் லாகூர் சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தைக்கு காவற்கூட அதிகாரிகளின் அனுமதியுடன் 1931 இல் எழுதியக் கடிதமாகும். அக்கடிதத்தை பகத் சிங்கின் தந்தை லாகூரிலிருந்து வெளிவரும் ஜனங்கள் என்னும் ஆங்கில தினப் பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தார். பின்பு நூல் வடிவில் வெளியானது. பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி இக்கட்டுரையை எழுதினார்.

வரலாறு[தொகு]

பகத்சிங் பி.கே. தத்துடன் நாடாளுமன்றத்தில் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு| யாரும் இல்லாமல் இருக்கைகள் காலியாக இருந்த பகுதியில் குண்டு வீசியதற்காக 1930-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் நாள் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர். மார்ச் 23-ம் தேதி சக புரட்சியாளர்கள் ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோருடன் பகத்சிங்கும் தூக்கில் தொங்கினார்.

சிறையில் தலைமை வார்டர் சர்தார்சிங் பகத்சிங்கிடம் தருவதற்கு ஒரு புத்தகத்துடன் வந்தார். அவர் ஒரு மத நம்பிக்கையுள்ள சீக்கியர். எனவே அவர் சீக்கியர்களின் புனித நூலான "குத்கா" வைக் கொடுத்து "இந்தக் கடைசி நேரத்திலாவது இதைப் படித்துக் கடவுளை நினைத்துக்கொள்" என்று கூறினார். அதற்கு பகத்சிங் பணிவாக அவரைத் தந்தைபோல் தான் பாவிப்பதாகவும், ஆனால் தனது வாழ்நாளில் கடவுளைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றும் கூறினார். மேலும் இந்தக் கடைசி தருணத்தில் அதைச் செய்தால் பகத்சிங்கிடம் பலவீனம் வந்துவிட்டது என்று மக்கள் தவறாகக் கருதுவார்கள் என்று கூறினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பாபா ரந்தீர்சிங் லாகூர் மத்திய சிறையில் 1930-31 இல் பகத்சிங் இடம் கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தக் கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் தோல்வியடைந்தார். அவர் பொறுமையிழந்து இகழ்ச்சியாக, "தலைக்கிறுக்குப் பிடித்து அகம்பாவத்துடன் கடவுளுக்கும் உனக்குமிடையே ஒரு கறுப்புத் திரையைத் தொங்கவிட்டிருக்கிறாய்," என்று பகத்சிங்கிடம் கூறினார்.[1][2] அவருக்குப் பதில்கூறும் விதத்தில் பகத்சிங் எழுதிய கட்டுரையே "நான் ஏன் நாத்திகன் ஆனேன்".

தமிழில்[தொகு]

சென்னை மாகாண நாத்திக சங்க அமைச்சராக இருந்த ப. ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தபோது இதனை புத்தக வடிவில் மொழிபெயர்த்தார். அது சுயமரியாதை இயக்கப் பிரசுரமாக வெளிவந்தது. ஈ. வெ. இராமசாமியின் குடியரசு பதிப்பகம் இதனை வெளியிட்டது. இந்நூல் தடை செய்யப்பட்டு வெளியிட்டதற்காக ஜீவானந்தமும் ஈ. வெ. இராமசாமி நாயக்கரும் 1934ல் கைது செய்யப்பட்டனர். இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

எஸ். ஏ. பெருமாள் அண்மையில் மொழிபெயர்த்து பாவை பப்ளிகேசன்ஸ் வெளியிட்ட "பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள்" என்னும் தொகுதியின் சிறுபகுதி தேவை கருதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிமிடெட் (NCBH) ஆல் வெளியிடப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shiv Verma, Bhagat Singh’s close associate and founder-member of the Hindustan Socialist Republican Association, provides the following annotation on Baba Randhir Singh’s remark: “Baba Randhir Singh… was a God-fearing religious man. It pained him to learn that Bhagat Singh was a non-believer. He somehow managed to see Bhagat Singh in the condemned cell and tried to convince him about the existence of God, but failed. Baba lost his temper and said tauntingly: ‘You are giddy with fame and have developed an ego which is standing like a black curtain between you and the God’.” Why I am an atheist, Frontline Magazine Oct. 20-Nov. 02, 2007
  2. Bhagat Singh; Bhupendra Hooja (2007). The Jail Notebook and Other Writings. LeftWord Books. பக். 166–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87496-72-4. http://books.google.com/books?id=OAq4N60oopEC&pg=PA166. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_ஏன்_நாத்திகன்_ஆனேன்&oldid=3622451" இலிருந்து மீள்விக்கப்பட்டது