தொலைக்காட்சி ஆவணப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலைக்காட்சி ஆவணப்படம் (Television documentary) என்பது தொலைக்காட்சி ஊடக ஆவணத் தயாரிப்புகளில் ஒன்றாகும். இந்த தொலைக்காட்சி ஆவணப்படங்கள் தொடராகவோ அல்லது தொலைக்காட்சி ஆவணப்படமாகவோ தயாரிக்கப்படுகின்றது. இந்த ஆவணப்படம் 1940 களில் முக்கியத்துவம் பெற்றது.[1]

  • தொலைக்காட்சி ஆவணப்படத் தொடர்கள் என்பது சிலநேரங்களில் ஒரு ஆவணப்படங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அத்தியாயங்களின் வரிசைப்படுத்தப்பட்டு ஒளிபரப்படுகின்றது.
  • தொலைக்காட்சி ஆவணப்படங்கள் என்பது ஒரு ஆவணப்பட அலைவரிசையில் அல்லது செய்தி தொடர்பான அலைவரிசை வழியாக ஒளிபரப்பப்பட வேண்டிய ஒரு ஒற்றை ஆவணப்படமாக உள்ளன.

ஆரம்பகால தொலைக்காட்சி ஆவணப்படங்களில் பொதுவாக வாரலாறு, போர்க்காலம் அல்லது நிகழ்வு தொடர்பான விஷயங்களை பற்றியே இடம்பெற்றிருந்தன. தற்கால தொலைக்காட்சி ஆவணப்படங்கள் விளையாட்டு, பயணம் மற்றும் வனவிலங்கு பற்றியே சித்தரிக்கப்பட்டுள்ளன. பல தொலைக்காட்சி ஆவணப்படங்கள் கலாச்சாரம், சமூக மற்றும் அரசியல் கவலைகளைச் சுற்றியுள்ள சர்ச்சையையும் விவாதத்தையும் பற்றியே உருவாக் கப்படுகின்றன.

அமெரிக்க நாட்டுத் தொலைக்காட்சி ஆவணப்படத்தின் தோற்றம் போர்க்கால நினைவுகளை சித்தரிக்கும் விதமாக 1949 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chapman, James (2015). A New History of British Documentary. New York, NY 10010: Palgrave MacMillan. 
  2. Von Schilling, Jim (2002). The Magic Window American Television ,1939-1953. Routledge. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலைக்காட்சி_ஆவணப்படம்&oldid=3057880" இலிருந்து மீள்விக்கப்பட்டது