திருமலை தேவ ராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசயநகரப் பேரரசு
சங்கம மரபு
அரிகர ராயன் I 1336-1356
புக்க ராயன் 1356-1377
அரிகர ராயன் II 1377-1404
விருபாட்ச ராயன் 1404-1405
புக்க ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபாட்ச ராயன் II 1465-1485
பிரவுட ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கர் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ணதேவராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கன் I 1572-1586
வேங்கடன் II 1586-1614
ஸ்ரீரங்கன் II 1614-1614
ராம தேவ ராயன் 1617-1632
வேங்கடன் III 1632-1642
ஸ்ரீரங்கன் III 1642-1646

அரவிடு மரபில் இருந்து முதன் முதலில் விஜயநகரத்து அரசனாக முடிசூட்டிக் பட்டவர் திருமலை தேவ ராயன் ஆவார்.[1] இவர் அலிய ராம ராயனின் தம்பி ஆவார். இவர்கள் தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள் .[2] [3] [4]  அரவிடு மரபினர் ஆந்திரா மாநிலம் பெனுகொண்டா என்ற ஊரைத் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர். [5][6] .

விஜயநகரப் பேரரசின் ஆட்சியை இளவயது அரசன் சதாசிவ ராயன் சார்பில் கவனித்து வந்த அலிய ராம ராயன் தலிக்கோட்டாப் போரில் இறந்தபோது, திருமலை தேவ ராயன், பேரரசின் செல்வங்களையும் எடுத்துக்கொண்டு அரசனான சதாசிவ ராயனுடன் தற்கால ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெனுகொண்டாவுக்குத் தப்பி ஓடினார். அங்கிருந்தபடியே விஜயநகர அரசை மீளமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். தலிக்கோட்டாப் போரினால் விஜயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, பேரரசின் கீழிருந்த மதுரை மற்றும் செஞ்சி நாயக்கர்கள் தனிவழி செல்லத் தொடங்கினர். வேறு சிலர் திருமலை தேவ ராயனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1567 ஆம் ஆண்டில் பீஜப்பூர் சுல்தானின் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. எனினும் இம்முறை சுல்தான் தோல்வியைத் தழுவினார். பேரரசின் நிலையைப் புரிந்துகொண்ட திருமலை தேவ ராயன், தென்பகுதி நாயக்கர்களின் புதிய நிலையை ஏற்றுக் கொண்டார். அவர்களும், திருமலையைப் பேரரசராக ஏற்றுக்கொண்டு ஓரளவு திறை கொடுக்கவும் சம்மதித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.41
  2. Aryan Books Internationa, Sākkoṭṭai Krishṇaswāmi Aiyaṅgār (2000) (in en). Vijayanagara: History and Legacy. பக். 186. https://books.google.co.in/books?id=VLFuAAAAMAAJ&dq=Aravidu+Dynasty+belongs+Telugu&focus=searchwithinvolume&q=Chikkadevaraya+dynasty+family+ramaraya++Aravidu. 
  3. MH, Karnatak Historical Research Society (1992) (in en). THE Karnatak Historical Review. பக். 2. https://books.google.co.in/books?id=wz5uAAAAMAAJ&dq=Aravidu+family+telugu&focus=searchwithinvolume&q=Aravidu+family+rulers+++authors+emperors++++belonged+++earliest. 
  4. National Book Trust, India, Robert Sewell, Domingos Paes, Fernão Nunes, Vasundhara Filliozat (1999) (in en). Vijayanagar: As Seen by Domingos Paes and Fernao Nuniz. பக். 51. https://books.google.co.in/books?id=IS1uAAAAMAAJ&dq=Aliya+Ramaraya+belonged+to+the+family+of+Aravidu+in+Andhra&focus=searchwithinvolume&q=+Aravidu+belonged+++family++Andhra+himself+predomination. 
  5. Britannica Educational Publishing, Kenneth Pletche (2010) (in en). The History of India. பக். 147. https://books.google.co.in/books?id=VsujRFvaHI8C&pg=PA147&dq=Aravidu+dynasty,+which+established+a+new+capital+at+Penukonda&hl=en&sa=X&ved=0ahUKEwjK_OiI7v7iAhVYdCsKHZBaD6oQ6AEIJjAA#v=onepage&q=Aravidu%20dynasty%2C%20which%20established%20a%20new%20capital%20at%20Penukonda&f=false. 
  6. CM, Claude Markovits (2002) (in en). A History of Modern India, 1480-1950. பக். 147. https://books.google.co.in/books?id=3d9UDwAAQBAJ&pg=PT738&dq=Dynasty+:+Aravidu+Dynasty+Founder+:+Tirumala+Capital+:+Penukonda&hl=en&sa=X&ved=0ahUKEwjXh4OA8P7iAhUZVH0KHYhKA9QQ6AEIJjAA#v=onepage&q=Dynasty%20%3A%20Aravidu%20Dynasty%20Founder%20%3A%20Tirumala%20Capital%20%3A%20Penukonda&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலை_தேவ_ராயன்&oldid=3737259" இலிருந்து மீள்விக்கப்பட்டது