திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமங்கை ஆழ்வார்
திருமங்கை ஆழ்வார் (இடது) அவரது மனைவி குமுதவல்லியுடன்

திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் சோழநாட்டுத் திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரிலுள்ள ஆறு திவ்ய தேசங்களையும் இவ்வூரைச் சுற்றி அருகருகே, ஒன்று அல்லது ஒன்றரை மைல் தூரங்களில் உள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து வழங்கப்படும் பெயராகும்.[1]

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக் கோயில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் கருடசேவை திருவிழாவுக்கு இந்த 11 கோயில்களின் உற்சவர் சிலைகளும் எடுத்துவரப்படும். இந்த 11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் பாசுரத்தால் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்வார்கள். அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் பாசுரத்தால் மங்களாசாசனம் செய்வார். இந்தக் கருட சேவையை காண்பதற்கு இந்தியாவெங்கிலும் உள்ள பக்தர்கள் கூடுவர்.

பதினோரு திருப்பதிகள்[தொகு]

திருநாங்கூருக்குள்ளேயே இருக்கும் கோயில்கள்:

  1. திருக்காவளம்பாடி
  2. திருஅரிமேய விண்ணகரம்
  3. திருவண்புருடோத்தமம்
  4. திருச்செம்பொன் செய்கோயில்
  5. திருமணிமாடக் கோயில்
  6. திருவைகுந்த விண்ணகரம்

திருநாங்கூருக்கு வெளியே இருக்கும் கோயில்கள்:

  1. திருத்தேவனார்த் தொகை
  2. திருத்தெற்றியம்பலம்
  3. திருமணிக்கூடம்
  4. திருவெள்ளக்குளம்
  5. திருப்பார்த்தன் பள்ளி

ஆண்டுதோறும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. திருநாங்கூர் சுற்றி உள்ள வயல் வெளிகளில் கருடசேவைக்கு (முதல்நாள் நள்ளிரவில்) காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று இரிய அந்த சத்தத்தைக் கேட்ட உடன் திருமங்கையாழ்வார் பிரவேசித்துவிட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும், திருமங்கையாழ்வாரால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் மிகுந்த நெல் விளையும் என்பதும் இப்பகுதியில் நிலவும் நம்பிக்கையாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 

வெளி இணைப்புகள்[தொகு]