திராசு மெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராசு மெட்டல் (Thrash metal) என்பது ஒரு மேற்கத்திய இசை வகை ஆகும். இது கனமாழை இசை வகையின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இவ்விசை துரித மாழை இசை வகையில் இருந்து வந்ததாக இருக்கலாம். இது 1980ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது.

சிறப்பியல்புகள்[தொகு]

இவ்வகை இசையில் கீழ் சுதியில் இசைக்கப்படும் கிதார் உருக்களும் பெருமுரசின் அடித்தொனி அடிப்புகளும் மேல் சுதியில் இசைக்கப்படும் கிதார் தனியிசைப்புகளும் துரித தாளகதியில் இடையீடின்றி வாசிக்கப்படுகின்றன; இவற்றுடன் தீவிர தொனியுடைய குரல் கொண்டு பாடுவதும் இவ்விசையின் தனித்துவங்களாகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=திராசு_மெட்டல்&oldid=2949396" இலிருந்து மீள்விக்கப்பட்டது