தி போஸ்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி போஸ்ட்
The Post
இயக்கம்ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
தயாரிப்பு
  • ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
  • கிறிஸ்டி மேக்சோ க்ரீகர்
  • ஆமி பாஸ்கல்
கதை
  • லிஸ் ஹன்னா
  • ஜோஷ் சிங்கர்
இசைஜான் வில்லியம்ஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுஜானஸ் கமன்ஸ்ஸ்கி
படத்தொகுப்பு
  • மைக்கேல் கான்
  • சாரா ப்ரோஷர்
கலையகம்
  • டிரீம்வொர்க்ஸ் பிக்சர்ஸ்[1][2]
  • அம்ப்லின் பார்ட்னர்ஸ்[3]
  • அம்ப்லின் எண்டர்டெயின்மெண்ட்[3]
  • 20ஆம் சென்சுரி பாக்ஸ்[3]
  • பார்டிசிபெண்ட் மீடியா[4]
  • பாஸ்கல் பிக்சர்ஸ்[3]
  • ஸ்டார் ட்ரொவெர் எண்டர்டெயின்மெண்ட்[3]
விநியோகம்
  • 20ஆம் சென்சுரி பாக்ஸ்
    (ஐக்கிய அமெரிக்கா)[3]
  • யூனிவர்சல் பிக்சர்ஸ்
    (பன்னாட்டளவில்)
வெளியீடுதிசம்பர் 14, 2017 (2017-12-14)(Newseum)
திசம்பர் 22, 2017 (United States)
ஓட்டம்116 நிமிடங்கள்[5]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$50 மில்லியன்[6]
மொத்த வருவாய்$33.9 மில்லியன்[7]

தி போஸ்ட் (The Post) என்பது 2017 ஆண்டு வெளியான அமெரிக்க அரசியல் விறுவிறுப்புப் படமாகும் [8][9] லிஸ் ஹன்னா மற்றும் ஜோஷ் சிங்கர் ஆகியோரால் எழுதப்பட்டு, தயாரித்து இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் ஆவார். இந்த படத்தின் நட்சத்திரங்களான மெரில் ஸ்ட்ரீப் கேதரின் கிராகாமாகவும், டொம் ஹாங்க்ஸ் பென் பிராட்லீயாகவும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாரா பால்சன், பாப் ஓடென்ரிக், ட்ரேசி லெட்ஸ், பிராட்லி வைட்ஃபோர்ட், புரூஸ் கிரீன்வுட், கேரி கூன், மற்றும் மேத்யூ ரைஸ் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். 1970களின் துவக்கத்தில் 30 ஆண்டுகள் நடந்த வியட்நாம் போர் குறித்து தி வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழு, அமெரிக்கா – வியட்நாம் நாடுகளின் உறவு தொடர்பான சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அடுத்தடுத்து செய்திகளை வெளியிடுவதற்கான முயற்சிகள் அதனால் ஏற்படும் சிக்கல்கள் என அப்போது உண்மையாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்திற்கான துவக்க ஒளிப்படங்கள் 2017 மே மாதம் நியூயாரக் நகரில் எடுக்கப்பட்டன. திரைப்படமானது 2017 திசம்பர் 14 அன்று வாஷிங்டன், டி.சி. யில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவில் 2017 திசம்பர் 22, அன்று குறைவான பகுதிகளில் வெளியிடப்பட்டது. பின்னர் அது 2018 சனவரி 12 அன்று பரந்த அளவில் வெளியிடப்பட்டு, உலகளவில் $ 33 மில்லியன் வசூலைப் பெற்றது.

கதை[தொகு]

அமெரிக்க அரசின் ராணுவ ஆய்வாளர் டேனியல் எல்ஸ்பெர்க் என்பவர் வியட்நாம் போர் தொடர்பான ரகசிய ஆவணங்களை தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்குவதிலிருந்து தொடங்குகிறது படம். பின்னர் அந்த ரகசிய ஆவணங்களை தி போஸ்ட் பத்திரிகையாளரால் கைப்பற்றப்படுகிறது. பிறகு அந்த ஆவணங்களை ஆராய்ந்து, அந்தச் செய்திகளை வெளியிடலாமா வேண்டாமா என்று கேத்தரின் கிரஹாமுக்கும் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் பென் பிராட்லீக்கும் வாக்குவாதம் நடக்கிறது. இதழை லாபகரமாகவும், தரமாகவும் நடத்த வேண்டும். அதே நேரம், அரசையும் கோபித்துக்கொள்ளக்கூடாது என்று இரண்டு நிலைகளில் தவிக்கிறார் கேத்தரின் கிரஹாம்.

ரகசிய ஆவணங்கள் தொடர்பான செய்தியுடன் தி நியூயார்க் டைம்ஸ் வெளியான அதே நாளில், தி வாஷிங்டன் போஸ்ட் இதழில், அமெரிக்க அதிபர் நிக்ஸனின், முதல் மகள் ட்ரிஸியா நிக்ஸனின் திருமணச் செய்தி வெளியாகிறது. வியட்நாம் போர் தொடர்பான மிகப் பெரிய செய்தியை விட்டுவிட்டு, அதிபர் மகளின் திருமணம் என்ற சாதாரணச் செய்தியை வெளியிட்டதால், அந்தத் தாளை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தனது ஆசிரியர் குழுவினருடன் நாம் என்ன வேலை செய்கிறோம்? இனி என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை நடத்துகிறார் பென் பிராட்லீ.

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு ரகசிய ஆவணங்களை வழங்கிய அதே நபரிடமிருந்து தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் ஆவணங்களை வாங்கிறது. இதனால் பத்திரிகைகள் நீதிமன்ற வழக்கைச் சந்திக்கிறன. இறுதியில், ‘ஜனநாயகம் காக்கப்பட, பத்திரிகைச் சுதந்திரம் காக்கப்பட வேண்டும்’ என்று கூறி, உச்ச நீதிமன்றம் பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ‘வெள்ளை மாளிகைக்குள் ‘தி போஸ்ட்’ பத்திரிகையின் நிருபர்கள் யாரும் வரக் கூடாது’ என்று அதிபர் நிக்ஸன் உத்தரவிடுகிறார்.

நிக்ஸன் அவ்வாறு உத்தரவிடும் அதே நேரம், அரசு அலுவலகங்கள் உள்ள ‘வாட்டர்கேட்’ எனும் கட்டிடத்தில், கதவு ஒன்று உடைக்கப்பட்டிருப்பதைக் காட்டுவதோடு படம் முடிகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Peterson, Karen (June 6, 2017). "Steven Spielberg's Pentagon Papers Film, 'The Papers' Announces Official Cast". AwardsCircuit.com. Archived from the original on ஜனவரி 21, 2018. பார்க்கப்பட்ட நாள் November 18, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. D'Alessandro, Anthony; Tartaglione, Nancy (November 15, 2017). "Warner Bros. Wins 'Paddington 2' Bidding War". Deadline.com. http://deadline.com/2017/11/warner-bros-paddington-2-bidding-war-1202208868/. பார்த்த நாள்: November 18, 2017. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Film releases". Variety Insight. பார்க்கப்பட்ட நாள் சூன் 11, 2017.
  4. McNary, Dave (November 1, 2017). "Participant Media Hires Girl Rising Co-Founder Holly Gordon". Variety. https://variety.com/2017/film/news/participant-media-holly-gordon-girl-rising-1202604787/. பார்த்த நாள்: November 10, 2017. 
  5. "The Post". British Board of Film Classification. Archived from the original on பிப்ரவரி 21, 2018. பார்க்கப்பட்ட நாள் December 15, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Galloway, Stephen (December 5, 2017). "'The Post': How Spielberg Beat a Tight Deadline to Make a Timely Newspaper Drama". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து February 22, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180222064304/https://www.hollywoodreporter.com/news/post-how-spielberg-beat-a-tight-deadline-make-a-timely-newspaper-drama-1064283. 
  7. "The Post (2017)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் சனவரி 17, 2018.
  8. Travers, Peter (December 4, 2017). "10 Best Movies of 2017". Rolling Stone. Archived from the original on ஜனவரி 14, 2018. பார்க்கப்பட்ட நாள் January 13, 2018. {{cite magazine}}: Check date values in: |archive-date= (help)
  9. Damigella, Rick (சனவரி 2, 2017). "Political thriller gets Oscar buzz". CNN. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_போஸ்ட்_(திரைப்படம்)&oldid=3759565" இலிருந்து மீள்விக்கப்பட்டது