தச்சூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தச்சூர்
Thachur
கிராமம்
நான்கு சாலைகள் இணையும் இடம்
நான்கு சாலைகள் இணையும் இடம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விழுப்புரம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,765
மொழி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு606 202
தொலைபேசி குறியீட்டு எண்04151
வாகனப் பதிவுதநா-32

தச்சூர் (Thachur) இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இதனை தச்சூர், தச்சனூர் அல்லது தரசூர்  எனவும் அழைக்கப்படுகிறது.  இதன் அருகில் சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலில் பல சிற்பங்கள் இருக்கின்றன. இவர்கள் அளித்துள்ள கடவுள் சிலைகள் அருகில் உள்ள இடங்களிலும் உள்ளன. எனவே இவ்வூர் "தச்சன் ஊர் " ( சிற்பங்கள் உள்ள இடம்) என்று அழைக்கப்படுகிறது.

மக்கள் தொகை [தொகு]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] இக்கிராமத்தில் 3675 பேர் வசிக்கின்றனர். மக்கள் தொகையில் ஆண்களும், பெண்களும் 50% சமமாக உள்ளனர். இக்கிராமத்தின் சராசரி கல்வியறிவு 54%, தேசிய சராசரி கல்வியறிவு 39.5% விட அதிகமாகும், இங்கு ஆண் கல்வியறிவு 51% மற்றும் பெண் கல்வியறிவு 49% ஆகும். இக்கிராமத்தின், மக்கள் தொகையில் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 11% ஆகும்.

அருகில் உள்ள கிராமங்கள்[தொகு]

லட்சியம், போர்பட குறிச்சி, விளம்பர், மலை கொட்டலம், எறவர், இந்திலி, பங்காரம், சிருவத்தூர், குடிகாடு, வினைதீர்த்தபுரம், தென்கீரனூர், அகரகொட்டலம், நீலமங்கலம், சோமந்தர்குடி போன்றவை ஆகும்.

காலநிலை[தொகு]

வெப்பநிலை மிதமான உள்ளது; அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக இருப்பது 37°C மற்றும் 20°C ஆகும். இந்நகரம் கோடைகாலத்தில் தென்மேற்கு பருவமழையும், குளிர்காலத்தில் வடகிழக்கு பருவமழையும் இங்கு மழை தருகிறது. அதன் சராசரி ஆண்டு மழையளவு 1070.மி.மீ ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

விவசாயம் இந்த கிராமத்தின் முதுகெலும்பாக உள்ளது. இவ்விவசாய மக்கள் பல்வேறு மாவட்டம் சென்று வாழ்ந்து வருகின்றனர். பால் இக்கிராமத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்குகிறது. மேலும் கரும்பு சாகுபடி அதிகமாக இந்த பகுதியில் உள்ளது. கள்ளகுறிச்சி "சர்க்கரை நகரம்" என அழைக்கப்படுகிறது.[சான்று தேவை] இரண்டு முக்கிய சர்க்கரை தொழிற்சாலைகள் இங்கே உள்ளன. ஒன்று கோமுகி (கச்சிராப்பாளையம் வழி), மற்றொன்று மூங்கில்துறைப்பட்டு.

பள்ளிகள் [தொகு]

  • அரசு நடுநிலைப் பள்ளி
  • ஒசேளிஸ் சர்வதேச பள்ளி
  • அரசு தொடக்கப் பள்ளி
  • பாரதியார் சர்வதேச பள்ளி

கல்லூரிகள் [தொகு]

  • பாரதி கல்லூரி, தச்சூர்.
  • நவீன ஐ. டி. ஐ,  தச்சூர்.
  • சண்முகா கலை கல்லூரி, இந்திலி.
  • லட்சுமி கலை கல்லூரி, பங்காரம்.
  • ஜெயின் பொறியியல் கல்லூரி, எறவர்.
  • முருகன் பாலிடெக்னிக் கல்லூரி, இந்திலி,

தொழிற்சாலைகள் [தொகு]

  • சூர்யா எக்ஸ்ட்ரக்சன், தச்சூர்.
  • மூலிகை பாரடைஸ், தச்சூர்.
  • JTV மல்டிடேக், தச்சூர்.
  • கற்பகாம்பாள் அரிசி ஆலை, தச்சூர்.
  • ஆண்டவர் அரிசி ஆலை, தச்சூர்.

கோயில்கள் [தொகு]

  • அமிர்த கண்டீஸ்வரர் ஆலயம் சிவன் கோயில், தச்சூர்.
  • பெரியாயி கோவில், தச்சூர்.
  • அம்மன் கோயில், தச்சூர் கைகாட்டி.
  • வீர பயங்கரம்கோவில்
  • சிவன் கோவில், உலகிய நல்லூர்
  • பாஞ்சாலியம்மன் கோவில்
  • மதுரை வீரன் கோவில்

தேவாலயங்கள் [தொகு]

  • செயின்ட் அந்தோனியார் ஆலயம், தச்சூர்.
  • பாப்டிஸ்ட் சர்ச், போர்படகுறிச்சி.
  • செயின்ட் ஜோசப் தேவாலயம், உலகன்கத்தான்.
  • ஜெபமாலை அன்னை ஆலயம், கள்ளகுறிச்சி.

குறிப்புகள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தச்சூர்&oldid=2549795" இலிருந்து மீள்விக்கப்பட்டது