த டெம்பெஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The shipwreck in Act I

1610-11ல் எழுதப்பட்டதாக நம்பப்படும் வில்லியம் ஷேக்ஸ்பியரின், த டெம்பெஸ்ட் (The Tempest) ஒரு நாடகம் ஆகும், ஷேக்ஸ்பியர் தனியாக எழுதிய கடைசி நாடகமாக பல விமர்சகர்களால் கருதப்படுகிறது .இக்கதை ஒரு தொலைதூரத் தீவில் அமைந்துள்ளது.

மிலன் தேசத்தின் அரசர் பிராஸ்பரோ. இவருக்கு புத்தகம் படிப்பதில்தான் மிகுந்த ஆர்வம். அதனால்,நாட்டின் ஆட்சி பொறுப்பை தன் சகோதரன் ஆண்டானியோவை கவனிக்க சொல்லிவிட்டு,நுாலகத்துக்கு சென்று புத்தங்களுக்குள் மூழ்கிக் கிடந்தார்.ஆண்டோனியோவுக்கு மிலன் தேசத்தின் அரசனாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.அதனால்,நேபிள்ஸ் நாட்டு அரசன் அலன்ஸோவோடு கூட்டு சேர்ந்து, பிராஸ்பரோவை நாடு கடத்துகிறான்.ஒருநாள் இரவு ஆண்டோனியோவின் ஆட்கள் பிராஸ்பரோவையும், அவரது மகள் மிராண்டாவையும், ஒரு பழுதான படகில் ஏற்றி கொந்தளிப்பு மிகுந்த கடல் பகுதியில் விடுகின்றனர். அந்த படகு புயலில் சிக்கி, மனித நடமாட்டம் இல்லாத ஒரு தீவில் கரை ஒதுங்குகிறது. அங்கு பல சோதனைகள், திருப்பங்களுக்கு பின், இறுதியில் பிராஸ்பரோ மீண்டும் மிலன் நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்வது தான் கதை.

ஓவியம்[தொகு]

புரொசுப்பெரோவும் மிராண்டாவும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_டெம்பெஸ்ட்&oldid=3502964" இலிருந்து மீள்விக்கப்பட்டது