த டார்க் நைட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Dark Knight
த டார்க் நைட்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்புbalaji
சார்ல்ஸ் ரோவென்
எம்மா தாமஸ்
கதைதிரைக்கதை:
கிறிஸ்டோபர் நோலன்
ஜோனதன் நோலன்
கதை:
டேவிட் எஸ். கோயர்
கிறிஸ்டோபர் நோலன்
பாத்திரங்கள்:
பாப் கேன்
பில் ஃபிங்கர்
ஜெரி ராபின்சன்
இசைஹான்ஸ் சிம்மர்
ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட்
நடிப்புகிரிஸ்டியன் பேல்
மைக்கேல் கேன்
ஹீத் லெட்ஜர்
ஏரன் எக்ஹார்ட்
கேரி ஓல்ட்மன்
மாகி ஜிலன்ஹால்
மார்கன் ஃபிரீமன்
ஒளிப்பதிவுவாலி ஃபிஸ்டர்
படத்தொகுப்புலீ ஸ்மித்
விநியோகம்வார்னர் பிரதர்ஸ்
வெளியீடுஆஸ்திரேலியா:
ஜூலை 16 2008
வட அமெரிக்கா:
ஜூலை 18 2008
இங்கிலாந்து:
ஜூலை 24 2008
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம் அமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$180 மில்லியன்[1]
மொத்த வருவாய்அமெரிக்க உள்நாட்டு:
$342,684,300[2]
வெளிநாட்டு:
$128,300,000[3]
பல நாடுகளிலும்:
$470,984,300
முன்னர்பேட்மேன் பிகின்ஸ்

த டார்க் நைட் (The Dark Knight) 2008இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலனால் எழுதி தயாரித்து இயக்கப்பட்டது. பிரபல வரைபட நாயகன் பாட்மானின் திரைப்படத் தழுவலாகும். 2005இல் வெளிவந்த பேட்மேன் பிகின்ஸ்சின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக த டார்க் நைட் ரைசஸ் திரைப்படம் 2012 சூலை மாதம் வெளிவந்தது.

சூலை 16 2008 இல் இத்திரைப்படம் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

  • கிரிஸ்டியன் பேல்: பாட்மான்/புரூஸ் வெய்ன், கோடீஸ்வரர், கதையின் நாயகர். காத்தம் (Gotham) நகரின் குற்றவாளிகளுக்கு எதிராக சண்டை போடுகிறார். காத்தம் மக்களுக்கு பாட்மானும் புரூஸ் வெய்னும் ஒன்று என்று தெரியாது. இத்திரைப்படத்தின் முன்வந்த பேட்மேன் பிகின்ஸ் திரைப்படத்திலும் கிரிஸ்டியன் பேல் பாட்மான் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • ஹீத் லெட்ஜர்: ஜோக்கர், குற்றவாளி, திரைப்படத்தின் முக்கிய கெட்டவன். முகத்தில் கோமாளி வேடம் போட்டு காத்தம் நகரில் குற்றங்கள் செய்கிறார்.
  • ஏரன் எக்ஹார்ட்: ஹார்வி டென்ட்/டூ-பேஸ், மாவட்ட வழக்கறிஞர் (District Attorney). காத்தமின் குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுகிறார்.
  • மார்கன் ஃபிரீமன்: லூசியஸ் பாக்ஸ், புரூஸ் வெய்னின் "வெய்ன் எண்டர்பிரைஸஸ்" நிறுவனத்தின் தொழிலதிபர். பாட்மான் பயன்படுகிற பாட்மொபீல் (Batmobile) வண்டி, ஆயுதங்கள், கருவிகளை தயார்செய்கிறார்.
  • மேகி ஜிலன்ஹால்: ரேச்சல் டாஸ், துணை மாவட்ட வழக்கறிஞர். இளமையில் புரூஸ் வெய்னின் தோழி. பேட்மேன் பிகின்ஸ் திரைப்படத்தில் கேட்டி ஹோம்ஸ் இந்த பாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • கேரி ஓல்ட்மன்: ஜேம்ஸ் கோர்டன், காவல்துறை ஆணையர். காத்தம் நகரில் ஊழல் செய்யாத காவல்துறையினர்களில் ஒன்றாவார்.
  • மைக்கேல் கேன்: ஆல்ஃபிரெட், புரூஸ் வெய்னின் பரிசாரகர்.

வெளியீடும் வசூலும்[தொகு]

சூலை 18, 2008 இத்திரைப்படம் அமெரிக்காவில் வெளிவந்தது; சூலை 24 ஐக்கிய இராச்சியத்தில் வெளிவந்தது. முதலாம் நாளில் $ 67.85 மில்லியன் வசூல் பெற்று ஸ்பைடர் மேன் திரைப்படமால் பெற்ற ஒரு நாளில் அதிக வசூல் சாதனையை தாண்டியுள்ளது. வரலாற்றில் மிக விரைவாக $300 மில்லியன் வசூல் பெற்ற திரைப்படம் இதுவே ஆகும்.

விமர்சனங்கள்[தொகு]

திரைப்பட நிபுணர்களும் இத்திரைப்படத்தை பாராட்டுகின்றனர்; 246 விமர்சனங்களில் 94% இத்திரைப்படத்தை பாராட்டியுள்ளனர் என்று ராட்டன் டோமேட்டோஸ் இணையத்தளம் கூறியுள்ளது. இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின் பயனர்களால் வாக்கு செய்து வரலாற்றில் முதலாம் மிகச்சிறந்த திரைப்படம் என்று சில நாளாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. David M. Halbfinger (2008-03-09). "A Director Confronts Darkness and Death". The New York Times (nytimes.com). http://www.nytimes.com/2008/03/09/movies/09halb.html. பார்த்த நாள்: 2008-03-08. 
  2. http://www.boxofficemojo.com/movies/?page=main&id=darkknight.htm, Box Office Mojo
  3. McNary, Dave (2008-07-27). "'Dark Knight' reigns overseas". Variety (magazine) (Reed Business Information). http://www.variety.com/article/VR1117989593.html. பார்த்த நாள்: 2008-07-31. 

வெளி இணைப்புக்கள்[தொகு]