டெயிட் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெயிட் தேசியப் பூங்கா
அமைவிடம்டேநெரைப், எசுப்பானியா
பரப்பளவு189.9 km²
நிறுவப்பட்டது1954
வருகையாளர்கள்வருடத்திற்கு 3,5 மில்லியன் பார்வையாளர்கள்
வகைஇயற்கை
வரன்முறைvii, viii
தெரியப்பட்டது2007 (31ஆவது உலக பாரம்பரியக் குழு)
உசாவு எண்1258
State Partyஎசுப்பானியா
Regionஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
முப்பரிமாணத்தில் டெயிட் தேசிய பூங்கா

டெயிட் தேசியப் பூங்கா (எசுப்பானியம்: Parque Nacional del Teide) என்பது எசுப்பானியாவின் கேனரி தீவுகளில் அமைந்திருக்கும் தேசியப் பூங்காவாகும். இது 3,718 மீட்டர் உயரம் கொண்ட டெயிட் மலையை மையப்படுத்தி அமைந்துள்ளது. இந்த மலை எசுப்பானியாவின் மிக உயர்ந்த பகுதியும், அத்திலாந்திக் தீவுகளில் கடல் மட்டத்துக்கு மேலே மிக உயர்ந்த புள்ளியும், மற்றும் உலகின் மூன்றாவது உயரமான எரிமலையும் ஆகும். இது தேசியப்பூங்காவாக 22 சனவரி 1954 பிரகடனப்பட்டதால், எசுப்பானியாவின் பழமை வாய்ந்த தேசியப் பூங்காக்களில் ஒன்றாக உள்ளது. இது எசுப்பனியாவின் மிகப்பெரிய தேசியப்பூங்காவாக உள்ளது மட்டுமல்லாது கேனரி தீவுகளின் முக்கிய பகுதியாகவும் உள்ளது. இந்தப் பூங்காவில் டெயிட் எரிமலைக்கு அடுத்ததாக என்னொரு எரிமலையான பிகோ விஜோ அமைந்துள்ளது. இது கேனரி தீவுகளின் இரண்டாவது பெரிய எரிமலையாகும். இதன் உயரம் 3,135 மீட்டர்.

இந்தப் பூங்கா 18,990 எக்டேர் பரப்பளவைக் கொண்டதுடன் உலகப் பாரம்பரியக் களமாக [ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் சூன் 29, 2007 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது.

டெயிட் தேசியப்பூங்காவே எசுப்பானியாவில் அதிகம் மக்களால் பார்வையிடப்பட்ட பூங்காவாகும். இன்சுடிடுடோ கனறியோ டி எச்டடிச்டிகா (Instituto Canario de Estadística (ISTAC)) இன் படி மொத்தமாக 2.8 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும் இது உலகின் பலர் பார்வையிட்ட தேசியப் பூங்காக்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.[1][2] டெயிட், கேனறித் தீவுகளின் மிகவும் பிரபலமான இயற்கை அம்சமாகும்.

படங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "El Teide (Tenerife) es el parque nacional más visitado de Canarias con 2,8 millones de visitantes en 2008". europapress.es. 31 August 2009. பார்க்கப்பட்ட நாள் 20 September 2014.
  2. "Official Website of Tenerife Tourism Corporation". Webtenerife.com. Archived from the original on 16 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 20 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெயிட்_தேசியப்_பூங்கா&oldid=3556734" இலிருந்து மீள்விக்கப்பட்டது