டியூரரின் காண்டாமிருகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காண்டாமிருகம்
ஓவியர்அல்பிரெக்ட் டியூரர்
ஆண்டு1515
வகைமரச்செதுக்கு
அளவு23.5 cm × 29.8 cm (9.3 அங் × 11.7 அங்)
அமைவிடம்இந்தப் பிரதி, தேசிய கலைக் காட்சியகம்

டியூரரின் காண்டாமிருகம் என்பது, 1515ல் செருமன் ஓவியரும் அச்சுத்தயாரிப்பாளருமான அல்பிரெக்ட் டியூரர் என்பவரால் உருவாக்கப்பட்ட மரச் சிற்பம் ஒன்றைக் குறிக்கும்.[1] இது, அதே ஆண்டில் லிசுபனுக்கு வந்த இந்தியக் காண்டாமிருகம் ஒன்றைப் பார்த்துப் பெயர் தெரியாத ஓவியர் ஒருவரால் வரையப்பட்ட பருமட்டான வரைபடம் ஒன்றையும், எழுத்துமூல விபரிப்பையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. உரோமன் காலத்துக்குப் பின்னர் ஐரோப்பாவில் உயிருள்ள காண்டாமிருகத்தைக் கண்டது அதுவே முதல் முறை. ஆனால், டியூரர் உயிருள்ள காண்டாமிருகத்தை என்றும் பார்த்ததில்லை. 1515ன் பிற்பகுதியில், போர்த்துக்கலின் அரசனான முதலாம் மனுவேல் அக் காண்டாமிருகத்தைப் பாப்பரசர் பத்தாம் லியோவுக்குப் பரிசாக அனுப்பி வைத்தார். ஆனால், இது 1516ல் இத்தாலியின் கரையோரத்தில் கப்பல் மூழ்கியபோது இறந்துவிட்டது. இதன் பின்னர், 1577ல் அபாடா என்னும் காண்டாமிருகம் இந்தியாவிலிருந்து போர்த்துக்கலின் செபாசுத்தியனின் அரசவைக்குக் கொண்டுவரப்பட்டபோதே இன்னொரு உயிருள்ள காண்டாமிருகம் ஐரோப்பாவில் காணப்பட்டது. 1580ல் எசுப்பெயினின் இரண்டாம் பிலிப்பு இதன் உரிமையாளர் ஆனார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. டியூரர் தன்னுடைய ஒரு வரைபடத்தில் செய்த எழுத்துப் பிழையினால், சிலர் இதை 1913 என்கின்றனர்.(Bedini, p.121.)
  2. Clarke, chapter 2.
  3. A street in Madrid was named Abada (rhinoceros in Portuguese) after this animal, that had a curious life too: [1]. [2] பரணிடப்பட்டது 2007-11-14 at the வந்தவழி இயந்திரம் (in Spanish)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]