ஜெய்பூர் இராச்சியம்

ஆள்கூறுகள்: 26°55′34″N 75°49′25″E / 26.9260°N 75.8235°E / 26.9260; 75.8235
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்பூர் இராச்சியம்
1128–1947
கொடி of ஜெய்ப்பூர்
கொடி
சின்னம் of ஜெய்ப்பூர்
சின்னம்
பிரித்தானிய இந்தியா அரசு வெளியிட்ட வரைபடத்தில் ஜெய்பூர் இராச்சியம்
பிரித்தானிய இந்தியா அரசு வெளியிட்ட வரைபடத்தில் ஜெய்பூர் இராச்சியம்
தலைநகரம்ஜெய்ப்பூர்
பேசப்படும் மொழிகள்இந்தி மொழி-உருது மொழி கலந்த துந்தாரி-இராஜஸ்தானி வட்டார மொழிகள் & சமசுகிருதம்
பிற மொழிகள்இந்துஸ்தானி மொழிகள்
அரசாங்கம்சுதேச சமஸ்தானம் (1818-1947)
முடியாட்சி (1128-1818)
மகாராஜா 
• 1128
தூலஹா ராயா (முதல்)
• 1922–1948
இரண்டாம் சவாய் மான்சிங் (இறுதி)
வரலாறு 
• தொடக்கம்
1128
• இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1947
பரப்பு
193140,407 km2 (15,601 sq mi)
மக்கள் தொகை
• 1931
2631775
நாணயம்இந்திய ரூபாய்
பின்னையது
}
இந்தியக் குடியரசு
தற்போதைய பகுதிகள்இராஜஸ்தான், இந்தியா
Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
ஜெய்பூர் அரண்மனை
ஜெய்பூர் மன்னரிடம் நேர் காணால், 1878
ஜெய்பூர் மன்னர் இரண்டாம் மான் சிங் மற்றும் மகாராணி காயத்திரி தேவி

ஜெய்பூர் இராச்சியம் (Jaipur State) 1128ல் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியா ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஜெய்பூர் இராச்சியத்தை ஆம்பர் இராச்சியம், தூந்தர் இராச்சியம் மற்றும் கச்வாகா இராச்சியம் என்றும் அழைப்பர்.

வரலாறு[தொகு]

ஜெய்பூர் இராச்சியம், தூந்தர் பிரதேசத்தில் அமைந்த தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டம், தௌசா மாவட்டம், சவாய் மாதோபூர் மாவட்டம், டோங் மாவட்டம் மற்றும் வடக்கு கரௌலி மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.

இதன் முந்திய இராச்சியமான தௌசா இராச்சியத்தை 1093ல் நிறுவியவர் மன்னர் துளே ராவ் ஆவார்.

கிபி 14ம் நூற்றாண்டு முதல் 1727 முடிய இந்த இராச்சியத்திற்கு ஆம்பர் இராச்சியம் என்று அழைத்தனர். 1727ல் ஜெய்ப்பூர் நகரம் நிறுவப்பட்டதால், அன்று முதல் இவ்விராச்சியத்தை ஜெய்பூர் இராச்சியம் என அழைக்கப்பட்டது. [1]

ஆம்பர் இராச்சியம்[தொகு]

1561ல் ஆம்பர் இராச்சிய மன்னர் பார்மல் கச்வாகா அக்பருடன் கூட்டுச் சேர்ந்து, தன் மகளை அக்பருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

பார்மல் பிரதேசத்தின் நிலவரியின் ஒரு பகுதி ஆம்பர் இராச்சியத்திற்கு வழங்கப்பட்டது. [2][3]முகலாயப் பேரரசுக் காலத்தில் ஆம்பர் இராச்சியம் செழித்தோங்கியது.

ஜெய்பூர் இராச்சியம்[தொகு]

முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலத்தில் ஆம்பர் இராச்சிய மன்னர் இரண்டாம் மான் சிங் ஆட்சிக் காலத்தில், 1727ல் ஜெய்ப்பூர் நகரம் நிறுவப்பட்டது. 1790ல் பதான் போரில், மராத்தியப் பேரரசின் படைகள் ஜெய்பூர் இராச்சியத்தை வீழ்த்தியது.[4]

1818ல் ஜெய்பூர் இராச்சியம், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு, சுதேச சமஸ்தானமாக செயல்பட்டது.

இந்தியப் பிரிவினைக்கு பின்னர், ஜெய்ப்பூர் இராச்சிய மன்னர், தனது இராச்சியத்தை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் ஏப்ரல், 1948ல் கையொப்பமிட்டார்.

ஆட்சியாளர்கள்[தொகு]

ஜெய்ப்பூர் இராச்சிய மன்னரகள் இராசபுத்திர கச்வாகா குலத்தினர் ஆவார்.

  • தூலாகா ராயா
  • பாகு சிங்
  • முதலாம் ஜெய் சிங் - 1614 - 1621.
  • முதலாம் ராம் சிங்
  • பிஷன் சிங்
  • இரண்டாம் ஜெய் சிங் - 1699 – 21 செப்டம்பர் 1743: (பிறப்பு. 1688 – இறப்பு. 1743)
  • ஈஸ்வரி சிங் - 1743 – 12 டிசம்பர் 1750: (பி. 1721 – இ. 1750)
  • முதலாம் மாதோ சிங் - 1750 – 5 மார்ச் 1768: (பி. 1728 – இ. 1768)
  • இரண்டாம் பிரிதிவி சிங் - 1768 – 13 ஏப்ரல் 1778: (பி. 1762 – இ. 1778)
  • சவாய் பிரதாப் சிங் - 1778 – 1803: (பி. 1764 – இ. 1803)
  • இரண்டாம் ஜெகத் சிங் - 1803 – 21 நவம்பர் 1818: (பி. ... – இ. 1818)
  • மோகன் சிங் - (அரசப் பிரதிநிதி) - 22 டிசம்பர் 1818 – 25 ஏப்ரல் 1819: (பி. 1809 – இ. ...)
  • மூன்றாம் ஜெய்சிங் - 25 ஏப்ரல் 1819 – 6 பிப்ரவரி 1835: (பி. 1819 – இ. 1835)
  • இரண்டாம் இராம் சிங் -பிப்ரவரி 1835 – 18 செப்டம்பர் 1880:(பி. 1835 – இ. 1880)
  • இரண்டாம் மாதோ சிங் - 18 செப்டம்பர் 1880 – 7 செப்டம்பர் 1922: (பிறப்பு. 1861 – இறப்பு. 1922)
  • இரண்டாம் மன்சிங் - 7 செப்டம்பர் 1922 – 15 ஆகஸ்டு 1947: (பி. 1912 – இ. 1970)
  • பவானி சிங் - 24 சூன் 1970 – 28 டிசம்பர் 1971: (பி. 1931 – இ. 2011)

கட்டிடங்கள்[தொகு]

ஜெய்பூர் இராச்சிய மன்னர்கள் முதலில் ஆம்பர் கோட்டையைக் கட்டி இராச்சியத்தை நிர்வகித்தனர். இராச்சியத்தின் பாதுகாப்பிற்காக, பின்னர் தலைநகரத்தை செய்ப்பூர் நகரத்திற்கு மாற்றி ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெய்கர் கோட்டை மற்றும் நாகர்கர் கோட்டைகளை கட்டினர். மேலும் ஹவா மஹால், ஜல் மகால் மற்றும் ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) முதலிய அழகிய கட்டிடங்கள் நிறுவினர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jaipur State
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்பூர்_இராச்சியம்&oldid=3451025" இலிருந்து மீள்விக்கப்பட்டது