ஜெகன்மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. ஜெகன்மூர்த்தி
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்G.லோகநாதன்
தொகுதிகீழ்வைத்தியனான்குப்பம் (சட்டமன்றத் தொகுதி)
பதவியில்
13 மே 2006 – 13 மே 2011
முதல்வர்மு. கருணாநிதி
முன்னையவர்K.பவானி கருணாகரன்
பின்னவர்S.ரவி
தொகுதிஅரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 மே 1966 (1966-05-10) (அகவை 57)
ஆன்டர்சன்பேட்டை, நேமம்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபுரட்சி பாரதம் கட்சி
பெற்றோர்முனுசாமி (தந்தை) ருக்மணிஅம்மாள் (தாய்)
வாழிடம்(s)ஆண்டரசன்பேட்டை, நேமம், தமிழ்நாடு, இந்தியா

பூவை ஜெகன் மூர்த்தி (பிறப்பு: மே 10, 1966) என்று அழைக்கப்படும் டாக்டர் பூவை மு. ஜெகன் மூர்த்தி ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் சமூக ஆர்வலர் ஆவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள கே.வி.குப்பம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். புரட்சிபாரதம் கட்சியின் தற்போதைய தலைவராவார்.

புரட்சிபாரதம் கட்சியின் நிறுவனர் டாக்டர் பூவை எம்.மூர்த்தி செப்டம்பர் 2, 2002 அன்று மாரடைப்பால் இறந்த பிறகு, பூவை மு. ஜெகன் மூர்த்தி செப்டம்பர் 7, 2002 அன்று கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆதரவுடன் அக்கட்சியின் தலைவரானார்.

2006 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து, அரக்கோணம் தொகுதிக்கான தமிழக சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் அவரது கட்சியும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தன. 2021 தமிழ்நாடு தேர்தல்களில் அவர் அதிமுகவுடன் கூட்டணியைத் தொடர்ந்தார். தமிழ்நாட்டின் கே. வி. குப்பம் தொகுதியில் போட்டியிட்டு 2021 தேர்தலில் வெற்றி பெற்றார்.

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 அரக்கோணம் புரட்சி பாரதம் கட்சி (திமுக சின்னம்)
2021 கீழ்வைத்தினான்குப்பம் புரட்சி பாரதம் கட்சி (அதிமுக சின்னம்) 48.57%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகன்மூர்த்தி&oldid=3905650" இலிருந்து மீள்விக்கப்பட்டது