ஜி. தேவராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. தேவராஜன்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1927-09-27)27 செப்டம்பர் 1927
பரவூர், கொல்லம், இந்தியா
இறப்பு14 மார்ச்சு 2006(2006-03-14) (அகவை 78)
சென்னை, இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட இசை, மேடை நிகழ்ச்சி, கர்நாடக இசை
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், கர்நாடக இசைப் பாடகர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம், மிருதங்கம், வீணை
இசைத்துறையில்1948–2006
வெளியீட்டு நிறுவனங்கள்எச். எம். வி, ஆடென் பதிவுகள், ஏஞ்சல் பதிவுகள், தரங்கனி பதிவுகள்
இணைந்த செயற்பாடுகள்வயலார் ராமவர்மா, கே. ஜே. யேசுதாஸ்

ஜி. தேவராஜன், திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் முந்நூற்றுக்கும் அதிகமான மலையாளத் திரைப்படங்களுக்கும், 17 தமிழ்த் திரைப்படங்களுக்கும், சில கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் கேரளத்தின் கொல்லத்திற்கு அருகில் உள்ள பறவூரில் பிறந்தவர்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

'சங்கம் வளர்த்த தமிழ்... தாய்ப்புலவர் வளர்த்த தமிழ்’ என்ற அருமையான தமிழ்ப்பாடலை நமக்கு வழங்கியவர் இசையமைப்பாளர் ஜி.தேவராஜன் [1927-2006]. கேரளாவை சேர்ந்த இவர் 1955ல் ‘காலம் மாறுன்னு’ என்ற மலையாளப்படத்தின் மூலம் திரை வாழ்வை தொடங்கி, மலையாளம்,கன்னடம்,தமிழ் என 300 படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். பெரும்பாலும் இவரது தமிழ்ப்படங்களை இயக்கியவர்கள் கேரள இயக்குனர்களே!.

ஜி.தேவராஜன் இசையமைப்பில் இன்றும் நம்மை பண்பலை மூலம் தவழ்ந்து வரும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ‘துலாபாரம்’ ‘அன்னை வேளாங்கண்ணி’ ‘சுவாமி ஐயப்பன்’ ஆகியவையே. ‘துலாபாரம்’ ஒளிப்பதிவு மேதை ஏ.வின்செண்ட் இயக்கத்தில் வந்த திரைப்படம். அனைத்து பாடல்களுமே அற்புதமானவை. 1. பூஞ்சிட்டுக்கன்னங்கள்-பி.சுசிலா& டி.எம்.எஸ்

2.காற்றினிலே பெருங்காற்றினிலே-ஜேசுதாஸ்.

3.வாடி தோழி கதாநாயகி- பி.சுசிலா,வசந்தா.

4.சிரிப்போ...இல்லை நடிப்போ- டி.எம்.எஸ்.

5.சங்கம் வளர்த்த தமிழ்- டி.எம்.எஸ்&பி.சுசிலா.

‘பூஞ்சிட்டுக்கன்னங்கள்’ என்ற பாடலில்,‘பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே’ என்ற வரிகளில் சுசிலாவின் குரலில் ‘பால்’ என்ற உச்சரிப்பில் ‘முப்பாலும்’ உறைந்து உன்னதமாகி உலாவுகிறது.

‘காற்றினிலே பெருங்காற்றினிலே,ஏற்றி வைத்த தீபத்திலும் இருளிருக்கும்’,என பாடல் வரிகளில் ஊழிக்காற்றின் உக்கிரம் உச்சாடனம் செய்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகடலில்,சின்னஞ்சிறு படகை அலைகள் சிக்கனமாக தாலாட்டுவதைப்போன்று தேவராஜனின் இசையமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜி.தேவராஜன் இசையில் காவல் தெய்வம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு அளிக்கணும்’ என்ற பாடலை ‘கண்ணை மூடி ரசிக்கலாம்’. மிக எளிமையான பண்ணில் இப்பாடலை அமைத்து இருக்கிறார் தேவராஜன்.

குமார விஜயம் படத்தில்,‘கன்னி ராசி என் ராசி,ரிஷப காளை ராசி என் ராசி’,என்ற பாடல் காதல் இளவரசன் கமலஹாசனுக்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது. பாடல் கமலின் பங்களிப்பில் இப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும்.

அன்னை வேளாங்கண்ணி படத்தில் பல பாடல்கள் சூப்பர் ஹிட்.

1. கருணை மழையே மேரி மாதா -பி.சுசிலா.

2.வானமெனும் வீதியிலே- மாதுரி&ஜேசுதாஸ்.

3.தேவ மைந்தன் போகின்றான் - டி.எம்.எஸ்.

4.தந்தானந்தன தந்தான,தண்ணீர் குளத்தினிலே அம்மா தரிசனம் தந்தாளே’.

5.நீலக்கடலின் ஓரத்தில்’ - டி.எம்.எஸ்.

6.பேராவூரணி சின்னக்கருப்பாயி,பெரிய மனுஷி ஆனா- டி.எம்.எஸ்.

‘மெரிலாண்ட் சுப்ரமண்யம்’ என அழைக்கப்பட்ட பி.சுப்ரமண்யம் அவர்கள்,பல தமிழ்&மலையாளப்படங்களை தயாரித்து இயக்கி இருக்கிறார். தமிழில் அவர் இயக்கிய அனைத்து படங்களுக்குமே இசையமைத்தவர் ‘மாஸ்டர் தேவராஜன்’ என அழைக்கப்பட்ட ஜி.தேவராஜன் அவர்கள்தான். இருவரும் இணைந்து பங்களித்த படங்களின் பட்டியல்:

1. பெற்றவள் கண்ட பெருவாழ்வு. 2.காட்டு மங்கை.

3.குமார சம்பவம்.

4.யானை வளர்த்த வானம்பாடி மகன்.

5.சுவாமி ஐயப்பன்.

சுவாமி ஐயப்பன் பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.இந்த காலகட்டத்தில் கண்ணதாசன் அவர்கள் போதை மருந்து ஊசிக்கு அடிமையாக இருந்தார். கவிஞரின் பழக்கத்தால் அதிருப்தியுற்ற இயக்குனர் சுப்ரமண்யம், கவியரசரின் பாடல் வரிகளை படித்து நெகிழ்ந்தார். ’சுவாமி ஐயப்பன்’ மலையாளத்திலும் எடுக்க திட்டமிருந்ததால் மலையாளக்கவிஞரை கூப்பிட்டு ‘இதை அப்படியே மொழி பெயர்த்து விடு..போதும்’ என்றிருக்கிறார் சுப்ரமண்யம்.‘சுவாமி ஐயப்பன்’ திரைப்படம் பெரு வெற்றியடைந்து தமிழகத்தில் ஐயப்ப பக்தர்களை புதிதாக உருவாக்கியது.

இப்படத்தின் பாடல்கள் இன்றும் ஐயப்ப பக்தர்களுக்கு ‘பிரசாதம்’.

1.அரிஹராசனம் - ஜேசுதாஸ்.

2.பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்,அய்யனை நீ காணலாம்- ஜேசுதாஸ்.

3.தேடுகின்ற கண்களுக்கு ஓடி வரும் சாமி- பி.சுசிலா.

4. சுவாமியே சரணம்...சரணம் பொன் ஐயப்பா- டி.எம்.எஸ்.

5.சபரி மலையில் வண்ணச்சந்திரோதயம் - டி.எம்.எஸ்.

தமிழகத்தில் சிற்றரசராக திகழ்ந்த ஜி.தேவராஜன் மலையளத்தில் பெரும் சக்ரவர்த்தியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.இளையராஜா, ஜி.தேவராஜன் இசைக்குழுவில் இசைக்கருவி வாசித்து பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஜி.தேவராஜன் இசை என்றும் ஐயப்ப பக்தர்களுக்கு,‘பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு வரும்’.

இவர், திரைப்படப் பாடல் ஆசிரியரான வயலார் ராமவர்மாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

1. பெற்றவள் கண்ட பெருவாழ்வு.

2.காட்டு மங்கை.

3.எங்களுக்கும் காலம் வரும்.

4.காவல் தெய்வம்.

5.துலாபாரம்.

6.கஸ்தூரி திலகம்.

7.குமார சம்பவம்.

8.அன்னை வேளாங்கண்ணி.

9.யானை வளர்த்த வானம்பாடி மகன்.

10.விஜயா.

11.ஸ்வாமி ஐயப்பன்.

12.குமார விஜயம்.

13.பஞ்சாமிர்தம்.

14.அலாவுதினும் அற்புத விளக்கும்[இயக்கம்:ஐ.வி.சசி]

15.ராணி.

16.கோடுகள் இல்லாத கோலம்.

17.வில்லியனூர் மாதா.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._தேவராஜன்&oldid=3848970" இலிருந்து மீள்விக்கப்பட்டது