சௌரி சௌரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌரி சௌரா (Chauri Chaura) என்பது இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் அருகில் உள்ள ஒரு நகரம். 1922 பிப்ரவரியில் மகாத்மா காந்தி முன்னின்று நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் வன்முறை பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதை விரும்பாமல் அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். சௌரி சௌரா போராட்டத்தில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட வன்முறையில் சிலர் காவல் நிலையத்தை எரித்து 22 காவல்துறையினர் கொல்லப்பட்ட நிகழ்வினால் இந்நகரம் மிகவும் அறியப்படுகிறது. . அதன் காரணமாக 228 பேர் கைது செய்யப்பட்டனர். 6பேர் போலீஸ் காவலில் இறந்தனர். 172 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. காந்திஜி வழக்கம் போல் இது பற்றி ஆங்கிலேயருக்கு எதிராக எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மூன்று பேர் கொல்லப்பட்டால் அது வன்முறை. ஆனால் 172 பேருக்குத் தூக்குத்தண்டணை விதிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மானவேந்திரனாத் ராய் (நரேன் பட்டாச்சார்யா) என்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஒரு பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தார். பின்னர் அலகாபாத் உயர் நீதி மன்றம் 19 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 110 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்குக் கடுங்காவல் தண்டனையும் விதித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌரி_சௌரா&oldid=1888268" இலிருந்து மீள்விக்கப்பட்டது