சே. மா. செல்லத்தம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்ஸ். எம். செல்லத்தம்பு
X. M. Sellathambu
இலங்கை நாடாளுமன்றம்
for வவுனியா
பதவியில்
1970–1977
முன்னையவர்தா. சிவசிதம்பரம்
பின்னவர்தா. சிவசிதம்பரம்
இலங்கை நாடாளுமன்றம்
for முல்லைத்தீவு
பதவியில்
1977–1983
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-10-20)20 அக்டோபர் 1917
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி
துணைவர்மேரி ஜோசஃபின் (இ. 14-01-2004)
பிள்ளைகள்மகேந்திரன், இந்திராணி, ராஜன்
இனம்இலங்கைத் தமிழர்

சேவியர் மார்க் செல்லத்தம்பு (Xavier Mark Sellathambu, 20 அக்டோபர் 1917 - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

செல்லத்தம்பு 1917 அக்டோபர் 20 இல் பிறந்தார்.[1] மேரி ஜோசபின் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[2]

அரசியலில்[தொகு]

செல்லத்தம்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வவுனியா தேர்தல் தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 273 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ் காங்கிரசு வேட்பாளர் தா. சிவசிதம்பரத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[3]

செல்லத்தம்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 1977 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4] He was Chief Opposition Whip from 1977 to 1983.[5]

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 21 இல் செல்லத்தம்பு முல்லைத்தீவு தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்[6].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sellathambu, Xavier Mark". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Obituaries". டெய்லிநியூஸ். 16 சனவரி 2004 இம் மூலத்தில் இருந்து 2007-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070629202306/http://www.dailynews.lk/2004/01/16/obits.html. 
  3. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2014-12-27.
  4. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2014-12-27.
  5. "Chief Opposition Whips". இலங்கை நாடாளுமன்றம்.
  6. Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._மா._செல்லத்தம்பு&oldid=3555917" இலிருந்து மீள்விக்கப்பட்டது