செனான் ஈராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனான் ஈராக்சைடு
Xenon dioxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
செனான் டையாக்சைடு
பண்புகள்
XeO2
வாய்ப்பாட்டு எடை 163.29 கி/மோல்
தோற்றம் மஞ்சள்நிறத் திண்மம்[1]
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் செனான் மூவாக்சைடு
செனான் நான்காக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

செனான் ஈராக்சைடு (Xenon dioxide ) அல்லது செனான்(IV) ஆக்சைடு (xenon(IV) oxide) என்பது XeO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செனான் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் 2011 ஆம் ஆண்டில் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது. செனான் நான்கு புளோரைடைசெ வெப்பநிலையில் ( 2.00 மோல்/லி H2SO4 உடன்) நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி செனான் ஈராக்சைடு தயாரிக்கப்பட்டது.[2]

அமைப்பு[தொகு]

செனான் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் முறைய 4 மற்றும் 2 என்ற அணைவு எண்களாகக் கொண்ட நீட்டித்த சங்கிலி அல்லது வலை கட்டமைப்பில் செனான் ஈராக்சைடு காணப்படுகிறது. செனானின் சதுர சமதள வடிவியலில் நான்கு ஈனிகள் மற்றும் இரண்டு தனித்த எலக்ட்ரான் இரட்டைகள் வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கைக்கு இசைவாக அமைந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பே குவைய வேதியியல் முறைப்படி பைக்கோ மற்றும் தாம் என்பவர்கள் செனான் ஈராக்சைடின் இருப்பை முன் கனித்து கூறியிருந்தாலும் அவர்கள் இந்நீட்சி அமைப்பு குறித்து அறிந்திருக்கவில்லை.[3]

பண்புகள்[தொகு]

XeO2 மஞ்சள் – ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது[4]. நிலைப்புத்தன்மையற்ற இச்சேர்மத்தின் அரைவாழ்வுக் காலம் இரண்டு நிமிடங்களே ஆகும் . −78 °செல்சியசு வெப்பநிலைக்கு இதைக் குளிர்வித்து சிதைவடைவதற்கு முன்பு இராமன் அலைமாலையியல் ஆய்வுக்கு உட்படுத்தினால் அமைப்பும் அடையாளமும் உறுதிப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Tyler Irving (May 2011). "Xenon Dioxide May Solve One of Earth's Mysteries". L’Actualité chimique canadienne (Canadian Chemical News). Archived from the original on 2013-02-09. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18.
  2. Brock, David S.; Schrobilgen, Gary J. (2011). "Synthesis of the Missing Oxide of Xenon, XeO
    2
    , and Its Implications for Earth’s Missing Xenon". Journal of the American Chemical Society 133 (16): 6265–6269. doi:10.1021/ja110618g. பப்மெட்:21341650.
     
  3. Pyykkö, Pekka; Tamm, Toomas (1 April 2000). "Calculations for XeOn(n = 2−4): Could the Xenon Dioxide Molecule Exist?". The Journal of Physical Chemistry A 104 (16): 3826–3828. doi:10.1021/jp994038d. 
  4. Simon Cotton (May 2011). "Soundbite Molecules". Royal Society of Chemistry. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனான்_ஈராக்சைடு&oldid=3768191" இலிருந்து மீள்விக்கப்பட்டது