சூரியக் காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியக் காற்று புவியின் காந்த மண்டலத்தை மாற்றியமைக்கும்
புவிமுனை ஒளிக்கோலங்கள், ISS படம்
புவிமுனை ஒளிக்கோலங்கள், ISS-விண்வெளி நிகழ்படம்

சூரியக் காற்று (solar wind) என்பது சூரியனின் மேல் வளிமண்டலத்திலிருந்து வெளியேறும் ஏற்றமுள்ள துணிக்கைகளின் கூட்டம் ஆகும். இது பொதுவாக இலத்திரனாலும், புரோத்திரனாலும் ஆனது. இதன் சக்தி 1.5 தொடக்கம் 10 keV வரை வேறுபடும். சூரிய உட்கருவின் (Corona) அதிகமான வெப்பத்தாலும், அதிகமான இயக்க ஆற்றலாலும் இத்துணிக்கைகள், சூரியனின் ஈர்ப்பு சக்தியை மீறிச் செல்லக் கூடியவை இயல்புடையவை ஆகும். இக்காற்றில் கொண்டு வரப்படும் துணிக்கைகளே, வடமுனை ஒளியைத் தோற்றுவிப்பவை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியக்_காற்று&oldid=3452266" இலிருந்து மீள்விக்கப்பட்டது