சாலஞ்சர் விண்ணோட விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நொறுங்கி விழும் சாலஞ்சர் விண்ணோட்டம்

சாலஞ்சர் விண்ணோட விபத்து (Space Shuttle Challenger disaster) ஜனவரி 28, 1986-ல் நிகழ்ந்த மோசமான விண்கல விபத்து. சாலஞ்சர் விண்ணோடத்தீநேர்வு பொறியியலில் பல பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தியது.

விபத்து[தொகு]

சாலஞ்சர் விண்ணோடம் தரையிலிருந்து கிளம்பிய 73 வினாடிகளில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 7 குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புளோரிடா வின் கடற்கரையோரமாக காலை 11:39 மணியளவில் கலம் சிதறி விழுந்தது. விண்ணோடத்தின் வலது திட விண்கல உயர்த்தியில் இருந்த ஓ-வளையம் விண்கலம் மேலெம்புகையில் செயலற்றுப்போனதும் கலம் பிளவுபடத் துவங்கியது. ஓ-வளைய செயலிழப்பால் கலத்தின் திட விண்கல உயர்த்தியில் பிளவு ஏற்பட்டு அழுத்தமூட்டப்பட்ட வெப்ப வாயுக்கள் திட விண்கல விசைப்பொறியினூடாகப் பரவி கலத்தின் எரிபொருள் தொட்டியிலும், திட உயர்த்தியின் பக்கங்களிலும் மோதுகையை உருவாக்கியது. இதனால் வலது பக்க திட உயர்த்தியின் பின்பக்க இணைப்பு பிரிந்து வெளிப்புற தொட்டியின் அமைப்பில் முறிவை ஏற்படுத்தியது. காற்றியக்கம் சார்ந்த விசைகள் அதன் சுற்றுப்பாதை நிறுத்தியை உடைத்தது.

சாலஞ்சர் விபத்து நிகழ்படம்

குழுவினர் தங்கும் தொகுதி மற்றும் கலத்தின் மற்ற பகுதிகள் கடலுக்கடியில் நீண்ட தேடலுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டன. விண்ணோடம் முதலில் பிளவுபடத் தொடங்கியபோது உள்ளிருந்த குழுவினர்கள் உயிருடன் இருந்ததாக அறியப்படுகிறது. குழுவினர் இறந்த துல்லியமான நேரம் தெரியாவிட்டாலும் விண்ணோடத்தில் அவசரத்தில் தப்பித்துக்கொள்ளும் வசதி அமைப்புகள் இல்லாததால் விண்கலம் கடலில் மோதுகையில் குழுவினர் பிழைத்துக்கொள்ள வழியின்றிபோனது. விண்ணோடம் செலுத்தப்படுவதை பலர் நேரடியாகப் பார்த்தனர். கிரிஸ்டா மெக் அஃபி (Christa McAuliffe) என்ற ஆசிரியரும் விண்வெளிக்குழுவில் இருந்தார்.

விபத்து ஆய்வு[தொகு]

சாலஞ்சரின் இயக்குனர்கள் குழு

விபத்திற்கு பிறகு 32 மாதங்களுக்கு விண்கல ஆய்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் விண்ணோடத் தீநேர்வைப் பற்றி ஆய்வு செய்ய ரோஜர் ஆணையம் எனும் சிறப்பு ஆணையத்தை அமைத்தார்.அக்குழு அளித்த அறிக்கையில் விபத்திற்கு காரணம் நாசாவின் நிர்வாக மற்றும் முடிவெடுக்கும் முறைகளும் என்று கூறப்பட்டது. மேலும் அந்த அறிக்கையில் மார்டின் தியோகோல் என்ற ஒப்பந்தி உருவாக்கிய திட விண்கல உயர்த்தி அமைப்பில் பெருங்கேடுதருகின்ற குறைபாடுகளை 1977-ம் ஆண்டு முதல் நாசா நிர்வாகிகள் அறிந்திருந்தும் அதனை சரியாக தெரிவிக்க தவறிவிட்டனர் என்று சொல்லப்பட்டது. மேலும் பொறியாளார்கள் விண்கலம் செலுத்தப்படுவதால் ஏற்படப்போகும் அபாயங்களைப் பற்றி விளக்கியும்,மேலாளர்கள் அதனை மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்காததையும் சுட்டிக்காடினர்.இறுதியாக ரோஜர் ஆணையம் விண்கலம் செலுத்தப்படும் முன்பு கையாளப்படவேண்டிய ஒன்பது வழிமுறைகளை நாசாவிற்கு பரிந்துரை செய்தது.

வெளி இணைப்புகள்[தொகு]