சாரெகொப்பா பங்காரப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பங்காரப்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-10-26)26 அக்டோபர் 1932
சிவமோகா, கருநாடகம்
இறப்பு26 திசம்பர் 2011(2011-12-26) (அகவை 79)
பெங்களூரு, கருநாடகம்
அரசியல் கட்சிஜனதா தளம் (எஸ்)
துணைவர்சகுந்தலா
பிள்ளைகள்2 மகன்களும் 3 மகள்களும்
வாழிடம்பெங்களூரு

சாரெகொப்பா பங்காரப்பா (Sarekoppa Bangarappa, 26 அக்டோபர் 1932 – 26 திசம்பர் 2011) ஓர் இந்திய அரசியல்வாதியும் 1990-92 ஆண்டுகளில் கருநாடக முதலமைச்சராக இருந்தவரும் ஆவார். 14வது மக்களவையில் சிவமோகா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற்பட்ட வகுப்பினரின் தலைவராக விளங்கிய பங்காரப்பா துவக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியிலும் இறுதியில் ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியிலும் பங்காற்றியவர்.[1][2][3] இவர் கருநாடக விகாஸ் கட்சியையும் கருநாடக காங்கிரசு கட்சியையும் நிறுவியவர்.

அக்டோபர் 26 , 1932ஆம் ஆண்டு கருநாடகத்தில் சிமோகா மாவட்டத்தில் குபாத்தூர் சிற்றூரில் காளியப்பா, காளியம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சனவரி 1,1958இல் சகுந்தலாவை மனைவியாக கைபிடித்தார். குமார் பங்காரப்பா, மது பங்காரப்பா என்ற இரு மகன்களும் மூன்று மகள்களும் இவர்களுக்கு உள்ளனர். கலை மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். மேலும் சமூக அறிவியலில் பட்டயப் படிப்பும் முடித்தவர். சிமோகா மாவட்டத்தில் மக்களின் பரவலான ஆதரவைப் பெற்றிருந்தார். திசம்பர் 26, 2011 அன்று பெங்களூரில் மல்லய்யா மருத்துவமனையில் சிறுநீரகச் செயலிழப்பினால் மரணமடைந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bangarappa returns to Congress, party says Karnataka options open". டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 March 2009. பார்க்கப்பட்ட நாள் 13 May 2010.
  2. "Uphill struggle for Bangarappa". த இந்து. 26 April 2009. பார்க்கப்பட்ட நாள் 13 May 2010.
  3. "Bangarappa to dump Cong for BJP?". Times of India. 29 February 2004. பார்க்கப்பட்ட நாள் 13 May 2010.
  4. கர்நாடகா முன்னாள் முதல்வர் பங்காரப்பா மரணம் ! பரணிடப்பட்டது 2011-12-26 at the வந்தவழி இயந்திரம் தினகரன், 26 திசம்பர் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரெகொப்பா_பங்காரப்பா&oldid=3243717" இலிருந்து மீள்விக்கப்பட்டது