சாரதா மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரதா மேத்தா
சாரதா மேத்தா
பிறப்பு(1882-06-26)26 சூன் 1882
அகமதாபாத், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு13 நவம்பர் 1970(1970-11-13) (அகவை 88)
வல்லப் வித்யாநகர், குசராத்து, இந்தியா
கல்விஇளங்கலை
படித்த கல்வி நிறுவனங்கள்குசராத்துக் கல்லூரி
பணிசமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர் மற்றும் எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
சுமந்த் மேத்தா]]
(தி. 1898; இற. 1968)
பிள்ளைகள்இரமேஷ் சுமந்த் மேத்தா
உறவினர்கள்வித்யாகவுரி நிலகாந்த் (சகோதரி)

சாரதா மேத்தா (Sharda Mehta) (1882 சூன் 26 - 1970 நவம்பர் 13) இவர் ஓர் இந்திய சமூக சேவகரும், பெண்கள் கல்வியின் ஆதரவாளரும் மற்றும் குசராத்தி எழுத்தாளரும் ஆவார். சமூக சீர்திருத்தவாதிகளின் குடும்பத்தில் பிறந்த இவர், நவீன குசராத் மாநிலத்தில் முதல் இரண்டு பெண் பட்டதாரிகளில் ஒருவராக இருந்தார்.[1] இவர் பெண்கள் கல்வி மற்றும் பெண்கள் நலனுக்காக நிறுவனங்களை நிறுவினார். இவர் பல கட்டுரைகள் மற்றும் ஒரு சுயசரிதை மற்றும் சில படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

1920இல் அகமதாபாத்தில் உள்ள மகிலா வித்யாலயாவில் மகாத்மா காந்தி (இடது) மற்றும் இரவீந்திரநாத் தாகூர் (மத்தியில்) ஆகியோருடன் சாரதா மேத்தா (வலது)

சாராதா மேத்தா 1882 சூன் 26 அன்று அகமதாபாத்தில் நீதித்துறை அதிகாரியான கோபிலால் மணிலால் துருவா மற்றும் பாலாபென் ஆகியோரின் மகளாக ஒரு நகர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியும் கவிஞருமான போலாநாத் திவேத்தியாவின் தாய்வழி பேத்தியாவார்.[1]

இவர் தனது ஆரம்பக் கல்வியை ராவ்பகதூர் மகன்பாய் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பின்னர் இவர் மகாலட்சுமி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆங்கில-வடமொழி வகுப்புகளில் சேர்ந்தார். மேலும் 1897 இல் மெட்ரிகுலேசனை முடித்தார். 1901 ஆம் ஆண்டில் குசராத் கல்லூரியில் தர்க்க சாஸ்திரம் மற்றும் தார்மீக தத்துவத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். இவரும் இவரது மூத்த சகோதரி வித்யாகவுரி நிலகாந்தும் குசராத்தின் முதல் இரண்டு பெண் பட்டதாரிகள் ஆவர்.[1]

இவர் 1898 இல் தன்னைவிட நான்கு ஆண்டுகள் மூத்தவரான சுமந்த் மேத்தா என்பவரை மணந்தார். சுமந்த் அப்போது மருத்துவ மாணவராக இருந்தார்.[1] பின்னர் சுமந்த் பரோடா மாநிலத்தின் கெய்க்வாட்டின் தனிப்பட்ட மருத்துவராகவும் சமூக சேவையாளராகவும் பணியாற்றினார்.

தொழில்[தொகு]

சமூகப் பணி[தொகு]

மேத்தா சமூக சீர்திருத்தங்களுக்காக பணியாற்றினார். மேலும் கல்வி, பெண்கள் அதிகாரம், சாதி கட்டுப்பாடுகளின் எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் இந்திய சுதந்திரத்தை ஆதரித்தார். மகாத்மா காந்தியால் இவர் செல்வாக்கு பெற்றார். 1906 முதல், இவர் சுதேசி (உள்நாட்டு) பொருட்கள் மற்றும் காதி ஆடைகளை ஊக்குவித்தார். இவர் 1917 இல் ஒப்பந்தம் செய்யப்பட்ட அடிமைத்தனத்திற்கு (கிர்மித்யாஸ்) எதிராக ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தார்.[2] 1919 இல் நவஜீவன் அறக்கட்டளை என்ற இதழை வெளியிடுவதில் இந்தூலால் யாக்னிக் என்பவருக்கு உதவினார்.[3]

1928 இல் அகமதாபாத்தில் நடைபெற்ற குசராத் உழவர் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பர்தோலி சத்தியாக்கிரகத்தின் தீர்வுக்கான பிரதிநிதியின் உறுப்பினராக பம்பாய் ஆளுநரை சந்தித்தார்.[4] 1929 ஆம் ஆண்டில், அகமதாபாத்தில் உள்ள துணி ஆலைகளில் தொழிலாளர் நிலைமைகள் குறித்து தொழிலாளர் தொடர்பான ராயல் கமிஷன் முன் இவர் முன்வைத்தார். 1930இல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது இவர் மதுபானக் கடைகளுக்கு முன்னால் மறியல் செய்தார். [upper-alpha 1] 1931 ஆம் ஆண்டில், இவர் ஒரு காதி கடையை நிறுவி, அகமதாபாத்தின் செர்தா அருகே தனது கணவரின் ஆசிரமத்தில் பணிபுரிந்தார். 1934 ஆம் ஆண்டில்,இவர் அப்னா கர் நி துகான் என்ற கூட்டுறவு கடையை நிறுவினார்.

இந்த ஆண்டுகளில் அகமதாபாத், பரோடா மற்றும் மும்பையில் உள்ள பல கல்வி மற்றும் பெண்கள் நல நிறுவனங்களுடன் மேத்தா தொடர்பு கொண்டிருந்தார். அத்துடன் பரோடா மக்கள் சங்க உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1931 முதல் 1935 வரை அகமதாபாத் நகராட்சியில் உறுப்பினராக இருந்தார். 1934 ஆம் ஆண்டில், பெண்கள் நலனுக்காக ஜோதி சங்கத்தை நிறுவினார்.[2]

இவர் பெண்கள் கல்வியின் ஆதரவாளராக இருந்தார்.[1] அகமதாபாத்தில் வனிதா விசாரம் மகிளா வித்யாலயாவை நிறுவினார். இவர் கார்வே, சிறீமதி நாதிபாய் தாமோதர் தாக்கர்சி மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு கல்லூரியையும் நிறுவினார்.

இலக்கிய வாழ்க்கை[தொகு]

மேத்தா இந்து நூல்கள், சமசுகிருத இலக்கியங்கள் மற்றும் அரவிந்தர், சுக்லால் சங்க்வி, மற்றும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் படைப்புகளால் ஆழ்ந்த தாக்கத்தை கொண்டிருந்தார்.[2]

இவர் ஒரு கட்டுரையாளராகவும், சுயசரிதை மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். இவர் சமூக பிரச்சினைகள் குறித்த கட்டுரைகளை நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் எழுதி வந்தார். இவரது புராணோனி பல்போதக் வர்தாவ் (1906) என்பது குழந்தைகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட கதைகளின் தொகுப்பாகும். ஆங்கில சமூக சீர்திருத்தவாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் சுயசரிதையான புளோரன்ஸ் நைட்டிங்கேல் நு ஜீவன்சரித்ரா (1906) என்பதை எழுதினார். இவர் கிரிகவ்யவஸ்தாஸ்திரத்தையும் (1920), பாலகோனு கிருசிக்சன் (1922) என்ற குழந்தைக் கல்வி குறித்த ஒரு படைப்பையும் எழுதினார்.

1938 ஆம் ஆண்டில், இவர் தனது சுயசரிதையை எழுதினார். அதில் தனது பொது வாழ்க்கை மற்றும் ஜீவன்சம்பரனாவில் பெண்கள் கல்விக்கான தனது முயற்சிகள் பற்றி (நினைவூட்டல்கள்: சாரதாபென் மேத்தாவின் நினைவுகள்) ஆகியவை அடங்கியிருந்தது. இந்தப் பணி 1882 முதல் 1937 வரையிலான காலத்தை உள்ளடக்கியது. மேலும் சமூக, வரலாற்று மற்றும் அரசியல் நிலைமை மற்றும் பெண்களின் விழிப்புணர்வு ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

தனது சகோதரியுடன், மேத்தா இமேஷ் சுந்தர் தத்தின் பெங்காலி புதினமான சன்சார் (தி லேக் ஆஃப் பாம்ஸ், 1902) என்பதை சுதாசினி (1907) என்று மொழிபெயர்த்தார்.[6] மேலும்பரோடாவின் மகாராணியின் (இரண்டாம் சிம்னாபாய்) இந்திய வாழ்க்கையில் பெண்கள் நிலை (1911) என்ற நூலை இந்துஸ்தான்மா ஸ்த்ரீயு சமாஜிக் சதான் அல்லது இந்துஸ்தன்னா சமாஜிக் ஜீவன்மா ஸ்த்ரீனு சதான் (1915) என்ற பெயரில் மொழி பெயர்த்தார்.[1][7][8] சாத்தே அன்னபாவின் நூலையும் 'வர்ணனே காந்தே' என்றப் பெயரில் மொழிபெயர்த்தார்.[9]

இறப்பு[தொகு]

இவர் 1970 நவம்பர் 13, அன்று வல்லப் வித்யாநகரில் இறந்தார்.[1]

நூலியல்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. During the disobedience movement, the protesters picketed liquor shops with the aim of opposing drinking habit as a social evil as well as decreasing the income of the British government earned as an excise duty on drinks.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Sujata, Menon (2013). Sarkar, Siddhartha. ed. "An Historical Analysis of the Economic Impact on the Political Empowerment of Women In British India". International Journal of Afro-Asian Studies (Universal-Publishers) 4 (1): 17–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61233-709-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0974-3537. https://books.google.com/?id=DeaVBAAAQBAJ&pg=PA17. 
  2. 2.0 2.1 2.2 Rajgor, Shivprasad (January 2002). Dhirubhai Thaker. ed (in gu). ગુજરાતી વિશ્વકોશ. XV (1st ). Ahmedabad: Gujarat Vishvakosh Trust. பக். 535–536. இணையக் கணினி நூலக மையம்:248968453. 
  3. Geraldine Hancock Forbes. Women in Colonial India: Essays on Politics, Medicine, and Historiography. Orient Blackswan. பக். 124–142, 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8028-017-7. 
  4. Chatterjee, Ramananda (1942). The Modern Review. 72. Prabasi Press Private Limited. p. 118. https://books.google.com/?id=mvwEAAAAMAAJ. 
  5. Vijailakshmi, Usha R. (2012). "Gandhi's Leadership and Civil Disobedience Movement in Mumbai, 1930: Events and Inferences" (CD-ROM). Humanities and Social Sciences Review 1 (2): 383–391. பன்னாட்டுத் தர தொடர் எண்:2165-6258. https://www.academia.edu/10401665. 
  6. Meenakshi Mukherjee. An Indian for All Seasons: The Many Lives of R.C. Dutt. Penguin Books India. பக். 275–276. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-306789-4. 
  7. Raghuveer Chaudhari, தொகுப்பாசிரியர் (in gu). વીસમી સદીનું ગુજરાતી નારીલેખન (1st ). New Delhi: சாகித்திய அகாதமி. பக். 349. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8126020350. இணையக் கணினி நூலக மையம்:70200087. 
  8. Bhatt, Pushpa. "વિદ્યાગૌરી નીલકંઠ" [Vidyagauri Nilkanth]. gujaratisahityaparishad.com (in குஜராத்தி). Gujarati Sahitya Parishad. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  9. Jani, Balvant. Encyclopaedia of Indian Literature: K to Navalram. VIII. New Delhi: சாகித்திய அகாதமி. பக். 2658–2659. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8364-2423-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_மேத்தா&oldid=3747743" இலிருந்து மீள்விக்கப்பட்டது