சாரதா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரதா
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஏ. எல். சீனிவாசன்
கதைகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ஆர்
விஜயகுமாரி
எஸ்.வி. ரவுஎஆராவ்
எம். ஆர். ராதா
ஒளிப்பதிவுஎம். கர்ணன்
படத்தொகுப்புஆர் தேவராஜன்
வெளியீடு16 மார்ச் 1962 [1]
ஓட்டம்.
நீளம்3506 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாரதா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். குடும்பக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களையே அதிகம் இயக்கியவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் இது.

கதை[தொகு]

பாடம் செல்லித்தர வந்த ஆசிரியர் சம்பந்தத்தைக் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) காதலித்து, தந்தையின் (எஸ். வி. ரங்காராவ்) எதிர்ப்பை மீறி அவரையே மணம்புரிந்தும்விடுகிறார் சாரதா. திருமணத்துக்குப் பிறகே தன் கணவனால் தாம்பத்திய வாழ்கையில் ஈடுட இயலாது என உணர்கிறாள். அவனுக்கு ஏற்பட்ட விபத்தால் ஏற்பட்ட நிலை என உணர்ந்து, அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்கிறாள்.

தன் கையாலாகாத நிலையை அறிந்த கணவன் சம்பந்தம், சாரதாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்புகிறான். சாரதாவிடமிருந்து மணவிலக்கு பெற்று, அவளுடைய மாமனையே (எஸ். ஏ. அசோகன்) மணமகனாக்குகிறான் சம்பந்தம். எல்லோரும் ஏற்றுக்கொண்டபோதும், சாரதாவால் இன்னொரு திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மரணமடைகிறாள்.

பாடல்கள்[தொகு]

  • ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டாள் அந்த உறவுக்குப் பெயரென்ன
  • மணமகளே மருமகளே வா வா
  • தட்டுத்தடுமாறி
  • கூந்தலுக்கு
  • மேலே மேலே

மேற்கோள்கள்[தொகு]

  1. Dhananjayan 2014, ப. 162.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_(திரைப்படம்)&oldid=3807025" இலிருந்து மீள்விக்கப்பட்டது