சாணைக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாணை பிடிக்கும் கருவி

சாணைக்கல் என்பது, கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்குவதற்குப் பயன்படும் ஒரு கருவியாகும். கார்போரண்டம் என்று ஆங்கிலத்தில அழைக்கப்படும் சாணைக்கல், கார்போரண்டம் என்ற பொருளால் ஆனது.இதன் வேதிப்பெயர் சிலிக்கன் கார்பைடு ஆகும். இது சிலிக்கனையும் கார்பனையும் சேர்த்து செய்யப்படும் சேர்மமாகும் .

சாணைக்கல்லின் தன்மை[தொகு]

சிலிக்கன் கார்பைடு மிகவும் கடினத்தன்மை உடைய பொருளாகும். எந்தவித வினைப்பன்களாலும் பாதிக்கப்படாதவை. அதிக வெப்பத்தைத் தாங்கும் பண்புடையது.சாணைக்கல்லை வேகமாகச் சுழலச் செய்து, அதன் மீது கூர்மையாக்க வேண்டிய பொருளை வைக்கும் பொது எதிர் உராய்வின் மூலம் அப்பொருள் கூர்மை பெருகிறது.

தயாரிப்பு[தொகு]

சிலிக்கன் டை ஆக்ஸைடு எனப்படும் வெண் மணலையும் கார்பன் எனும் கல்கரியையும் சேர்த்துக் கலவையாக்கி உயர் வெப்பத்தில் மின் உலையில் வைத்துச் சூடாக்கி சாணைக்கல் தயரிக்கப்படுகிறது. முற்காலத்தில் சாணைக்கல் செய்வதற்கு மணற்கற்களைப் பயன்படுத்தினர். சுழற்றுவதன் மூலம் கருவிகளைக் கூராக்குவதற்கு வசதியாகச் சாணைக் கற்கள் சில்லுகள் போல் வட்டவடிவமாகச் செய்யப்பட்டன. தற்காலத்தில் மணற்கற்களுக்குப் பதிலாக வேறு பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. கால்களால் மிதித்துச் சாணைக்கல்லைச் சுழற்றும் வகையிலான பொறிமுறையுடன் கூடிய சாணைபிடிக்கும் கருவிகளும் உள்ளன.

சாணைக்கல்[தொகு]

1891 ஆம் ஆண்டில் அமெரிக்கரான அச்சஸன் என்பவர், மிகுந்த கடினத்தன்மை கொண்ட வைரத்திற்கான மாற்றுப் பொருளைக் கண்டுபிடிக்க முனைந்தார். அதன் பயனாக உருவானது தான் சாணைக்கல் ஆகும்.

சாணைக்கல்லின் பயன்கள்[தொகு]

  • இது கத்தி, கத்தரிக்கோல், அரிவாள் முதலியவை மழுங்கிய சமயத்தில் சாணை பிடித்து கூர்மையாக்ப் பயன்படுகிறது .
  • அதிக அளவு வெப்பம் தாங்கும் சக்தி படைத்ததனால் ஏவுகணை , ராக்கெட் போன்றவற்றில் வெப்பம் தாங்கும் பொருளாகப் பயன்படுகிறது.
  • சாணைக்கல்லைத் தூளாக்கித் துணி,காகிதம் ஆகியவற்றில் ஒட்டிக் கடினமான மரம் முதலிய பொருள்களைத் தேய்க்கவும் (உப்பு காகிதம் போலவும்) பயன்படுத்துகின்றனர்.
  • உலோகங்களை உருக்கும் மூசையை தயரிக்கவும் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாணைக்கல்&oldid=2229636" இலிருந்து மீள்விக்கப்பட்டது