சமநிலையாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எந்த ஒரு விசை பலவிசைகளுடன் செயல்பட்டு, ஒரு புள்ளியைச் சமநிலைக்குக் கொண்டு வருகிறதோ அந்த விசை சமநிலையாக்கி (Equilibrant) எனப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட விசைகளைத் திசையன் முறையில் கூட்டும் போது தொகுபயன் விசை (அல்லது விளைவு விசை) கிடைக்கிறது. தொகுபயன் விசையும் (Resultant) சமநிலையாக்கியும் ஒன்றுக்கொன்று சமமாகவும் எதிரெதிர் திசையிலும் செயல்படுகின்றன.

கணிப்பு[தொகு]

ஒரு தொகுதி விசைகளின் (F1, F2, ....) சமநிலையாக்கி (FE) அவ்விசைகளின் தொகுபயன் விசைக்குச் (FR) சமனும் எதிரும் என்பதால் தொகுபயன் விசையைக் கணிப்பதன் மூலம் சமநிலையாக்கி விசையைக் கண்டறியலாம்.

விசைகள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும் நிலையில், அவை ஒரே திசையிலா, எதிரெதிர்த் திசையிலா உள்ளது என்பதைப் பொறுத்து அவற்றை வெறுமனே கூட்டுவதன் மூலம் அல்லது கழிப்பதன் மூலம் தொகுபயன் விசையைக் கண்டறியலாம்.

(எதிர்த்திசை)

அதேவேளை விசைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்போது அதைக் கணிப்பதற்கான சமன்பாடுகள் பின்வருமாறு:

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமநிலையாக்கி&oldid=2745843" இலிருந்து மீள்விக்கப்பட்டது