கோழிக்கோடு நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோழிக்கோடு சாமூத்திரிகள்
കോഴിക്കോട് സാമൂതിരി
12-ஆம் நூற்றாண்டு–1806
கோழிக்கோடு துறைமுகம், ஓவியம்; ஆண்டு 1572
கோழிக்கோடு துறைமுகம், ஓவியம்; ஆண்டு 1572
நிலைமுடியாட்சி
தலைநகரம்கோழிக்கோடு
பேசப்படும் மொழிகள்மலையாளம், சமஸ்கிருதம்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்நிலப்பிரபுத்துவம், முடியாட்சி
கோழிக்கோட்டின் சாமூத்திரி 
வரலாறு 
• பிற்கால சேரர்களின் வீழ்ச்சிக்குப் பின்
12-ஆம் நூற்றாண்டு
• பிரித்தானிய இந்திய அரசால் ஜமீந்தார் நிலை.
1806
நாணயம்கோழிக்கோடு பணம்
முந்தையது
பின்னையது
பிற்கால சேரர்கள்
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும் பகுதிகளும்
கோழிக்கோடு சாமூத்திரிய மன்னரின் அரசவை ஓவியம், ஆண்டு 1898


சாமூத்திரி அல்லது சமோரின் (Samoothiri - Zamorin) (மலையாளம்: സാമൂതിരി), இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலபார் கடற்கரைப் பகுதிகளை, கோழிக்கோட்டை தலைநகராகக் கொண்டு சாமூத்திரிகள் எனும் ஏராடி குல இந்து சமய மன்னர்கள் கி பி 12-ஆம் நூற்றாண்டு முதல் கி பி 17-ஆம் நூற்றாண்டு முடிய ஆண்டனர். கோழிக்கோடு தென்னிந்தியாவின் முக்கிய வணிகத் தலமாக விளங்கியது.[1]

நறுமணப் பொருட்களைத் தேடி 1498-இல் இந்தியாவின் கோழிக்கோட்டிற்கு வந்த முதல் ஐரோப்பியர், போர்ச்சுக்கல் நாட்டின் வணிகரும், மாலுமியுமான வாஸ்கோ ட காமா ஆவார்.

நாட்டின் பரப்புகள்[தொகு]

சாமூத்திரி நாட்டின் வரைபடம்

சாமூத்திரியர்கள் ஆண்ட கோழிக்கோடு நாட்டின் பகுதிகளாக குறும்பரநாடு, பையநாடு, ஏறநாடு, பொன்னானி, சேரநாடு, வெங்கிட்டா கோட்டை, மலப்புறம், கப்புல், மண்ணார்க்காடு, கரிம்புழா, நெடுங்காடு, கொல்லங்கோடு, கோட்டுவாயூர் இருந்தன.

துறைமுகங்கள்[தொகு]

புதுப்பட்டினம், கொல்லம், கோழிக்கோடு, பொன்னானி சாமூத்திரிகளின் முக்கிய துறைமுகங்கள் ஆகும்.

வரலாறு[தொகு]

கோழிக்கோடு அரசு கி பி 826-இல் நெடுயிரிப்பு சுவரூபம் எனும் பெயரில் நிறுவப்பட்டது. கோழிக்கோடு நகரம் 1026 நிறுவப்பட்டது. 1766 - 1792-ஆம் ஆண்டுகளுக்கிடையே கோழிக்கோடு அரசு மைசூர் அரசுடன் இணைக்கப்பட்டது. பின்னர் கோழிக்கோடு அரசை பிரித்தானிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zamorin". Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc., 2012. Web. 6 May. 2012 <http://www.britannica.com/EBchecked/topic/655668/Zamorin>
  2. Princely states of India
  • ^ Schwartz, Stuart.Implicit Understandings, Cambridge University Press, Cambridge, 665pp, 1994, 302. ISBN 0-521-45880-3
  • Hamilton, Alex. A new Account of the East Indies, Pinkerton's Voyages and Travels, viii. 374
  • Hart, Henry H. The Sea Road to the Indies. New York:MacMillan Company, 1950.
  • Danvers, Frederick Charles. The Portuguese in India. New York:Octagon Books, 1966.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zamorin of Calicut
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிக்கோடு_நாடு&oldid=3806841" இலிருந்து மீள்விக்கப்பட்டது