குரோவாசியா தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோவாசியா
Shirt badge/Association crest
அடைபெயர்Vatreni (The Blazers)
கூட்டமைப்புகுரோவாசிய கால்பந்துக் கூட்டமைப்பு
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்Niko Kovač
துணைப் பயிற்சியாளர்Robert Kovač
Goran Lacković
Vatroslav Mihačić
அணித் தலைவர்Darijo Srna
Most capsDarijo Srna (110)
அதிகபட்ச கோல் அடித்தவர்Davor Šuker (45)
பீஃபா குறியீடுCRO
பீஃபா தரவரிசை16
அதிகபட்ச பிஃபா தரவரிசை3 (சனவரி 1999)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை125 (மார்ச் 1994)
எலோ தரவரிசை23
அதிகபட்ச எலோ5 (சூலை 1998)
குறைந்தபட்ச எலோ26 (அக்டோபர் 2002)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
Unofficial
குரோவாசியா Croatia 2–1 ஐக்கிய அமெரிக்கா 
(சாகிரேப், குரோவாசியா; 17 October 1990)
Official
 ஆத்திரேலியா 1–0 Croatia குரோவாசியா
(மெல்பேர்ண், ஆத்திரேலியா; 5 July 1992)
பெரும் வெற்றி
குரோவாசியா Croatia 7–0 ஆத்திரேலியா 
(சாகிரேப், குரோவாசியா; 6 June 1998)
குரோவாசியா Croatia 7–0 அந்தோரா 
(சாகிரேப், குரோவாசியா; 7 October 2006)
பெரும் தோல்வி
 இங்கிலாந்து 5–1 Croatia குரோவாசியா
(இலண்டன், England; 9 September 2009)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1998 இல்)
சிறந்த முடிவுமூன்றாம் இடம், 1998
யூரோ
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1996 இல்)
சிறந்த முடிவுகாலிறுதி, 1996, 2008

குரோவாசிய தேசிய கால்பந்து அணி (Croatia national football team), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் குரோவாசியா நாட்டின் சார்பாக விளையாடும் கால்பந்து அணியாகும்; இதனை, குரோவாசிய கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. யுகோசுலேவியாவிலிருந்து விடுதலை பெறுவதற்கு சில காலம் முன்பே, 1991-ஆம் ஆண்டில் குரோவாசிய தேசிய கால்பந்து அணி அமைக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் ஃபிஃபா மற்றும் யூஈஎஃப்ஏ ஆகியவற்றில் உறுப்பினராக இணைந்தது.[1]

பல நட்புமுறைப் போட்டிகளுக்குப் பிறகு, யூரோ 1996-க்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இவ்வணி பங்குகொண்டது. அதன்மூலம், முதன்முறையாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பன்னாட்டுப் போட்டிக்கு குரோவாசிய அணி தகுதிபெற்றது. 1998-ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற குரோவாசிய அணி, அதில் சிறப்பாக செயல்பட்டு மூன்றாம் இடத்தில் முடித்தது. மேலும், அப்போட்டியின் அதிக கோல் அடித்த வீரர் டேவிட் சுகெர் குரோவாசிய அணியைச் சேர்ந்தவராவார். பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் தகுதியைப் பெற்றபிறகு, குரோவாசிய அணி ஒரு உலகக்கோப்பையிலும் ஒரு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியிலும் மட்டுமே பங்குபெறாமல் இருந்திருக்கிறது.[2]

1994 மற்றும் 1998-ஆம் ஆண்டுகளில் சிறந்த முன்னேற்றம் காட்டிய அணி என்ற பெருமைக்கு உரித்தானது. கொலம்பியாவைத் தவிரத்து குரோவாசிய அணி மட்டுமே அவ்விருதை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் வாங்கியிருக்கிறது.[3][4] ஃபிஃபாவில் இணைந்தபோது தரவரிசையில் 125 வது இடத்தில் இருந்த குரோவாசியா, 1998-ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பின்னர் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது. இவ்வாறு, மிகச்சிறந்த அளவில் மேம்பாடு காண்பிக்கும் அணியாக குரோவாசியா இருக்கிறது.[5][6][7]

குறிப்புதவிகள்[தொகு]

  1. "Goal Programme – Croatian Football Federation – 2006". Fédération Internationale de Football Association (FIFA.com). 17 July 2008. Archived from the original on 2010-05-10. பார்க்கப்பட்ட நாள் 2008-09-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Fantasy Euro2008". The World Game. பார்க்கப்பட்ட நாள் 2008-08-03.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-10. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "FIFA Best Mover of the Year awards". Fédération Internationale de Football Association (FIFA.com). Archived from the original on 2008-07-20. பார்க்கப்பட்ட நாள் 2008-07-23. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Croatia follow in golden footsteps". Fédération Internationale de Football Association (FIFA.com). 7 August 2008. Archived from the original on 2008-08-26. பார்க்கப்பட்ட நாள் 2008-08-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "Croatia eyeing top ten". Fédération Internationale de Football Association (FIFA.com). 3 March 2007. Archived from the original on 2008-12-06. பார்க்கப்பட்ட நாள் 2008-08-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. "Croatia – FIFA World Rankings". Fédération Internationale de Football Association (FIFA.com). Archived from the original on 2012-06-08. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளியிணைப்புகள்[தொகு]