குமாவுன் கோட்டம்

ஆள்கூறுகள்: 29°36′N 79°42′E / 29.6°N 79.7°E / 29.6; 79.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டம் (ஆரஞ்சு நிறம்) மற்றும் கார்வால் கோட்டம் (மஞ்சள் நிறம்)

குமாவுன் கோட்டம் (Kumaon Division) இந்தி: कुमाऊं) வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் இரண்டு கோட்டங்களில் ஒன்றாகும். மற்றது கார்வால் கோட்டம் ஆகும். இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நைனிடால் நகரத்தில் உள்ளது. மேலும் உத்தரகண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரத்தில் அமைந்துள்ளது. [1] குமாவுன் கோட்டத்தில் பெரும்பாலும் குமாவுனி மொழி பேசும் குமாவுனி மக்கள் வாழ்கின்றனர். இந்திய விடுதலைக்கு முன்னர் வரை இக்கோட்டப் பகுதிகளை குமாவுன் இராச்சியத்தினர் ஆண்டனர்.

மாவட்டங்கள்[தொகு]

குமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

  1. பித்தோரகர்
  2. பாகேஸ்வர்
  3. அல்மோரா
  4. சம்பாவத்
  5. நைனித்தால்
  6. உதம்சிங் நகர்

கோடைக்கால வாழிடங்கள்[தொகு]

குமாவன் கோட்டத்தில் அமைந்துள்ள முக்கிய கோடைக்கால வாழிடங்கள் நைனிடால் மற்றும் அல்மோரா நகரங்களாகும்.

புவியியல்[தொகு]

நைனிடால் ஏரி
அல்மோராவில் பாயும் கோசி ஆறு
சுகௌலி ஒப்பந்தத்தின் விளைவாக நேபாளம் மற்றும் இந்தியா நிலப்பரப்புகளில் ஏற்பட்ட மாறுதல்கள்

இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்த குமாவுன் கோட்டத்தில் கோசி ஆறு மற்றும் சாரதா ஆறுகள் பாய்கிறது. குமாவுன் கோட்டத்தின் வடக்கே திபெத், தெற்கே உத்தரப் பிரதேசம், கிழக்கே நேபாளம், மேற்கே கார்வால் கோட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்கள், இந்தியாவில் தங்களது ஆட்சிப் பரப்பை விரிவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், நேபாளிகள், மேற்கில் உள்ள குமாவுன் கோட்டம் மற்றும் கார்வால் கோட்டங்களை வென்றதுடன், கிழக்கில் உள்ள சிக்கிம் நாட்டையும், டார்ஜீலிங் பகுதிகளையும் வென்று நேபாள இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர்.

1814-1816 ஆங்கிலேய-நேபாளப் போருக்குப் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் நேபாள இராச்சியத்தின் உயர் அதிகாரிகள் 4 மார்ச் 1816 அன்று இந்தியாவின் தற்கால பிகார் மாநிலத்தின் சுகௌலி எனும் ஊரில் வைத்து சுகௌலி உடன்பாட்டில் கையொப்பமிட்டனர். [2]இந்த உடன்படிக்கையின் படி, ஏற்கனவே நேபாள இராச்சியம் கைப்பற்றியிருந்த சிக்கிம், டார்ஜிலிங், குமாவுன், கார்வால் மற்றும் மேற்கு தராய் பகுதிகளை ஆங்கிலேயர்களுக்கு விட்டுத்தர ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் நேபபாள இராச்சியத்தின் கிழக்கு எல்லையாக மேச்சி ஆறும், மேற்கு எல்லையாக சாரதா ஆறும் நேபாள இராச்சியத்தின் எல்லையாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாவுன்_கோட்டம்&oldid=3777083" இலிருந்து மீள்விக்கப்பட்டது