கீசகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீசகனுக்கு கவலையுடன் திரௌபதி பால் எடுத்துச் செல்தல்
கீசகனும் சைரந்திரி எனும் திரௌபதியும்


கீசகன், மகாபாரதக் கதை மாந்தர்களில் ஒருவன். இவன் மத்சய நாட்டு அரசன் விராடனின் பட்டத்து ராணி சுதேஷ்ணையின் தம்பியும், நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான்.

துரியோதனுடன் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களும் திரௌபதியும், சூதாட்ட விதியின்படி, விராட நாட்டு அரசவையில் பல பணிகளில் அமர்ந்து ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு வந்தனர். திரௌபதி, சைரந்திரி எனும் பெயரில் விராட அரசனின் மனைவி சுதோசனாவிற்கு பணிப்பெண்னாக ஏவல் செய்யும் பணி மேற்கொண்டாள்.

அவ்வமயம் சைரந்திரியின் பேரழகைக் கண்ட கீசகன் அவளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி தன் தங்கை சுதோசானவிடம் அடம்பிடித்தான். வேறு வழியறியாத விராடநாட்டு ராணி சைரந்திரியை கீசகன் மாளிகைக்குச் சென்று மதுபானம் எடுத்துவர ஆணையிட்டாள். சைரந்திரி அங்கு சென்றபோது கீசகன் அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பிய சைரந்திரி, அந் நாட்டு அரசவை சமையற்கூடத்தில் வல்லாளன் எனும் பெயரில் பணிபுரியும் பீமனை ரகசியமாகச் சந்தித்து விவரத்தைக் கூறி கீசகனைக் கொல்லும்படி கேட்டுக் கொண்டாள்.

வல்லாளனாக இருந்த பீமன் வகுத்த திட்டப்படி, சைரந்திரி கீசகனிடம் சென்று அடுத்தநாள் இரவு அரசவையில் உள்ள நாட்டியச்சாலையில் தன்னை சந்திக்கச் சொன்னாள். நாட்டியசாலையில் பெண் வேடமணிந்து கட்டிலில் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த பீமனை, சைரந்திரி என எண்ணி கீசகன் காமவெறியுடன் அணுக, பெண் வேடமணிந்திருந்த பீமன் கீசகனுடன் போரிட்டுக் கொன்று[1], சைரந்திரியை மீட்டான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கீசகனைக் கொன்ற பீமன்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கீசகன்&oldid=3725100" இலிருந்து மீள்விக்கப்பட்டது