காத்தரினா சுகார்பெல்லினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காத்தரினா சுகார்பெல்லினி
Caterina Scarpellini
பிறப்பு(1808-10-29)29 அக்டோபர் 1808
பொலிகுனோ
இறப்பு28 நவம்பர் 1873(1873-11-28) (அகவை 65)
பொலிகுனோ
தேசியம்இத்தாலிய அரசு
பணிவானியலாளர், வானிலையியலாளர்
அறியப்படுவதுஒரு வால்வெள்ளி கண்டுபிடிப்பு

காதரினா சுகார்பெல்லினி (Caterina Scarpellini) (29 அக்தோபர் 1808 – 28 நவம்பர் 1873) ஓர் இத்தாலிய வானியலாளரும் வானிலையியலாளரும் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் போலிகுனோவில் 1808 அக்தோபர் 29 இல் பிறந்தார். இவர் தன் 18 ஆம் அகவையில் உரோம் நகருக்கு இடம்பெயர்ந்தார். இவர் உரோமக் காம்பிடோகுலியோ வான்காணகத்தில் இயக்குநராக இருந்த தன் மாமாவிடம் உதவியாளராகப் பணிபுரிந்தார். இவர் புளோரன்சில் உள்ள கியோர்கோபில்லி கல்விக்கழகத்தில் செயலாண்மை உறுப்பினராக இருந்தார்.[1]

இவர் 1854 ஏப்பிரல் 1 இல் ஒரு வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார். இவர்1856 இல் உரோம் நகரில் வானிலையியல் நிலையம் ஒன்றை நிறுவினார். இவர் 1872 இல் தன் பணிகளுக்காக இத்தாலிய அரசால் பாராட்டப்பட்டார்; இவர் 1873 நவம்பர் 28 இல் இறந்தார்.[2][3][4]

வெள்லியில் உள்ள குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்லது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Logan, Gabriella Berti. "Caterina Scarpellini: Astronomy and Meteorology in Risorgimento Rome". பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
  2. "SIUSA - Scarpellini Caterina". siusa.archivi.beniculturali.it (in இத்தாலியன்). Archived from the original on 20 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 October 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Popular Astronomy, March 1898, p. 217.
  4. The Observatory, vol. 22 no. 282 (August 1899), p. 297-98.
  5. "Planetary Names: Crater, craters: Scarpellini on Venus". planetarynames.wr.usgs.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 October 2017.