காசியான்டெப் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசியான்டெப் மாகாணம்
Gaziantep ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் காசியான்டெப் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் காசியான்டெப் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிதென்கிழக்கு அனதோலியா
துணைப்பகுதிகாசியான்டெப்
அரசு
 • தேர்தல் மாவட்டம்காசியான்டெப்
 • ஆளுநர்தாவுத் கோல் [1]
பரப்பளவு
 • மொத்தம்7,194 km2 (2,778 sq mi)
தொலைபேசி குறியீடு0342
வாகனப் பதிவு27
காசியான்டெப் மாகாணத்தின் நிலப்பரப்பு

காசியான்டெப் மாகாணம் (Gaziantep Province, துருக்கியம்: Gaziantep ili ) என்பது தென்-மத்திய துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இதன் தலை நகரம் காஜியண்டெப் ஆகும். இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 2015 ஆம் ஆண்டு 1.931.836 என்று இருந்தது. இதன் அண்டை எல்லைகளாக வடக்கே அத்யமான், கிழக்கே சான்லுர்பா, தெற்கே சிரியா மற்றும் கிலீஸ், தென்மேற்கே கத்தே, மேற்கில் உஸ்மானியே, வடமேற்கில் கஹ்ரமன்மாரா ஆகியவை உள்ளன.

இது பண்டைய காலங்களிலிருந்தே ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்துள்ளது. இந்த மாகாணம் துருக்கியின் முக்கிய உற்பத்தி மண்டலங்களில் ஒன்றாகும். இதன் முக்கிய வேளாண் உற்பத்தியில் பசுங்கொட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது.

பண்டைய காலங்களில், முதலில் யம்ஹாத்தின் அதிகாரத்தின் கீழும், பின்னர் இட்டைட்டுகளும் பின்னர் அசீரியர்களாலும் இப் பிராந்தியம் கட்டுப்படுத்தப்படது. இப்பகுதியானது சிலுவைப் போரின் போது அதிக போர்களைக் கண்டது. மேலும் 1183 இல் சலாகுத்தீன் ஒரு முக்கிய போரில் வெற்றி பெற்றார். முதலாம் உலகப் போருக்கும் உதுமானியப் பேரரசின் சிதைவுக்கும் பின்னர், துருக்கிய சுதந்திரப் போரின்போது பிரெஞ்சு மூன்றாம் குடியரசின் படைகள் படையெடுத்துவந்தன. லொசேன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர் இப்பகுதி மீண்டும் துருக்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இது துருக்கியுக்கும் முதலாம் உலகப் போரின் நட்பு நாடுகளுக்கும் இடையிலான விரோதப் போக்கை முறையாக முடிவுக்குக் கொண்டுவந்தது.

காசி என்ற பட்டம் (துருக்கியில் மூத்தவர் என்று பொருள்) கொண்ட ஆன்டெப் என்பவர் 1921 ஆம் ஆண்டில் துருக்கிய சுதந்திரப் போரின் செயல்பாடின் காரணமாக மாகாணம் மற்றும் மாகாண தலைநகரின் பெயரில் இவரின் பெயர் சேர்க்கப்பட்டது.

1994 இல் பிரிக்கப்படும் வரை இது கிலிஸ் மாகாணம் காசியான்டெப் மாகாணம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருந்தது. மாகாணத்தில் துருக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். [2]

மாவட்டங்கள்[தொகு]

காசியான்டெப் கோட்டையிலிருந்து ஒரு தோற்றம்
  • அரபன்
  • இஸ்லாஹியே
  • கர்கமா
  • நிசிப்
  • நூர்தா
  • ஓசுசெலி
  • சாகின்பே
  • செகிட்கமில்
  • யவுசெலி

குறிப்புகள்[தொகு]

  1. "Yeni Valiler Kararnamesi Resmi Gazete'de yayımlandı: 39 ilin valisi değişti". Haberturk.com. 27 October 2018. Archived from the original on 25 November 2018. பார்க்கப்பட்ட நாள் 4 November 2018.
  2. Khanam, R. (2005). Encyclopaedic Ethnography of Middle-East and Central Asia. A-I, V. 1. Global Vision Publishing House. பக். 470. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788182200623. https://books.google.com/books?id=bnuGcAZR14IC&pg=PA361. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசியான்டெப்_மாகாணம்&oldid=3072259" இலிருந்து மீள்விக்கப்பட்டது