காஃகுமானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஃகுமானு
ஹவாய் அரசி
ஹவாயின் (ஆட்சி செய்யாத) அரசி
ஆட்சிக்காலம்1795–1819
முன்னையவர்இல்லை பின்னர்
கெகுயபோய்வா லிலிகா
பின்னையவர்அரசி காமமாலு
காயுயையின் பட்டத்து அரசி
ஆட்சிக்காலம்முதல்முறை ஆட்சி
இரண்டாம்முறை ஆட்சி
முன்னையவர்டேபோரா கபுலே
பின்னையவர்ஒழிக்கப்பட்டது
ஆட்சிக்காலம்1821–1832
குஹினா நுயை
ஆட்சிக்காலம்மே 20, 1819 – சூன் 5, 1832
(13 ஆண்டுகள், 16 நாட்கள்)
முன்னையவர்புது உருவாக்கம்
பின்னையவர்காஃகுமானு II
பிறப்பு(1768-03-17)மார்ச்சு 17, 1768
ஹவாயின் ஹனா பகுதி குகை ஒன்றில்
இறப்புசூன் 5, 1832(1832-06-05) (அகவை 64)
ஹொனலுலு அருகே
புதைத்த இடம்
ஹவாயின் அரச கல்லறை
துணைவர்காமேஃகாமெகா I
கௌமுவாலீ
கீலீய்கோநுயை
பெயர்கள்
எலிசபெத் காஃகுமானு
மரபுகாமெஃகாமெகா
கேகௌலிகே
தந்தைகீயௌமோகு II பாபையகியகி
தாய்நமஹன

எலிசபெத் காஃகுமானு (Elizabeth Kaʻahumanu) (மார்ச்சு 17, 1768–சூன் 5, 1832) ஹவாய் இராச்சியத்தின் இணை அரசராகவும் காமேஃகாமெகா I அரசரின் மனைவியாகவும் இருந்தவர். அரசரின் மிகவும் விரும்பப்பட்ட மனைவியாகவும் மிகுந்த அரசியல் செல்வாக்குப் பெற்றவராகவும் விளங்கினார். தனது கணவரின் மறைவிற்குப் பிறகு, அரசிகள் கோலோச்ச முடியாத ஹவாய் இராச்சியத்தில் தனது மகனுடன் இணைந்து ஆட்சி செய்ய, மறைந்த அரசரின் விருப்பம் என அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, குஹினா நுயை என்ற புதிய பதவியை உருவாக்கி ஆட்சி புரிந்தவர்.

ஒரே மேசையில் ஆண்களுடன் பெண்கள் உண்ண இயலாத சமூகத்தில் தனது அரசிளங்குமரனுடன் ஒரே மேசையில் உணவருந்தி "உணவுண்ணும் விடுதலை"யை ஹவாயில் தனதாட்சியின்போது பெற்றுத் தந்தார்.சீர்திருத்தத் திருச்சபையில் 1824ஆம் ஆண்டு சேர்ந்த காஃகுமானு தனது நாட்டுமக்களையும் மதம் மாற வற்புறுத்தினார்.பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஹவாய் சட்டங்களை இயற்றினார். தனது மதக்குருமார்களின் உந்துதலால் ஹொனலுலுவில் இருந்த ரோமன் கத்தோலிக்க மாதாகோவிலை மூடச்செய்தார். கத்தோலிக்க மதத்தை பின்பற்றுவதை தடையும் செய்தார். ஐக்கிய அமெரிக்காவடன் நல்லிணக்க உடன்பாடு கொண்டிருந்தார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஃகுமானு&oldid=3603388" இலிருந்து மீள்விக்கப்பட்டது