2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கர்நாடகா சட்டமன்ற தேர்தல், 2018 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

← 2013 12 மே 2018 (222 தொகுதிகள்)
28 மே 2018 (2 தொகுதிகள்)
2023 →

கர்நாடக சட்டமன்றத்தின் 224 தொகுதிகளிலிருந்து 222 தொகுதிகள்
113 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
வாக்களித்தோர்72.13%[1]
  Majority party Minority party Third party
 
தலைவர் பி. எஸ். எடியூரப்பா சித்தராமையா எச். டி. குமாரசாமி
கட்சி பா.ஜ.க காங்கிரசு ஜத(ச)
கூட்டணி ஜத(ம) + பசக
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ஷிகரிபுரா பாதமி சன்னபட்ணா
முன்பிருந்த தொகுதிகள் 40 122 40
வென்ற
தொகுதிகள்
104 78 38 + 1 (பசக)
மாற்றம் 64 44 2
மொத்த வாக்குகள் 13,185,384 13,824,005 6,666,307
விழுக்காடு 36.2% 38% 18.3%
மாற்றம் 16.3% 1.4% 1.9%

தேர்தல் முடிவுகள்

முந்தைய முதலமைச்சர்

சித்தராமையா
(இந்திய தேசிய காங்கிரசு)

முதலமைச்சர் -தெரிவு

எச். டி. குமாரசாமி
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)

கர்நாடகா மாநிலத்தின் மொத்தமுள்ள 224 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததாலும்; ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த சர்ச்சையாலும், தேர்தல் ஆணையம் இரு தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைத்தது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 12 மே 2018 அன்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இந்த தேர்தலில் 72.13% வாக்குகள் பதிவானது.[2]

தேர்தல் முடிவுகள்[தொகு]

15 மே 2018 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[3][4] 15 மே 2018 வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.[5][6]

Parties and coalitions Popular vote Seats
Votes % ±pp Won +/−
பாரதிய ஜனதா கட்சி (BJP) 1,31,85,384 36.2 16.3 104 64
இந்திய தேசிய காங்கிரசு (INC) 1,38,24,005 38.0 1.4 78 44
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) (JDS) 66,66,307 18.3 1.9 37 3
Independents (IND) 14,37,045 3.9 3.5 1 8
பகுஜன் சமாஜ் கட்சி (BSP) 1,08,592 0.3 1 1
கர்நாடக பிரக்ஞயவந்த ஜனதா கட்சி 74,229 0.2 1 1
Other parties and candidates 6,83,632 2.2 0 13
மேலே இல்லை 3,22,841 0.9
காலி இடங்கள் 2 2
Total 100.00 224 ±0

பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பா முதல்வர் வேட்பாளர் வென்றார். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சித்தராமையா பதாமி தொகுதியில் மட்டும் வென்றார்.

தேர்தல் முடிவில் எந்த அரசியல் கட்சிக்கு ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் அதிக தொகுதிகளில் வென்ற பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் அழைத்துள்ளார். இதனை எதிர்த்து இந்திய காங்கிஸ் கட்சி, உச்சநீதிமன்றத்தில், 17 மே 2018 அன்று இரவில் அவசர வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த இந்திய உச்சநீதிமன்றம் 18 மே 2018 அன்று மாலை 4 மணி அளவில் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிருபிக்க எடியூரப்பாவிற்கு ஆணையிட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka election highlights rural-urban divide: State witnesses highest voter turnout, but Bengaluru stays away" (in English). Firstpost. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018. The 72.13 percent voter turnout for the Karnataka Assembly elections has broken all records and is the highest recorded in the state since the 1952 polls, Chief Electoral Officer Sanjeev Kumar said on Saturday.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Karnataka election highlights rural-urban divide: State witnesses highest voter turnout, but Bengaluru stays away" (in English). Firstpost. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018. The 72.13 percent voter turnout for the Karnataka Assembly elections has broken all records and is the highest recorded in the state since the 1952 polls, Chief Electoral Officer Sanjeev Kumar said on Saturday.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Karnataka Assembly Election Results 2018
  4. Karnataka Election Results 2018: All FAQs Answered Here
  5. Karnataka Election Results 2018
  6. [1]
  7. கர்நாடகா: எடியூரப்பா நாளை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் ஆணை