கர்ஜனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்ஜனை
இயக்கம்சி. வி. இராசேந்திரன்[1]
தயாரிப்புஇராம் கிசன்
இராமகிருட்டிணன்
கிரிதர்லால் சந்த்
கதைபஞ்சு அருணாசலம் (தமிழ் வசனகர்த்தா)
இசைஇளையராஜா
நடிப்புஇரசினிகாந்து
மாதவி
கீதா
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புஆர். ஜி. கோபு
கலையகம்ஹேம் நாக் பிலிம்ஸ்
விநியோகம்ஹேம் நாக் பிலிம்ஸ்
வெளியீடு7 ஆகத்து 1981 (தமிழ்)
14 ஆகத்து 1981 (மலையாளம்)
23 அக்டோபர் 1981 (கன்னடம்)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
கன்னடம்
மலையாளம்

கர்ஜனை (Garjanai) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் மலையாளத்தில் கர்ஜனம் என்றும் கன்னடத்தில் கர்ஜனே என்றும் படமாக்கப்பட்டது. இந்தப் படம் இந்தியத் திரைப்படத்தின் அதிரடி - சாகச நாயகனான ஜெயன் என்பவரைக் கொண்டுத் தொடங்கப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

தமிழ் பதிப்பு
மலையாள பதிப்பு
  • பாலன் கே. நாயர்
  • குதிரவட்டம் பாப்பு
  • சுகுமாரி
  • இரவிக்குமார்
  • ஜெயன் (சிறப்புத் தோற்றம்)
கன்னட பதிப்பு

தயாரிப்பு[தொகு]

மூன்று பதிப்புகளும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டன . மலையாள பதிப்பான கர்ஜனத்தின் முதலில் முன்னணி நடிகராக ஜெயன் இருந்தார். பாதி படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில், கோலிலக்கம் என்ற மற்றொரு படத்தின் படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான அவர், படுகாயமடைந்தார். அதன்பிறகு, இரசினிகாந்த் அதே கதாபாத்திரத்தில் நடித்து கர்ஜனம் முடிந்தது. கேரளாவில் திரையிடல்களில் வரவுகளுக்கு முன்னர் ஜெயனின் சில காட்சிகளும் படத்தின் தொடக்கக் காட்சிகளில் சேர்க்கப்பட்டன.[2]

பாடல்கள்[தொகு]

தமிழ் பாடல்கள்[தொகு]

அனைத்து பாடல்களையும் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் ஆகிய இருவரும் எழுதி இளையராஜா இசையமைதிருந்தார்.[3]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (நி.:வி)
1 "என்ன சுகமான உலகம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், உமா ரமணன் பஞ்சு அருணாசலம் 4:41
2 "ஒரு ஊரில் ஒரு மகராணி" மலேசியா வாசுதேவன் கண்ணதாசன் 4:27
3 "குத்தும் ஓசை" வாணி ஜெயராம் 4:09
4 "வந்தது நல்லது" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:46
5 "வருவாய் அன்பே" டி. கே. எஸ். கலைவாணன், எஸ். ஜானகி பஞ்சு அருணாசலம் 5:04

மலையாளப் பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் மற்றும் பாடல்களை ஸ்ரீகுமரன் தம்பி எழுதியுள்ளார்.

எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 "என் புலர்காலம்" எஸ்.ஜானகி, பி.ஜெயச்சந்திரன் ஸ்ரீகுமாரன் தம்பி
2 "ஒரு மொஹத்தின்" எஸ்.ஜானகி, பி.ஜெயச்சந்திரன் ஸ்ரீகுமாரன் தம்பி
3 "ஒரு தெரில்" பி. ஜெயச்சந்திரன், கோரஸ் ஸ்ரீகுமாரன் தம்பி
4 "பெண்ணின் கண்ணில் விரியும்" வாணி ஜெயராம் ஸ்ரீகுமாரன் தம்பி
5 "தம்புராட்டி நின் கொட்டாரத்தில்" பி்.ஜெயச்சந்திரன் ஸ்ரீகுமாரன் தம்பி
6 "வண்ணத்து நல்ல நாள்" (Vannathu Nallathu Nalla Dinam) எஸ்.ஜானகி, பி.ஜெயச்சந்திரன், கோரஸ் ஸ்ரீகுமாரன் தம்பி

கன்னட பாடல்கள்[தொகு]

எண். பாடல் பாடகர்கள் நீளம்
1. "பந்தேயா பந்தேயா" எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி 4:46
2. "ஹிதவகிதே" பி.ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி 5:02
3. "கண்ணா மிஞ்சிந்தா" எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி 4:40
4. "நதேவகா" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:25
5. "நன்னா ரூபா" வாணி ஜெயராம் 3:49

மேற்கோள்கள்[தொகு]

  1. "Garjanai". cinesouth. Archived from the original on 7 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 6 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Naman Ramachandran (2012). Rajinikanth: The Definitive Biography. Penguin Books. பக். 120. 
  3. "Garjanai Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 6 October 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ஜனை&oldid=3594369" இலிருந்து மீள்விக்கப்பட்டது