கண்ட்லா துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ட்லா துறைமுகம்
કંડલા
துறைமுகநகர்
நாடு இந்தியா
குஜராத்குஜராத்
மாவட்டம்கட்ச் மாவட்டம்
ஏற்றம்3 m (10 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்15,782 [1]
மொழிகள்
 • அலுவலக மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGJ-12

கண்ட்லா அல்லது கண்ட்லா துறைமுகம் அல்லது புது கண்ட்லா (Kandla, also Kandla Port or New Kandla) (குசராத்தி: કંડલા) இந்தியா வின் மேற்குப் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்த துறைமுக நகரம். கட்ச் வளைகுடாவில் கண்ட்லா துறைமுகம் அமைந்துள்ளது. சரக்குகளை கையாள்வதில் மற்ற பெரிய இந்திய துறைமுகங்களுக்கு நிகரானது.

கண்ட்லா துறைமுகம், கப்பல்களில் சரக்குகளை கப்பல்களில் ஏற்றி இறக்குவதில் இந்தியாவில் முதல் இடத்தை வகிக்கிறது. கண்டலா துறைமுகம், தனியார் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து எண்ணெய் சுத்திரிகரிப்பு ஆலைகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.


பொருளாதாரம்[தொகு]

1965இல் துவக்கப்பட்ட கண்டலா சிறப்புப் பொருளாதார மண்டலம், இந்தியாவின் மிகப்பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகும்.[2] [3]. இந்தியாவின் முதல் கட்டற்ற ஏற்றுமதி துறைமுகம் கண்ட்லா துறைமுகம் ஆகும். [4]கண்ட்லா துறைமுகத்திலிருந்து ஒன்பது கி. மீ.. தொலைவில் உள்ள கண்ட்லா சிறப்பு பொருளாதார மண்டலம் 310 ஹெக்டர் பரப்பளவு கொண்டது கண்டலா துறைமுகம் உப்பு, துணிகள், தானியங்களை ஏற்றுமதி செய்வதாலும், கச்சா இரும்பு, எக்கு, இயந்திரங்கள், எண்ணெயை இறக்குமதி செய்வதாலும் அதிக வருவாய் ஈட்டும் துறைமுகமாக உள்ளது. [5] துறைமுகத்தை ஒட்டியுள்ள வளர்ந்து வரும் புது கண்ட்லா நகரம் பல்வேறு தங்கும் விடுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ட்லா_துறைமுகம்&oldid=3497546" இலிருந்து மீள்விக்கப்பட்டது