ஒப்பேரா நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒப்பேரா நடவடிக்கை
பகுதி: அரபு-இசுரேல் முரண்பாடு

தாக்குதல் வரைபடம்
நடவடிக்கையின் நோக்கம் தந்திரோபாயம்
இடம் பாக்தாத், ஈராக்
33°12′30″N 44°31′30″E / 33.20833°N 44.52500°E / 33.20833; 44.52500
திட்டமிடல் மெனசெம் பெகின் (பிரதம மந்திரி)
டேவிட் இவ்ரி (வான் படைத் தளபதி)
இலக்கு "ஒசிரக்" அணுக்கரு உலையினை அழித்தல்
திகதி 7 சூன் 1981
செயற்படுத்தியோர் இசுரேலிய விமானப்படை
விளைவு வெற்றி, உலை அழிக்கப்பட்டது
பாதிக்கப்பட்டோர் 10 ஈராக்கிய படையினர் கொல்லப்படல்
1 பிரான்சியர் கொல்லப்படல்

ஒப்பேரா நடவடிக்கை (Operation Opera, எபிரேயம்: מִבְצָע אוֹפֵּרָה‎)[1] அல்லது பாபிலோன் நடவடிக்கை[2] என்பது ஈராக் நாட்டின் மீது இசுரேல் 7 சூன் 1981 அன்று நடத்திய எதிர்பாராத வான் தாக்குதல் நடவடிக்கையாகும். இத்தாக்குதல் மூலம் ஈராக்கின் பாக்தாத் நகருக்குத் தென்கிழக்கில் 17 கி.மி. (10.5 மைல்) தூரத்தில் அமைந்திருந்த, கட்டுமானம் நிறைவேறாதிருந்த அணுக்கரு உலை அழிக்கப்பட்டது.[3][4][5]

பிரான்சிடமிருந்து ஒசைரிஸ் வகுப்பு அணுக்கரு உலையினை ஈராக் 1976-ஆம் ஆண்டு வாங்கியது.[6][7] ஒசிரக் என்று பிரான்சால் பெயரிடப்பட்ட அணு உலையின் நோக்கம் அமைதியான அறிவியல் ஆய்வையே நோக்கமாகக் கொண்டது என்று பிரான்சும் ஈராக்கும் உரைத்தன.[8] இருப்பினும், இசுரேல் அதனைச் சந்தேகத்துடன் நோக்கி, அது அணு ஆயுதங்கள் உருவாக்க வடிவமைக்கப்பட்டதாகவும், அதன் மூலம் அரபு-இசுரேல் முரண்பாடு அதிகமாகக்கூடும் என்றும் கருதியது.[3] எனவே, 7 சூன் 1981 அன்று இசுரேலிய விமானப்படையின் ஆறு எப்-15A விமானங்களின் பாதுகாப்புடன், எட்டு எப்-16 தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தி, ஒசிரக் அணுக்கரு உலையினைப் பாரிய அழிவுக்குட்படுத்தின.[9] இசுரேல் தற்பாதுகாப்பிற்காக அதனைச் செய்ததாகவும், ஒரு மாதத்திற்கும் குறைந்த காலத்தில் அது ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பிருந்ததாகவும் கூறியது.[10] பத்து ஈராக்கியப் படையினரும் ஒரு பிரான்சியக் குடிமகனும் கொல்லப்பட்டனர்.[11]

ஈராக்கின் ஒசிராக் அணு உலையின் அழிவு பன்னாட்டு சட்டத்தின் நிகழ்கால அறிஞர்களால் ஒரு முன்தடுப்புமுறைத் தாக்குதலுக்கான ஒரு எடுத்துக்காட்டாகச் சுட்டப்படுகிறது.[12] ஈராக்கை அணுவாற்றல் திறன் கொள்ளும் நிலையின் விளிம்பிலிருந்து பின்னிழுத்த வகையிலும், ஈராக்கின் போர்க்கருவிகள் திட்டத்தை மறைவாக நிகழ்த்துமாறு செயத வகையிலும், எதிர்காலத்தில் அணு ஆயுதங்களைக் கைகொள்ளும் சதாம் உசைனின் குறிக்கோளை உறுதிப்படுத்திய வகையிலும், இத்தாக்குதலின் செயல்வன்மை வரலாற்றாசிரியர்களால் விவாதிக்கப்படுகிறது.[13]

குறிப்புக்கள்[தொகு]

  1. Perlmutter, p. 172.
  2. Amos Perlmutter, Michael I. Handel, Uri Bar-Joseph. Two Minutes over Baghdad. Routledge (2nd ed.), 2008. p. 120.
  3. 3.0 3.1 "1981: Israel bombs Baghdad nuclear reactor". BBC News (British Broadcasting Corporation). 7 June 1981. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/june/7/newsid_3014000/3014623.stm. பார்த்த நாள்: 30 November 2010. 
  4. Donald Neff (1995). "Israel Bombs Iraq's Osirak Nuclear Research Facility". Washington Report on Middle East Affairs (Andrew I. Kilgore): 81–82. http://www.washington-report.org/backissues/0695/9506081.htm. பார்த்த நாள்: 30 November 2010. 
  5. Anthony Fainberg (1981). "Osirak and international security". The Bulletin of the Atomic Scientists (Educational Foundation for Nuclear Science, Inc.) 37 (8): 33–36. doi:10.1080/00963402.1981.11458896. Bibcode: 1981BuAtS..37h..33F. https://books.google.com/books?id=PQsAAAAAMBAJ&q=nuclear+fuel+osirak&pg=PA33. பார்த்த நாள்: 30 November 2010. 
  6. Ramberg, Bennett. Nuclear Power Plants as Weapons for the Enemy: An Unrecognized Military Peril. University of California Press, 1985. p. xvii.
  7. Cordesman, Anthony H. Iraq and the War of Sanctions: Conventional Threats and Weapons of Mass Destruction. Praeger, 1999. p. 605.
  8. The 1982 World Book Year Book. World Book Inc., 1983. p. 350.
  9. Shirley V. Scott, Anthony Billingsley, Christopher Michaelsen. International Law and the Use of Force: A Documentary and Reference Guide. Praeger, 2009. p. 182.
  10. Scott, p. 132.
  11. Polakow-Suransky, Sasha. The Unspoken Alliance: Israel's Secret Relationship with Apartheid South Africa. Pantheon (1 ed.), 2010. p. 145.
  12. Shue, Henry and Rhodin, David (2007). Preemption: Military Action and Moral Justification. Oxford University Press. p. 215.
  13. "Osirak: Threats real and imagined". 5 June 2006. http://news.bbc.co.uk/2/hi/middle_east/5009212.stm. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பேரா_நடவடிக்கை&oldid=3776040" இலிருந்து மீள்விக்கப்பட்டது