எர்மெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்மெசு
எர்மெசு
இடம்ஒலிம்பசு மலை
துணைமிரோப், அப்ரோடிட், டிரையோப், பெய்தோ, எகேட்
பெற்றோர்கள்சியுசு மற்றும் மையா
சகோதரன்/சகோதரிசியுசின் அனைத்துப் பிள்ளைகளும்
குழந்தைகள்பான்(கடவுள்), எர்மாப்ரோடிட்டசு, டைச்சி, அப்டெரசு, ஆட்டோலைகசு, ஏஞ்சலியா, மைர்டிலசு

எர்மெசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஓர் ஒலிம்பியக் கடவுள் ஆவார். இவர் கிரேக்கக் கடவுள்களின் தூதுவராக இருக்கிறார். இவர் சாலை மற்றும் பயணிகளின் பாதுகவலனாகக் கருதப்படுகிறார். ரோம கடவுளான மெர்க்குரி எர்மெசுக்கு இணையானவர்.

எர்மெசு மற்றும் அப்பல்லோ[தொகு]

எர்மெசு சிறுவனாக இருந்த போது அப்பல்லோ கடவுளின் மந்தையைத் திருடிச் சென்றார். பிறகு தம் வலிமையின் இதை அறிந்த அப்பல்லோ, எர்மெசை அழைத்துக் கொண்டு கடவுள் சியுசிடம் சென்று முறையிட்டார். ஆனால் சியுசு அவரைத் தண்டிக்கவில்லை. அவர் எர்மெசிடம் மந்தையைத் திரும்பி ஒப்படைத்து விடுமாறு கூறினார். பிறகு தன் தவறை உணர்ந்து வருந்திய எர்மெசு, அப்பல்லோவிடம் ஆமையின் முதுகைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு அழகிய யாழைப் பரிசளித்தார். இதனால் மகிழ்ந்த அப்பல்லோ, எர்மெசிடம் ஒரு தங்கக் கோலைக் கொடுத்து இனி தம் மந்தையை அவரே கவனித்துக் கொள்ளுமாறு கூறுகிறார். இவ்வாறு இருவரும் நண்பர்களாயினர்.

எர்மெசு மற்றும் எர்சி[தொகு]

ஏதென்சின் முதல் அரசனான கெக்ரோப்சுக்கு எர்சி, பன்ட்ரோசசு, அக்லோலயா என்ற மூன்று மகள்கள் இருந்தனர். இவர்களில் எர்சியின் மேல் எர்மெசு காமம் கொண்டு அவருடன் உறவாட நினைத்தார். ஒருநாள் அந்த மூன்று சகோதரிகளும் ஏதெனாவின் கோவிலிற்கு வந்து வழிபட்டனர். அவர்கள் ஏதெனாவிற்கு தங்கத்தைக் காணிக்கையாக அளித்தனர். அப்போது எர்மெசு அக்லோலசிடம் தாம் எர்சியுடன் உறவாட உதவும்படி வேண்டினார். அதற்குப் பதிலாக அக்லோலசு அவரிடம் தங்கம் தருமாறு கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்ட எர்மெசு அந்த சகோதரிகள் காணிக்கையாகக் கொடுத்த தங்கத்தையே திருடி அவளிடம் கொடுத்து விட்டார். அக்லோலசின் பேராசையை அறிந்த ஏதெனா அவருக்கு தண்டனை அளிக்க நினைத்தார். அவர் பொறாமைக் கடவுள் இன்விடியாவை அழைத்து எர்சி மேல் அக்லௌலசுக்கு பொறாமை ஏற்படுமாறு செய்தார். பிறகு எர்சியுடன் உறவாட வந்த எர்மிசை அக்லோலசு வழியிலேயே தடுத்து நிறுத்துகிறார். இதனால் கோபம் கொண்ட எர்மெசு அக்லோலசை கல்லாக மாற்றிவிடுகிறார். பிறகு அவர் எர்சியுடன் உறவாடினார். அதன் மூலம் செஃபெலசு பிறந்தான்.

வம்சாவளி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. According to எசியோடு's Theogony 507–509, Atlas' mother was the Oceanid Clymene, later accounts have the Oceanid Asia as his mother, see Apollodorus, 1.2.3.
  2. According to ஓமர், இலியட் 1.570–579, 14.338, Odyssey 8.312, Hephaestus was apparently the son of Hera and Zeus, see Gantz, p. 74.
  3. According to எசியோடு, Theogony 927–929, Hephaestus was produced by Hera alone, with no father, see Gantz, p. 74.
  4. According to எசியோடு's Theogony 886–890, of Zeus' children by his seven wives, Athena was the first to be conceived, but the last to be born; Zeus impregnated Metis then swallowed her, later Zeus himself gave birth to Athena "from his head", see Gantz, pp. 51–52, 83–84.
  5. According to எசியோடு, Theogony 183–200, Aphrodite was born from Uranus' severed genitals, see Gantz, pp. 99–100.
  6. According to ஓமர், Aphrodite was the daughter of Zeus (இலியட் 3.374, 20.105; Odyssey 8.308, 320) and Dione (இலியட் 5.370–71), see Gantz, pp. 99–100.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்மெசு&oldid=2915444" இலிருந்து மீள்விக்கப்பட்டது