உலோகப்போலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலோகப் போலிகள் (Metalloids) என்பன வேதியியலில் சில குறிப்பிட்ட வகைத் தனிமங்களைக் குறிக்கும். தனிமங்களை அவற்றின் இயற்பியல், வேதியியல் பண்புகளைப் பொறுத்து அவற்றை உலோகம் அல்லது அலோகம் எனப்பிரிக்கலாம். எனினும் சில தனிமங்கள் இரண்டும் கலந்த பண்புகளைப் பெற்றுள்ளன. இவை உலோகப்போலிகள் என்றழைக்கப்படுகின்றன.

போரான், சிலிக்கான், ஆர்சனிக், செர்மானியம், ஆண்டிமணி, டெல்லூரியம் முதலியன உலோகப்போலிகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோகப்போலி&oldid=1828880" இலிருந்து மீள்விக்கப்பட்டது