உமறு இப்னு அல்-கத்தாப் பள்ளிவாசல்

ஆள்கூறுகள்: 11°22′41″N 72°14′4″W / 11.37806°N 72.23444°W / 11.37806; -72.23444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒமார் இபன் அல்-கதாப் பள்ளிவாசல்
மைகாவிலுள்ள பளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மைகாவ், லா வகீரா, கொலொம்பியா
புவியியல் ஆள்கூறுகள்11°22′41″N 72°14′4″W / 11.37806°N 72.23444°W / 11.37806; -72.23444
சமயம்சுன்னி இசுலாம்

ஒமார் இபன் அல்-கதாப் பள்ளிவாசல் (Mosque of Omar Ibn Al-Khattab) கொலொம்பியாவின் லா வகீரா மாநிலத்தில் (உள்ளூர்: டிபார்ட்மென்ட்) மைகாவ் நகராட்சியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும். இலத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய பள்ளிவாசலாக இது விளங்குகின்றது. இந்த வலயத்தில் உள்ள ஒரே பள்ளிவாசல் என்பதால் உள்ளூரில் இதனை “லா மெசுகிட்டா” (“பள்ளிவாசல்”) என்றே அழைக்கின்றனர். இந்தப் பள்ளிவாசலும் தர் அலர்கான் பள்ளியும் இப்பகுதியில் இசுலாமிய சமயத்திற்கும் பண்பாட்டிற்கும் மையங்களாக விளங்குகின்றன. இந்தப் பள்ளிவாசல் 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று திறக்கப்பட்டது. [1] இரண்டாம் சுன்னி இசுலாம் கலீஃப் உமறு இப்னு அல்-கத்தாப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை ஈரானிய கட்டிடவடிவியலாளர் அலி நமாசி வடிவமைத்து, பொறியாளர் ஓசுவால்டோ விர்சைனோ பான்டால்வோவால் இத்தாலிய பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. இங்கு எளிதாக 1,000 நபர்கள் தொழ முடியும்.

உட்புறம்[தொகு]

நுழைவில் அராபிய எழுத்துகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய திறந்தவெளி கூடம் உள்ளது. உட்சென்றால் முந்தையதை விடப் பெரிய மற்றுமொரு கூடம் உள்ளது; இது ஆண்கள் தொழ பயன்படுத்தப்படுகின்றது. நோன்புக்காலங்களில் நோன்பு முடிகின்ற நேரத்தில் சந்திக்கின்ற இடமாகவும் இது உள்ளது. இந்தக் கூடத்தின் மாடத்தில் அழகாக செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. மெக்காவை நோக்கிய பெண்களுக்கான தொழுகைக் கூடமும் உள்ளது. இது ஆண்களின் தொழுகைக் கூடத்திற்கு மேலாக அமைந்துள்ளது. கட்டிடத்தின் மேற்பகுதியை மினார் கோபுரங்கள் சீர் செய்கின்றன.

பெரிய படிகளுக்கு கீழே இறந்தவர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்யும் வசதி கொண்ட அறை உள்ளது; சடங்குகளுக்குப் பிறகு உடல் உள்ளூர் இசுலாமியக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

இதனையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]