உன்னாவு மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°33′00″N 80°28′48″E / 26.55000°N 80.48000°E / 26.55000; 80.48000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உன்னாவு மாவட்டம்
उन्नाव ज़िला
اناو‏ ضلع
உன்னாவுமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்லக்னோ கோட்டம்
தலைமையகம்[[உன்னாவு]]
பரப்பு4,589 km2 (1,772 sq mi)
மக்கட்தொகை3,110,595 (2011)
மக்கள்தொகை அடர்த்தி682/km2 (1,770/sq mi)
படிப்பறிவு68.29%
பாலின விகிதம்0.901 /
வட்டங்கள்உன்னாவு
ஹசன்கஞ்சு
சபிபூர்
பூர்வா
பிகாபூர்
மக்களவைத்தொகுதிகள்உன்னாவு
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைஉன்னாவு
பூர்வா
பக்வந்த நகர்
மோகன்
சபீபூர்
பங்கர்மோ
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

உன்னாவு மாவட்டம் இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் உன்னாவு நகரில் உள்ளது. இது லக்னோ கோட்டத்திற்கு உட்பட்டது.

பொருளாதாரம்[தொகு]

இந்திய மாவட்டங்களில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வளர்ச்சி நிதி வழங்கப்படும். இந்த மாவட்டமும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[1]

பிரிவுகள்[தொகு]

இது உன்னாவு, ஹசன்கஞ்சு, சபிபூர், பூர்வா, பிகாபூர் ஆகிய வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது பதினாறு மண்டலங்களைக் கொண்டது. அவை: கஞ்சு மொராடஹபாத், பங்கர்மோ, பத்தேபூர், சௌராசி, சபீபூர், மியான்கஞ்சு, ஔராஸ், ஹசன்கஞ்சு, நவாப்கஞ்சு, பூர்வா, அசோகா, ஹிலாவுலி, பிகாபூர், சுமேர்பூர், பிசியா, சிக்கந்தர்பூர் சிரௌசி, சிக்கந்தர்பூர் கரன்.

மக்கள்தொகை[தொகு]

2011 ஆம் கணக்கெடுப்பின்போது, 3,110,595 மக்கள் வாழ்ந்தனர்.[2]

சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 682 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.[2] ஆயிரம் ஆண்களுக்கு 901 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[2] இங்கு வாழ்பவர்களில் 68.29% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]

மொழிகள்[தொகு]

இங்குள்ள மக்கள் அவாதி மொழியைப் பேசுகின்றனர். இந்த மொழியை 380 லட்சம் பேர் பேசுகின்றனர்.[3]

சான்றுகள்[தொகு]

  1. Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
  3. "Awadhi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 28 September 2011. 

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னாவு_மாவட்டம்&oldid=3928016" இலிருந்து மீள்விக்கப்பட்டது