உதவி:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பக்கம் பழைய மென்பொருள் பதிப்பிற்கானது, இருப்பினும் அவ்வப்போது மேம்படுத்தப்படும்.

தற்கால செயல்களுக்கு மெடாமீடியாவில் இப்பக்கத்தின் பதிப்பைப் பார்க்கவும்.


நீங்கள் கண்ட அல்லது ஆக்கிய பக்கத்தை மறுபெயரிட பல காரணங்கள் இருக்கலாம்:

  • தலைப்பு பிழையுடன் காணப்படலாம்.
  • தலைப்பு விக்கியின் நடைகையேடு வழிகாட்டுதல்களை கொள்ளாதிருக்கலாம்.
  • கட்டுரையின் உள்ளடக்கம் விரிவாக்கப்பட்டோ,குறைக்கப்பட்டோ பொருள் மாறியிருக்கலாம்.

இங்கு "மறுபெயரிடல்" மற்றும் "நகர்த்துதல்" ஒரே செயலைக் குறிக்கும். அவை ஒரே செயலை இரு கோணங்களில் காண்கின்றன:

  • மறுபெயரிடல்: பக்கத்தை மாற்றாது பெயரை மட்டும் மாற்றுவது; பக்க வரலாறு இப்போது புதுப் பெயருடன் இணைந்துள்ளது. ஓர் புதிய பக்கம் பழைய பெயருடன் உருவாக்கப்பட்டு புதிய பெயருக்கு வழிமாற்றத்தைக் கொடுக்கிறது. அதன் பக்கவரலாற்றில் மறுபெயரிட்ட பதிகை பதிவாகிறது.
  • நகர்த்துதல்: ஓர் புதிய பக்கத்திற்கு பக்க உள்ளடக்கத்தையும் பக்க வரலாற்றையும் நகர்த்துகிறது. பழைய பக்கத்தை ஓர் வழிமாற்றுப் பக்கமாக மாற்றுகிறது. அதன் பக்க வரலாற்றில் மறுபெயரிட்ட பதிகையை மட்டும் விட்டு வைக்குமாறு மாற்றுகிறது.

கட்டக அமைப்பு பழைய பெயருள்ள பக்கத்தை புதிய பக்கமாகக் குறிப்பதால் முதல் மாதிரியைப் பின்பற்றுகிறது. இதனால் பக்க வரலாறு "மாற்றப்படுவதில்லை". ஒரே குறைபாடாக பக்க வரலாற்றில் முக்கிய நிகழ்வான பெயர்மாற்றப் பதிகை பதிவாவதில்லை.மறைமுகமாக பக்க வழிமாற்றுப் பக்கத்தில் பதிவு செய்யப்படுகிறது.

புதியது: தற்போதைய மென்பொருள் பதிப்பில் இரண்டு பக்கங்களிலும் பக்க நகர்த்தல் பதிகை பதிவு செய்யப்படுகிறது.

எல்லாப் பெயர்வெளிகளிலும் "நகர்த்துக" இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தாலும், படிமம் அல்லது பகுப்பு பெயர்வெளியில் உள்ளப் பக்கங்களை நகர்த்த முடியாது. ஓர் படிமத்தின் பெயரை மாற்றவேண்டுமென்றால் திரும்பவும் படிமத்தைத் தரவேற்றி படிம விவரங்களை நகலாக்க வேண்டும். பகுப்பு ஒன்றின் பெயரை மாற்ற அனைத்து பக்கங்களிலும் கொடுக்கப்பட்டுள்ள பகுப்புப் பெயரை மாற்றி தொகுக்ககூடிய உரையை வெட்டி ஒட்ட வேண்டும்.

எவ்வாறு[தொகு]

இச்செயலாற்றத்திற்கு நீங்கள் புகுபதிகை செய்திருக்க வேண்டும். உங்கள் பயனர் விருப்பத்தேர்வுகளில் :

  1. நோஸ்டால்ஜியா தோற்றவடிவில் (ஸ்கின்) இதற்கான பொத்தான் இல்லை;
  2. குயிக்பாரில் இதற்கான பொத்தான் உள்ளது, அது செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

நகர்த்த வேண்டிய பக்கத்திற்குச் சென்று அதில் பக்கத்தின் மேல்புறத்தில் உள்ள "நகர்த்துக" கீற்றை சொடுக்கவும். எதிர்வரும் படிவத்தில் நகர்த்தப்பட வேண்டிய புதிய பெயர், வழிமாற்றுப் பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டுமா போன்ற கேள்விகளுக்கு தகுந்த பதிலைக் கொடுக்கவும். உங்களுக்கு குழப்பங்கள் இருந்தால் விருப்பத்தேர்வு கட்டங்களில் "ஆம் "என்று விடுவதே சிறந்தது. பதில்களுடன் படிவத்தில் உள்ள "நகர்த்து" சொடுக்கியவுடன் புதிய தலைப்பிற்கு பக்கம் நகர்த்தப்படும். பழையத் தலைப்பு பக்கத்தில் இந்தப் பக்கத்திற்கான ஓர் வழிமாற்றை விட்டிருக்கும். எவரேனும் பழைய தலைப்பில் தேடினாலும் அல்லது ஏதாவது உள்ளிணைப்பு பழைய தலைப்பிற்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் இந்த வழிமாற்று மூலம் புதிய தலைப்பிலுள்ளப் பக்கத்திற்கு செல்வர்.

விரிவான செயலாக்க விளக்கத்திற்கு உதவிப் பக்கத்தை பார்க்கவும்.

ஆனால் இரட்டை வழிமாற்றுகள் (பழையத்தலைப்பிற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமாற்றுகள்) தானாகவே புதிய பக்கத்தை வந்தடையா என்பதை நினைவில் கொள்க. அவை மனிதமுயற்சியால் திருத்தப்பட வேண்டும்.

பக்க வரலாறுகள்[தொகு]

"பக்க நகர்த்தல்" செயலாக்கம் பக்கத்தின் வரலாற்றை, நகர்த்தலின் முன்னரும் பின்னரும், ஒரே இடத்தில் அந்தப் பக்கம் முதலிலிருந்தே அந்தப் பெயருடன் இருந்ததைப் போன்று, பராமரிக்கிறது. ஆகவே ஓர் பக்கத்தினை அதிலுள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் வெட்டி புதிய பக்கத்தில் ஒட்டி நகர்த்தக்கூடாது. அவ்வாறு செய்வதன் மூலம் பழைய மாற்றங்கள், குறிப்புகள் மற்றும் பங்களித்தவர்களைக் குறித்தத் தரவுகளை பதிந்து வைப்பது கடினமான செய்கையாகும். (சில நேரங்களில் நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டி வரலாம்... காட்டாக ஓர் பெரிய கட்டுரையை ஒன்றிற்கு மேற்பட்ட சிறு கட்டுரைகளாகப் பிரிக்கும்போது. அவ்வாறு செய்ய நேர்ந்தால் தயவுசெய்து புதிய பக்கத்தின் தொகுப்பு சுருக்கத்திலும் பேச்சுப் பக்கத்திலும் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடவும்.)

வார்ப்புருப்பக்கத்தை நகர்த்தல்[தொகு]

கட்டுரைப் பக்கத்தைப் போலல்லாமல் வார்ப்புருப் பக்கத்தை நகர்த்தும் போது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் வார்ப்புருப் பக்கத்தில் ஏற்படும் வழுவானது அதனுடன் தொடர்புடைய அத்தனைப் பக்கங்களிலும் வெளிப்படும். நுட்பாரீதியான தற்காப்பாக, சிக்கலான வார்ப்புருக்களில் பெரும்பாலும் ஆங்கிலவிக்கித் தலைப்பே பரிந்துரைக்கப்படுகிறது. இருந்தும் வார்ப்புருப் பக்க நகர்த்தலின் போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் கீழுள்ளன.

  1. வார்ப்புருப் பக்கத்தின் துணைப் பக்கங்கள் அனைத்தையும் கவனித்து வேண்டியவற்றின் நகர்த்தலை உறுதிசெய்ய வேண்டும். அலவு என்ற தலைப்பை அளவு என்று மாற்றவேண்டின் "வார்ப்புரு:அலவு, வார்ப்புரு:அலவு/மீட்டர், வார்ப்புரு:அலவு/கிலோ" என்று பக்கங்கள் இருந்தால் "வார்ப்புரு:அளவு, வார்ப்புரு:அளவு/மீட்டர், வார்ப்புரு:அளவு/கிலோ" என்று மாற்ற வேண்டும்.
  2. பெரும்பாலான வார்ப்புருக்களில் (குறிப்பாக தகவற்சட்டம்) இரட்டை வழிமாற்றிகள் வேலை செய்வதில்லை. அதனால் வார்ப்புருப் பக்கத்தில் உள்ள அனைத்து வழிமாற்றிகளையும் புதிய தலைப்பை நோக்கித் திருப்பிவிட வேண்டும். இத்தகவல்களை இடப்பக்கக் கருவிப்பெட்டியிலுள்ள "பக்கத் தகவல்" என்ற சுட்டியின் மூலமும் அறிந்து கொள்ளலாம். உதாரணம்:units என்ற வார்ப்புருவை அளவு என்று மாற்றவேண்டின் வார்ப்புரு:unit என்ற பக்கம் வார்ப்புரு:units என்று வழிமாற்றினால் வார்ப்புரு:unit பக்கத்தை வார்ப்புரு:அளவு என்பதற்குத் திருத்த வேண்டும்.
  3. மாற்ற விரும்பும் தலைப்பு ஏதேனும் வார்ப்புருவில் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த வார்ப்புருவையும் திருத்த வேண்டும். இத்தகவல்களை இடப்பக்கக் கருவிப்பெட்டியிலுள்ள "இப்பக்கத்தை இணைத்தவை" என்ற சுட்டியின் மூலமும் அறிந்து கொள்ளலாம். உதாரணம்:color என்ற வார்ப்புருவை நிறம் என்று மாற்றவேண்டின் color வார்ப்புரு ஏதேனும் வார்ப்புருவினுள் நிரலாக எழுதப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும், அவ்வாறுயிருந்தால் அதனை நிறம் எனத் திருத்த வேண்டும். இல்லாவிட்டால் இரட்டை வழிமாற்றியாகக் கொண்டு செயலிழக்கும்.
  4. இறுதியாக வார்ப்புரு பயன்படுத்தப்பட்ட பக்கங்களில் ஏதேனும் தகவல் சிதைப்பு இல்லை என்று உறுதிசெய்துகொள்வது சிறப்பு

வழிமாற்றுப்பக்கத்தை நகர்த்துவது[தொகு]

புதிய தலைப்பு ஏற்கெனவே இருந்து பழைய தலைப்பிற்கு வழிமாற்று மட்டுமே அதன் பக்க வரலாற்றில் இருந்தால் அந்தப் பக்கத்தின் பெயரை மாற்ற முடியும். இத்தகைய நிலை பக்கத்தின் தலைப்பை முதலிலிருந்த பெயருக்கே மாற்றுவதாக இருந்தால் ஏற்படும். இங்கு குறிப்பிட்டுள்ளபடி, தானாக உருவாக்கப்பட்ட வழிமாற்று தொகுக்கப்படாது இருந்தாலே இது நடக்கும். அவ்வாறு தலைப்பை மீட்கும்போது இரு நகர்த்தல் பதிகைகள் நடந்ததை காட்டாமல் பக்க வரலாற்றை பராமரிக்கும். முதல் நகர்த்தலை நிகழ்த்திய பயனர் பெயர், பதிகை நேரம் மற்றும் நாள் தரவுகள் தொலைக்கப்படும். அவை எந்த பக்க வரலாற்றிலும், கவனிப்புப் பட்டியலிலும் அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் அல்லது பயனர் பங்களிப்புப் பக்கங்களிலும் கூட கிடைக்காது. மிக அண்மையில் நடைபெற்றிருந்து, தொகுப்பு எண்ணிக்கைகள் குறைவாக இருந்தால் மட்டுமே அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் காண முடியும். 2000 தொகுப்பு பதிகைகளே மீட்க முடியும்;அவை ஒருநாளும் எடுக்கலாம் அல்லது ஓரிரு மணிகளிலும் மீறப்படலாம். இதனைத் தவிர்க்க குறிப்பிட்ட தொகுப்பு வரியை நகலெடுத்து பேச்சுப் பக்கத்தில் இட்டு வையுங்கள். இது இரண்டாவது நகர்த்தலை செய்யும் முன்னர் செயலாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு முன்னும் பின்னும் பலமுறை நகர்த்தலாம், ஒவ்வொரு முறையும் பக்க வரலாறு தகர்த்தலைக் காட்டாது நடப்புத் தலைப்பில் பராமரிக்கப்பட்டு முந்தையத் தலைப்பில் அண்மைய நகர்த்தலை மட்டும் காட்டுமாறு நிகழும். பேச்சுப்பக்கங்களில் ஆவணப்படுத்தப்படாவிடில், நகர்த்தல் போட்டி நடந்த அறிகுறியே இருக்காது.

பிற குறிப்புகள்[தொகு]

புதிய தலைப்பில் ஏற்கெனவே பக்கம் இருந்து அது முன்பு குறிப்பிட்டதுபோல வெறும் வழிமாற்றினை மட்டும் கொண்டிராது இருப்பின், நீங்கள் பெயரை நகர்த்த முடியாது என்ற அறிவிப்பினைப் பெறுவீர்கள். நீங்கள் இரண்டு பக்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் ;அல்லது பயனுள்ள உள்ளடக்கம் எதுவும் இல்லாத நேரத்தில் புதிய தலைப்பில் உள்ள பக்கத்தை நீக்குமாறு நிர்வாகிக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்; அல்லது நீக்கப்படவேண்டிய பக்கங்கள் பக்கத்தில் பட்டியலிடலாம். பக்கத்தை நீக்கியபிறகு அந்தப் பெயருக்கு பழைய கட்டுரையை நகர்த்தலாம்.

மேலும் வழிமாற்று பக்கத்திற்கு வழிமாற்று தானாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் சுற்றிச்சுற்றி வழிமாற்றுகள் அமைவதும் இணைப்புப் பின்னல்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகின்றன. அந்தப் பக்கத்திற்குரிய இந்தப் பக்கத்தை இணைத்தவை இணைப்பில் சரி பார்க்கவும்.

ஒரு பக்கத்தின் பேச்சுப்பக்கம் தொகுக்கப்படும்போது பக்கத்தை நகர்த்தாதீர்கள். அவ்வாறு செய்தால் தொகுத்தலின் முடிவில் சேமி பொத்தானை சொடுக்கும்போது புதிய தொகுப்புகள் பழைய தலைப்பிலுள்ளப் பக்கத்திற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

"பக்கம்... நகர்த்தப்பட்டது ..." செய்தியை நகலெடுத்து புதிய பேச்சுப்பக்கத்தில் இடுவது நன்னெறியாகும்.

ஓர் பக்கம் நகர்த்தல்களிலிருந்து காக்கப்பட்டிருந்தால், "நகர்த்துக" இணைப்பு கிடைக்காது. அந்த நேரங்களில் நீங்கள் ஓர் நிர்வாகியை நகர்த்திட வேண்டலாம், அல்லத் பக்க உள்ளடக்கத்தை நகலெடுத்து புதிய பக்கத்தில் ஒட்டி பழைய பக்கத்திற்கு வழிமாற்றுக் கொடுக்கலாம். ஆனால் இது விரும்பப்படுவதில்லை.அத்தகைய கோரிக்கைகளை விக்கிப்பீடியா:நகர்த்தல் கோரிக்கைகள் பக்கத்தில் பட்டியலிடலாம்.

தொகுத்தலிலிரிந்து காக்கப்பட்டப் பக்கங்கள் நகர்த்தலிலிருந்தும் காக்கப்பட்டவை.

நகர்த்தலை மீட்டல்[தொகு]

பொதுவாக, பக்கம் யிலிருந்து பக்கம் நகர்த்தியதை மீட்டிட:

  1. பக்கம் வை மீண்டும் பக்கம் விற்கு நகர்த்துக
  2. பக்கம் வை (இப்போது வரலாறு ஏதுமில்லாத வழிமாற்றுப்பக்கம்) "நீக்கவேண்டியப் பக்கங்கள்" திட்டப்பக்கத்தில் பட்டியலிடுங்கள்.அல்லது (நிர்வாகிகளுக்கு மட்டும்) பக்கத்தை நீக்கிவிடுங்கள்.

எந்தப்பக்கத்தை நகர்த்துகிறோமோ அந்தப் பக்கத்திற்கு வழிமாற்று வழிகாட்டவேண்டும் என்று மென்பொருள் எதிர்பார்க்கிறது. யாராவது பக்கம் வை பக்கம் க்கும் பின்னர் வை பக்கம் க்கும் நகர்த்தியிருந்தால், இவ்வாறு செய்ய வேண்டும்:

  1. பக்கம் யை பக்கம் விற்கு நகர்த்தவும்
  2. பக்கம் வை பக்கம் விற்கு நகர்த்தவும்

இது வேலை செய்யாது: பக்கம் யை பக்கம் விற்கு நேரடியாக நகர்த்துதல்.

பக்கம் பின்னர் தொகுக்கப்பட்டிருந்தாலோ, அல்லது நகர்த்தும் மென்பொருள் விரும்பியபடி வேலை செய்யாவிடினோ நிர்வாகி ஒருவர்தான் சரி செய்ய முடியும்:

  1. பக்கம் வை நீக்கவும் (பயனுள்ள வரலாறு எதுவும் இல்லையென உறுதி செய்துகொள்ளுங்கள் - இல்லையெனில் பேச்சுப்பக்கத்தில் வெளிப்படையான பங்களிப்பாளர் குறிப்பு வழங்கவேண்டும்.
  2. பக்கம் வை பக்கம் க்கு நகர்த்து.
  3. பக்கம் வை இப்போது நீக்கு (வேறு வரலாறு இன்றி பக்கம் விற்கான வழிமாற்று மட்டுமே இருக்க வேண்டும்)

"நகர்த்தல் போட்டிகள்" தேவையற்ற பல வழிமாற்றுப் பக்கங்களை விட்டுச் செல்லும்...இவற்றை பின்னாளில் யாரேனும் ஓர் அப்பாவி சரிசெய்ய வேண்டியிருக்கும்.

இரு பக்கங்களை ஒன்றுகொன்று மாற்றுதல்[தொகு]

பக்கம் வையும் பக்கம் வையும் அவற்றின் வரலாற்றுடன் ஒன்றுக்கொன்று மாற்றிட:

  1. பக்கம் வை பக்கம் க்கு நகர்த்தவும் (இதுவரையில்லாத பக்கம்)
  2. பக்கம் வை நீக்க வேண்டிய பக்கங்களில் பட்டியலிடு அல்லது நீக்கு.
  3. பக்கம் வை பக்கம் விற்கு நகர்த்து ( நீக்கப்பட்டதால் முடியும்)
  4. பக்கம் வை முன்னர் சொன்னதுபோல நீக்கு
  5. பக்கம் யை பக்கம் விற்கு நகர்த்து ( நீக்கப்பட்டதால் முடியும்)
  6. யை முன்னர் சொன்னதுபோல நீக்கு

வெட்டி ஒட்டல் நகர்தல்களை சரிசெய்வது[தொகு]

நகர்த்தல் மென்பொருளை விக்கிப்பீடியா உருவாக்குனர்கள் அறிமுகப்படுத்தும் முன்னர் பல கட்டுரைகளின் தலைப்புகளை மறுபெயரிடுவது வழக்கமாக இருந்தது. இப்போதும் இந்த பயன்பாட்டை அறியாத பயனர்கள் இவ்வாறு செய்கிறார்கள். இதனால் பக்க வரலாறும் பேச்சுப்பக்க உரையாடல்களும் வெவ்வேறு கட்டுரைகளில் பிரித்துக் காணப்படும்.

சில நேரங்களில் இவற்றை நிர்வாகிகள் பக்க வரலாற்றை இணைத்து சரி செய்ய முடியும்.

எச்சரிக்கை: இந்தச் செய்கையை ஓர் உருவாக்குனரால் மட்டுமே பலமணித்துளிகள் பணிசெய்து சீர் செய்ய முடியும் : இந்த இணைப்பை நீக்க ஒவ்வொரு பதிப்பும் சரியான மூலப் பக்கத்துடன் ஒருங்கிணைக்கப்படவேண்டும். நீங்கள் செய்வதில் ஏதேனும் ஐயமிருந்தால் இந்தச் செயல்பாட்டைத் தவிருங்கள்.

பக்க வரலாற்றை இணைப்பதற்கான வழிமுறை:

  1. இரோம பேரரசு (பழைய தலைப்பு)என்ற பக்கத்தின் வரலாற்றை ரோமப் பேரரசு (புதிய தலைப்பு)பக்கத்துடன் இணைக்க விரும்பினால்:
  2. பக்க வரலாற்றை இணைக்க நீக்கப்படுகிறது - மீளவும் காணலாம் என்ற தொகுப்புச் சுருக்கவுரையை இட்டு ரோமப் பேரரசுபக்கத்தை நீக்கவும், .
  3. இரோம பேரரசு பக்கத்தை ரோமப் பேரரசு பக்கத்திற்கு நகர்த்து.
  4. ரோமப் பேரரசு கட்டுரையை இப்போது மீட்டெடு.
  5. ரோமப் பேரரசு பக்கத்தில் மிக அண்மையான பதிப்பை மீளமை.

இவற்றையும் பார்க்க[தொகு]