உணவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணவைச் சமைத்து உண்ண வசதி செய்யும் வணிகம் உணவகம் ஆகும். விரும்பிய உணவை கேட்டு இருந்து சாப்பிட்டு செல்லுமிடங்களையே உணவகம் என்று குறிப்பிட்டாலும், பல உணவகங்களில் சமைத்து உணவை கட்டி எடுத்து செல்லவும் முடியும். சமைத்த உணவு விநியோயகத்தையும் பல உணவகங்கள் செய்கின்றன.[1][2][3]

புகலிடத் ஈழத்தமிழரும் உணவகங்களும்[தொகு]

பல வேறு வேலைகள் செய்த ஈழத்தமிழர் 1983 பின்னர் பெருந்தொகையாக மேற்குநாடுகளுக்குப் புகலிடம் சென்றனர். இவ்வாறு சென்றவர்கள் பலருக்கு தமது முன்னைய தொழிற்துறைகளில் வேலை பெற வாய்ப்புக்கள் அவ்வளவு கிட்டவில்லை. கல்வித்தகமை, வேற்று நாட்டு அனுபவங்கள் சென்ற இடங்களில் தகுந்தவாறு பொருட்படுத்தப்படவில்லை. மேலும், பலர் சொத்துக்களை இழந்து புகலிடம் செற்றதால் பண வளமும் அற்று இருந்தார்கள்.

குறைந்த சம்பளமும் கடின உடலுழைப்பும் தேவைப்பட்ட வேலைகளை வசதி படைத்த மேற்குநாட்டினர் அவ்வளவு நாடுவதில்லை. இதனால் ஒப்பீட்டளவில் உணவகங்களில் வேலை செய்ய தமிழர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைத்தன. இதனால் பல உணவகங்களில் தமது வேலையைத் தொடங்கினார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Definition of RESTAURANT". Merriam-Webster.
  2. "Restaurant". Lexico.com. Archived from the original on November 12, 2020.
  3. "Conjugaison de restaurer - WordReference.com". wordreference.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவகம்&oldid=3769101" இலிருந்து மீள்விக்கப்பட்டது