ஈஜிப்டோசோரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈஜிப்டோசோரஸ்
புதைப்படிவ காலம்:நடு கிரீத்தேசியக் காலம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
தரப்படுத்தப்படாத:
பேரினம்:
ஈஜிப்டோசோரஸ்

இனங்கள்

ஆ. பகாரிஜென்சிஸ் ஸ்ட்ரோமர், 1932 (வகை)

ஈஜிப்டோசோரஸ் (உச்சரிப்பு /iːˌdʒɪptəˈsɔrəs/ பொருள்: 'எகிப்தின் பல்லி') என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம் ஆகும். இந்த நாலுகாலி சோரோப்போட் ஒரு தாவர உண்ணி ஆகும். இதன் புதைபடிவங்கள் எகிப்து, நைகர் மற்றும் பல சகாரா பாலைவனப் பகுதிகளில் காண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அறியப்பட்ட எல்லா எடுத்துக் காட்டுகளும் 1939 ஆம் ஆண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டவை. புதைபடிவங்கள் ஒன்றான மியூனிச் நகரில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், 1944 இல் இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகளின் குண்டு வீச்சினால் இது வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகம் அழிந்தபோது இப் புதைபடிவங்களும் காணாமல் போய்விட்டன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஜிப்டோசோரஸ்&oldid=2741920" இலிருந்து மீள்விக்கப்பட்டது